புதன், 23 அக்டோபர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-3)

முதல் பகுதி படிக்க
இரண்டாம் பகுதி படிக்க

நீண்ட இடைவெளியாகிவிட்டதிற்கு மன்னிக்கவும். ஆபிசில் ஆணியும் ஜாஸ்தி, வீட்டில் அடியும் ஜாஸ்தி... மிடில.... இப்பகுதியை தொடங்கும்முன், என்னை மீண்டும் எழுதத் தூண்டிய நம்ம தல ஹாலிவுட் பாலா அவர்களுக்கும் மன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நீ எழுதலைன்னு எவன் கேட்டான் என்று கும்ம விரும்புவர்கள், இவர்களை அழைக்கலாம் :) இனி விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்,ஆல் நட்பூஸ். முந்தய பகுதியை படித்துவிட்டு தொடருங்கள் :)

’டொமேட்டோ நாசிக்கந்தர்’ ஹோட்டலின் சிறப்பு ’ரொட்டி டிஸ்யூ’ என்ற ஐட்டம். நம்ம வீச்சு புரோட்டாவை அப்பளம் கணக்காக செய்து, நம்ம ஊர்ல ரோஸ்ட் கொடுப்பாங்கல அதுபோல கூம்பு (cone) வடிவாகச் சுற்றி, அதன் மேல் சர்க்கரை பாகு ஊற்றித் தருகிறார்கள்.. இங்கு வரும் எல்லா வெளிநாட்டவர்களும் சாப்பிடும் முதல் ஐட்டம் இதுவாகத்தான் இருந்தது. எவரைப் பார்த்தாலும் இதுதான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதன்காரணமாகவே அவிங்க டேபிலில் இருக்கும் ஐட்டம் எனக்கும் ஒன்னு வேணும் என ஆர்டர் செய்தேன். சுவை வித்தியாசமா இருக்கும்... செம்ம Crispy. செம்ம டேஸ்ட். எதுவுமே விரும்பி சாப்பிடாத யோகவ், சத்தமே இல்லாமல் உண்டான். இதன் சுவைக்கு  அதுவே சான்று.

Roti Tissue
ஒரு சிறிய தகவல் - அடுத்த நாள் பயணத் திட்டமாக Island Hopping Tour மற்றும் பைக்கில் பிற இடங்களைக் காண என முடிவு செய்தோம். நாங்கள் ஹோட்டலில் சாப்பிடும்போதே 'Island Hopping Tour'க்காக முன்பதிவு செய்துக்கொண்டோம். இங்கு வேலை பார்க்கும் சர்வர்களின் சைட் பிசினஸ், சாப்பிட வரும் டூரிஸ்ட்களுக்கு சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்வதே. (அதாவது நம்மளை ஏதாவது ஒரு டூரிஸ்ட் ஆப்பரேட்டர்களிடம் கோர்த்து விடுவது.) ஒரு ஆளுக்கு 30 வெள்ளி என Sharing Basis ல் பேரம் பேசி முடிவானது.

வகுரு நிரம்பியவுடன், மனதில் தெம்பு தானாகவே கூட மீண்டும் ஒரு சிறிய ரைட், இம்முறை புத்திசாலித்தனமாக தெரு விளக்கின் வெளிச்சம் இருக்கும் வரை மட்டும் வண்டியை விட்டோம். அருகில் ஒரு ஷாப்பிங் மாலை கண்டவுடன் அதில் உள்ளே சென்று ஒரு நோட்டம் பார்க்க சென்றோம். வியக்கும் விதமாக பெரிதாக ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் மாலே இல்லை, ஒரு சிறிய காம்பிலக்‌ஷ் என்று தான் சொல்ல வேண்டும். இதை ஊரின் பெரிய மால் என்று வேறு தகவல் சொன்னார்கள். :) :) :)


இப்படியே மணி இரவு பத்தை தாண்ட, பயணக் களைப்பு ஒருபுறமும், அடுத்த நாள் காலை 7 மணிக்கே வண்டி வரும் என்ற எண்ணமும் திகில் கிளப்ப நடையை கட்டினோம் ஹோட்டலுக்கு. சிறிது நேரத்திலேயே என் மனைவியும் குழந்தையும் நல்லா தூங்கிட்டாங்க. எனக்கு அவ்வளவு களைப்பிலும் தூக்கமே இல்ல. காரணம், தங்கியிருந்த ரூமும், பைக்கும்.
இது ரிசார்ட் போல இருப்பதால், பைக்கை வீட்டின் முன்பே நிறுத்திக்கொண்டேன்.

(முன்குறிப்பு - நான் மலேசியா செல்கிறேன் என்றவுடன் என் நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு மலேசியா திகில் திருட்டுக் கதை சொன்னார்கள். ரொம்ப ஜாக்கிரதை, ரோட்டிலேயே திருட்டு கும்பல் ஜாஸ்தி, நடைபாதையில் நடக்கும்போதே மிரட்டி பணம் பறிப்பார்கள் எனவும், உடைமைகள் அனைத்தின் மேல் அதீத கவனம் தேவை எனவும் பலவாறு எச்சரிக்கைகள். போதாக்குறைக்கு மலேசியாவில் சந்தித்த தமிழும் தன் பங்கிற்கு ரெண்டு எச்சரிக்கை ஏவுகணைகள் வீசினார். அதுவரை, நான் ஏற்கனவே சென்ற இடம் என்ற மமதையில் அப்படி ஒன்னும் இருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். இப்பத்தான் ஜர்க்கானேன், மலேசியா குடிமகனே இப்படி சொல்கிறாரே என்று.)

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி தூக்கம் வரும். நம்ம வாடகை வண்டி வேற அநாதையா வாசலில் இருக்கு. திருட்டு போயிடுமோ? நம்ம ரூமை யாராவது களவாட வந்தால் என்ன செய்வது, ரூமில் இண்டர்காமும் இல்லை. இந்த ரிசார்ட் வேற விலாசமா இருக்கே !!! அவசரத்துக்கு யாரை கூப்பிட....!!! ச்சே, ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கலாம் என என்னை நானே நொந்துக் கொண்டேன். இதன் காரணமாவே தூக்கம் வெகுநேரம் வரவில்லை. தூங்கிய சிறிதுநேரமும், வெடுக் வெடுக்கென்று முழித்து ஜன்னல் வழியா வண்டியையும், யாராவது நடமாட்டம் இருக்கிறதா? என்றும் பார்த்துக்கொள்வேன்.

ஐலேண்ட் ஹோப்பிங் டூர் என்பது, லங்காவியை சுற்றியுள்ள சின்னஞ்சிறு தீவுகளை சுற்றிப் பார்ப்பது, மொத்தம் 5 மணி நேரம். காலை 8 மணிக்கெல்லாம் மோட்டார் படகு கிளம்பிவிடும், ஆகையால் 7.15 மணிக்கு வண்டி பிக்-அப் என்றான் அந்த ஆர்கனைசராக மாறிப்போன சர்வர் :)

விடியற்காலை எழுந்து தயாராகிவிட்டு, யோகவை எழுப்பினால் அசரவில்லை. அவனை உலுக்கியெடுத்து, எல்லோரும் ஒருவழியாக   யூத்தாகி டொமேட்டோ நாசிக்கந்தர் முன்பு பிக்-அப் வண்டிக்காக Punctuality புலியாக 7.00 மணிக்கே போய் நின்றோம். படிக்கும் காலத்தில் கூட இவ்வளவு ஷார்பாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்றது இல்லை, அவ்வளவு ஏன்?, துபாயில் ஒரு நாள் கூட வேலைக்கு காலை 8 மணிக்கு முன்பாக ஆஜரானதில்லை. அம்புட்டு ஆர்வம்.

யோகவின் சோர்வை நீக்க ப்ரட் ஆம்லேட் ஊட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று அருகில் இருக்கும் கடையில் நுழைந்தோம். மிகுந்த சோர்வில் எதுவும் உண்ணாமல், தண்ணிர் மட்டும் போதும் என்று பிடிவாதமாக நின்றான். எங்களுக்கு இப்பவே பீதியானது. முதல் நாளே பையன் இப்படி சுருண்டுட்டான் என்று. இனி, எப்படி மீதி 11 நாட்களை கடத்துவது, எல்லாம் Collapse என்று பல்வேறு சிந்தனை.

சுமார் 8.30 மணிக்கு தான் பிக்-அப் வேன் எங்களை அழைத்துக்கொண்டு ஹார்பருக்கு சென்றது. அங்கு எங்க சகப்பயணியாக, சவுதியில் பணிபுரியும் ஒரு மலையாள தம்பதியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும், ஒரு மலேசிய தமிழ் ஹனிமூன் தம்பதியினரும் இணைந்தார்கள்.

 நம் சட்டையில் ஒட்டிக்கொள்ள எல்லோருக்கும் தலா ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார்கள், எதற்கென்றால் படகு ஓட்டுபவர்  நம்மை அடையாளம் கண்டுக் கொள்ளவாம். படகு ஏறியவுடன் தானாகவே ஒரு விதமான சந்தோசம் ஆட்கொள்கிறது. படகு வேகத்தில் செல்ல செல்ல பச்சை நிறமும் ப்ளு நிறமும் கலந்த கடல்நீரும், குளிர்காற்றும், தெறிக்கும் கடல்நீரும் மனதை குதூகல ஆட்டம் போட வைக்கிறது. இரண்டு நாள் தூக்கமின்மையாலும், பயண சோர்வாலும் யோகவ் மிகவும் சோர்ந்து எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தான்.


கடலின் நடுவே சின்னஞ்சிறு குன்றுகள் போல பசுமையான மரங்கள் நிறைந்த காடும், கடலும் ரம்மியமாக காணக்கிடைத்தன. படகு ஓட்டுபவரே டூரிஸ்ட் கைடாக டவுள் ஆக்ட். மோட்டார் படகுப் பயணம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் படகை நிறுத்தி ஒரு மலைக்குன்றை காண்பித்து Pregnant Island என்று கூறினார். என்னவென்றே புரியாமல் மீண்டும் உற்று நோக்கினால், அந்த மலை மேடுகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்த நிலையில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது.


கூகுலாண்டவர் உதவியால், உங்க பார்வைக்கு
அடுத்து பயணித்தது Dayang Bunting Geoforest Park என்ற இடத்திற்கு. இதன் சிறப்பம்சம், கடல் நடுவே இயற்கையாக உருவான மிகப்பெரிய குளம். பல ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் இருந்த சுண்ணாம்பு கற்கள் நிறைந்த குகை வெடித்து சிதறியதால்  உருவான குளம் என கூறினார் என்னுடன் வந்த மலேசிய தமிழர். மேலும் இக்குளத்தை lake of the Pregnant Maiden' என்றும் அறியப்படுகிறது என விவரித்தார். ஒரு பழங்கதையும் உண்டாம். இக்குளத்தில் குளித்தால், விரைவில் கர்ப்பமாவோம் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அறிந்தேன். :) :) :)

நிறைய படத்தில் பார்த்த இடம் (Dayang Bunting Geoforest Park)
இத்தீவிற்குள் படகு நின்றவுடன், ஒரு மணி நேரத்தில் திரும்ப வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு. படகு கரை ஒதுங்கும் போதே, எங்களை வரவேற்ற முதல் வேற யாரு? நம்ம குரங்குகள் தான். குரங்குகளின் சேட்டை முன்பே அறிவேன், ஆதலால் பிளாஸ்டிக் பொருள், கவர் எதுவும் இல்லாத வண்ணம் பயணப்படக் கூறியிருந்தேன் என் மனைவியிடம்.   இருந்தும் குரங்கை கண்டதும் பதற்றத்தில், தன் கைப்பையையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அனைவரின் பாஸ்போர்ட் என் 3/4th பேண்டின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். கேமராவை பாதுகாப்பது தான் என்னுடைய முதல் குறிக்கோள்.

இத்தீவில் நிறைய சினிமா பாடல் காட்சிகளை எடுத்துள்ளார்கள். மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.

என்னுடன் வந்த மலையாளிகளையும் எச்சரித்தேன். கையில் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று. நான் எடுத்துக்கூறியும், கவனக் குறைவால் அந்த மலையாளி குடும்பத்தின் குழந்தையிடம் கேமரா இருந்தது. தரை இறங்கியதும் இதற்காகவே காத்திருந்த ஒரு குரங்கு அதை அபேஸ் செய்தது. விலையுயர்ந்த கேமரா போச்ச்ச்....

ஒரு சில குரங்கு என்றால் சமாளிக்க்லாம், அது அங்கு ராஜாங்கமே நடத்துது, நாம பம்மித்தான் போக வேண்டும். நிறைய குழந்தைகளின் சாக்லேட், பிஸ்கட், பாலிதின் கவர்கள் என அனைத்தும் பறிபோயிக்கொண்டே இருந்தது. செம்ம த்ரில் தான். நாங்கள் லாவகமாக முன்னேறினோம். யோகவ் நிற்கவே மாட்டிறான், ஆகையால் அவனை தூக்கிக்கொண்டும், என் மனைவி என் பின்னால் பதுங்கியும் மெல்ல மெல்ல தீவினுள் சென்றோம்.சிறிய சிறிய படிகட்டுகள் என போகப்போக செங்குத்தாக மலை ஏற வேண்டும். இதில் யோகவை தூக்கிக் கொண்டும் சென்றதால் நாக்கு தள்ளிருச்சு.


அவ்வளவு சிரமம் கடந்து சென்றால், வாவ் வாவ் வாவ்..!! மிக மிக செழுமையான ஒரு இடம். அனைத்து பகுதியும் மலையால் சூழ்ந்த ஒரு இயற்கையான குளம். கண்கொள்ளாக் காட்சி.
Pregnant Maiden Lake

இன்னும் நிறைய இருக்கு. பதிவு நீள்வதால் ஒரு சிறிய இடைவெளிவிட்டு நாளை தொடர்கிறேன். 

புதன், 4 செப்டம்பர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-2)

முதல் பகுதி படிக்க


மலேசியாவில் முதல் நாள்

நான் தமிழுடன் சிரித்துப் பேசுகையில் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தார், யாரோ இவரை அடிக்க வருவதைப்போல ஒரு லுக்கில். ஒரு வேளை இவர் மலேசியா தாதாவோ??? என்று கூட யோசித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறார் என்று முதலில் புரியாமல் இருந்தது. அப்பாளிக்கா தான் நம்ம மண்டைக்கு உறைத்தது, அட ஹரிப்பயலே, நீ சிரிக்க ஆரம்பித்தால் ஊரே திரும்பிப் பார்க்கும்படியான சத்தம் வருமே, அதைக் கண்டுதான் மனுஷன் பீதியில் இருக்கார் என்று. பின்பு மனதைத் தேற்றிக்கொண்டு சகஜமாகப் பேசினார்; பழக்கப்பட்டுவிட்டார். வேற வழி :)  ஒரு வழியாகச் சிரித்து முடித்து உள்ளூர் விமான நிலையம் போய்ச் சேரும் போது செக்-இன் கவுண்டர் மூடும் நேரமாகிவிட்டது.

அடித்துப் பிடித்து சினிமா தியேட்டருக்கு ஓடி, முட்டிமோதி ஒரு வழியாக டிக்கெட் வாங்கியவுடன் தான் நமக்கு சுயநினைவு வரும். நம்ம பொருள், உடனிருப்பவர் இருக்கிறார்களா என்று பார்ப்போமே, அதே நிலை தான்.
ஈ-டிக்கெட் எடுத்தவுடன் பார்க்கையில் கையை பிடித்துக்கொண்டிருந்தப் பையனைக் காணவில்லை.

எங்கு தேடுவது இவனை? எங்கு போயிருப்பான்? வேற விமான நுழைவாயில் சென்றுவிட்டால் என்னாவது? நம்மவூட்டு அம்மணிக்கிட்ட மாத்து யார் வாங்குவது? நம்ம மொபைல் நம்பரும் யோகவ்க்கு தெரியாதே?. இது துபாய் போல கிடையாதே, தைரியமாக இருக்க என மனதில் ஓராயிரம் கேள்விகள்... (துபாயில் 3-4 முறை காணாமல் போயுள்ளான், அதனால் முதற்வேலையாக எங்களின் மொபைல் நம்பரை மனப்பாடமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம். ஒரு வேளை யோகவ் காணமற்போனால், அருகில் இருக்கும் யாருடனும் சென்று அவர்களின் மொபைலில் எங்களை அழைக்கலாம் என்று கற்றுக் கொடுத்துள்ளோம்)

ஒரு சில மணித்துளியில் வயிற்றில் பாலை வார்த்தார் நண்பர் தமிழ். யோகவ் உள்ளே சென்று உங்க அம்மணிக்கிட்டத்தான் நிற்கிறான் பாருங்க என்று. இங்கே ஒரு குறிப்பு - மலேசியாவில் ஏர்-ஏசியா விமான சேவைக்காகவே ஒரு விமான நிலையம் இருக்கிறது என நினைக்கிறேன், எங்கு பார்த்தாலும் ஏர்-ஏசியா விமானமும், ஜேஜேவென்று மக்கள் கூட்டமும் காணலாம். அம்புட்டுச் சலீச்சான விமான டிக்கெட் ஏர்-ஏசியாவில்.

கோலாலம்பூர் - லங்காவி தீவிற்கு செல்ல 60 திர்ஹாம்ஸ் தான் (ஒரு வழி மட்டும்). சுமார் ஒரு மணி நேர பயணத் தூரம். லங்காவி என்பது மலேசியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவு. இது பூலோகச் சொர்க்கம் என்று அடிச்சு சொல்லலாம். நான் முன்பதிவு செய்த ஹோட்டலின் பெயர் அடினா-இன், இது பெண்டாய் செனாங் (Pentai Cenang) என்ற கடற்கரை ஓரம் அமைந்த பரபரப்பான பகுதி. நிறைய விடுதிகள், ரிஸார்ட்கள், உணவகங்கள், கடற்கரை, சுற்றுலா  ஸ்தலங்கள் என இருக்கும் இடம்.நாங்கள் லங்காவியில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இலவசமாக லங்காவி ரோட் மேப் மற்றும் இன்னபிற டூரிஸ்ட் விளம்பரங்கள் தந்தார்கள். (நாம் பினாயில் ஓசி என்றாலே விடமாட்டோம்.  இதை விட்டிருவோமா என்ன..!!!) லங்காவி விமான நிலையத்திலேயே Pre-Paid taxi சர்வீசில் ஹோட்டலுக்கு செல்ல டாக்‌சிக்கான பணத்தைக்  கட்டிவிட்டு, அவர்களிடம் இங்கு வாடகைக்கு கார், டூ வீலர் கிடைக்குமா என விசாரித்தேன். நான் தங்கும் ஹோட்டல் வாசலின் முன்பே இருக்கிறது என்றார்கள்.... அடடே...!!

Hotel Adina-Inn

 ஹோட்டல் கிட்டதட்ட ரிஸார்ட் ஸ்டைலில் இருந்தது. நம் அறையின் முன்பே வாகனத்தை நிறுத்தும் வசதி, ரம்யமான சூழல், இரண்டு டபுள் காட் மெத்தைகளுடன் விசாலமான அறை, இரண்டு நிமிடத்தில் கடற்கரை என அருமையான இடம். ஒரு நாள் அறைக்கான வாடகை 125 வெள்ளிகள். ஒரே ஒரு குறை பின்பு விரிவாக சொல்கிறேன்.
எங்க அம்மணி, பயணக்களைப்பில் உறங்க வேண்டும் என்று அரங்கநாதர் அவதாரம் எடுத்துவிட்டார். நம்ம வாரிசோ, புது இடம் என்பதால், கேள்வி மேல் கேள்விகள்... பீச் எங்கே, இது எந்த இடம்? இனிமேல் நம்ம புது வீடு இதுதானா? மேலும் நிறைய சேட்டைகள். என் முகக் கண்ணாடியை போட்டுக்கொண்டு என்னைப் போல பாவனைச் செய்வது, விதவிதமாகத் தன்னை போட்டோ எடுக்கச் சொல்லி அதகளம் பண்ணிட்டான். வகுறு பகபகவென அலாரம் அடித்ததால் அருகில் இருக்கும் உணவகத்தில் சாப்பிடப் போகலாம் என இருவரும் தமிழ் உணவகமான 'Tomato Nasi Kandar'க்கு சென்றோம். (நான் முன்பே சென்றுள்ளதால் இந்த உணவகத்தின் சுவைப் பற்றி அறிவேன், அதனால் தான் என் தங்கும் இடத்தை இங்கு தேர்வு செய்தேன், ஆயிரம்தான் இருந்தாலும், நமக்கு சோறு தானே முக்கியம்... :) )

என்னைப் போல பாவணை செய்கையில்
குஷி மூடில்
சாப்பிட்டவுடன் அருகில் இருக்கும் கடற்கரையை யோகவ் பார்த்த அதே நேரத்தில், நான் பைக் வாடகைக்கு விடும் கடையை கண்டுவிட்டேன். கடற்கரைக்கு  சென்றதால் ஏகக் குஷியாகி விட்டான். பின்பு எங்க அம்மணியையும் அழைத்துக் கொண்டு சென்று பீச்சில் செம்ம ஆட்டம். 1 மணி மேலாகியும் திரும்பவர மறுத்தான். அவனைச் சமாதானப்படுத்தி பைக் வாங்கலாம் வா என அழைத்துகொண்டு போனோம், தொப்பர தொப்பர நனைந்துக்கொண்டு.

ஒரு நாள் வாடகையாக 25,30,35 வெள்ளி என்றவுடன் எனக்கு ஆச்சர்யம். 25 என்றால் 20,000 கிமீ ஓடியது;  30 வெள்ளிக்கு 10,000 கிமீ.க்கு குறைவான ஓடியது; 35 வெள்ளியென்றால் புத்தம் புதிய வண்டி. யோகவ் ப்ளு கலர் வண்டிதான் வேண்டும் என தீர்மானித்தான். வெறும் 300கிமீ ஓடிய புத்தம் புதிய TVS Scooty போல இருக்கும், ஆனால் செம்ம பிக்-அப் 125CC.

எங்களுக்கு 4 நாட்கள் வண்டி தேவைப்பட்டது. அதற்கு வாடகைப் பணத்தை முன்பே கட்ட வேண்டும் + 50 வெள்ளி வைப்புத்தொகை. வண்டி பன்சரானோலோ, பழுதடைந்தாலோ அழைப்பின் பெயரில் அந்த இடத்திற்கே வந்து மற்றொரு வண்டியை மாற்றித் தருவதாகக் கூறினான்.சும்மா சொல்லக்கூடாது, அட்டகாசமான வண்டி. அதே சமயம், எல்லோருக்கும் தலைக்கவசம் - குழந்தை உட்பட. மூன்று பேரும் ஹெல்மட் அணிந்திக்கொண்டு பயணம் செய்தது ஒரு சுவையான அனுபவமாக இருந்தது.

இது சும்மா போட்டாக்காக, ஹெல்மட் இல்லாமல்
கடைக்காரனே மிகத்தெளிவான சாலையின் வரைப்படம், பார்க்க வேண்டிய இடங்கள், மேலோட்டமாக போகவேண்டிய ஊரின் வழித்தடம் பற்றிய தகவல் குறிப்பு தந்தான். ஒரு Ride போகலாம் என்று வண்டிய விட்டோம், உடனே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டான் .சரியென்று வரைப்படத்தை வைத்து ஓட்ட துவங்கினேன்.

பெரிதாக அவ்வூர் சாலைகள் பற்றி தெரியாது, ஊர்ப்பற்றி தெரியாது, மக்களைப் பற்றி தெரியாது.அங்கு இங்கு என அழைந்து பெட்ரோல் பங்’கை கண்டுப்பிடிப்பதற்கே தாவு தீர்ந்தது. இத்தனைக்கும் ஒரு 5கிமீ தான் பயணித்தோம். சரி, பெட்ரோல்  தான் நிரப்பியாச்சே என்ற மமதையில் ஒரு ரௌண்ட் போகலாம் என சுமார் 15 கிமீ இருக்கும் 'Kuah' என்ற நகரப்பகுதிக்கு வண்டியை  கிளப்பினோம்.

போகும் வழியில் ஒத்த ஆள் கிடையாது, இதில் வண்டிய விரைவாக ஓட்டவும் முடியாத நிலை. எங்க அம்மணி வழிகாட்டுதலில் தான் வண்டியை ஓட்டனும். (அவங்ககிட்ட தான் வரைப்படமே, நான் முதலில் குத்துமதிப்பாக பார்த்துக்கொண்டு  கிளப்பிடுவேன்). சிறிது நேரம் கடக்கையில் இருள் சூழச்சூழ அய்யகோ, நம்மளை திருட்டு கும்பல் தாக்கினால் என்ன செய்வது என்ற பீதியால் வண்டியை நிறுத்தினேன். நடுவில் நிறுத்தி வரைப்படத்தை பார்த்து மாற்று வழியில் எங்க ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினேன். அவ்வாறாக முதல் பிளானே அப்பளமா நொறுங்கிடுச்சு :) :) :)

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக் என்பது கணக்கா வெளியே ஒன்னும் காட்டிக்கொள்ளாமல் வண்டியை ஓட்டினால், அது இன்னும் டெர்ரர் பாதையாக இருக்கு. ஈ காக்கா கூட இல்ல... !! நம்மளை அடிச்சு துவச்சு போட்டாலே நம்ம பாடியை தூக்க ரெண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க போல. ஒரு விதமான பயம் தொற்றிக்கொண்டது :) :) :). ஒரு புது விதமான அனுபவம், பயத்தினூடே.

ஒரு காரைக் கண்டால் போதும் நமக்கு; அதை விடாமல் முடிந்தவரை துரத்திக்கொண்டு அதன் பின்னாலே சிறிது தூரம் பயணிப்போம். ஆனாலும் வழித்தடம் சேன்ஷே இல்ல..!!! இரண்டு பக்கமும் மலைத்தொடர்கள், பாதாளம் போல ஒரு பக்கம், நல்ல குளிர் காற்று என செம திகில்.பயத்தைப் போக்க எங்க அம்மணியுடன் இப்ப வந்துரும், பக்கம் தான் என பேசிக்கொண்டே எனக்கு நானே தைரியத்தைக் கொடுத்துக்கொண்டு சென்றேன். இதில் நாம் செல்வது சரியான வழிதானா எனக்கூடக் கேட்க ஆளில்லை. :) :) பெண்டாய் செனாங் என்ற போர்ட் கண்டவுடன் அப்பாடா, தப்பிச்சுட்டடா தங்கராசுன்னு பெருமூச்சு வந்தது.

வண்டிய நேரா ’டொமேட்டோ நாசிக்கந்தர்’க்கு செலுத்தி ஆளுக்கு ரெண்டு சிக்கன், மீன், புரோட்டா என ரொப்பியவுடன் மனசாந்தி அடைந்தது, ஆங் மறந்துட்டேன் டிவைன். :) :) :)

இனி வரும் பகுதியாவும், கண்ட இடங்கள் அதன் சிறப்பம்சம் என பகிர்கிறேன். மொக்கையா இருந்தா ரெண்டு புரோட்டா வகுரு முட்ட சாப்பிடுங்க, அல்லாம் சரியாகிடும்....

புதன், 28 ஆகஸ்ட், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-1)

முன் கதை சுருக்கம்..!!!

இங்கு என் மகன் யோகவிற்கு ரெண்டு மாதக் கால கோடை விடுமுறை (ஜீலை மற்றும் ஆகஸ்ட்). அவன் நெம்ப போரடிக்குது என்பதால் ஒரு வார முடுமுறை அவனுடன் செலவழிக்கலாம் என திட்டம். பொதுவாக 10 நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்கும் கம்பெனி, இங்கு துபாயில் ரம்ஜான் மாதம் என்பதால் 1 மாத லீவு அதிசியமாக கிடைத்தது. ஒரு வாரம் வீட்டில் இருந்தாலே நம்ம டவுசர் அவுந்திரும், ஒரு மாதம் தாங்காது என எங்காவது வெளியில் அழைத்து செல்லலாம் என்ற திட்டம் உதயமானது.(நம்ம வாய் அப்படி, எதாவது பேசி, என்ர அம்மணிகிட்ட உதை வாங்குவதே பொழப்பா போச்சு)

நம்ம ஊரு கோயமுத்தூருக்கு செல்லலாம் என்ற நினைப்பு வந்தாலே அபிமன்யு கதி தான் மனதில் படமாக ஓடுகிறது. ஒண்டியாவே எங்க அம்மணிகிட்ட சமாளிக்க முடியவில்லை.. உடம்பு முழுவதும் புத்தூர் கட்டு, இதில் ஊரில் என்றால் சக்கர வியூகத்தில் நிராயுதபாணியா நிற்கும் அபிமன்யுவாக நான்.... உள்ளே போக மட்டும் தான் தெரியும் (அபிமன்யு போல), எல்லோரும் ரௌண்டு கட்டி அடிப்பாங்க. பேந்த பேந்த முழித்து முழி பிதுங்கி துபாயில் வந்து காலடி வைக்கும்போது தான், அப்பாடா புழச்சுட்டடா ஹரி என்று மூச்சே விட முடியும்..!!!

இத்தனை வருடம் தவிர்க்க முடியா காரணங்கள் இருந்தது. அம்மா, வீடு வாங்குவது, தம்பியின் திருமணம் என அனைத்து பொறுப்புகளும் முடிந்தவுடன் வாண்டடா போய் மீண்டும் மாட்டுவோமா....??? ஹ்ம்ம்ஹூம்... புழச்சுட்டடா கைப்புள்ள....!!!

வெளிநாடு என்றவுடன் மனதில் தோணிய முதல் ஊர் ஜெர்மனி, உலக புகழ் எழுத்தாளர் மற்றும் நம்ம அன்ணன் ராஜ்சிவா இருக்காரே.. எல்லாம் அவர் பார்த்துக்குவார், நம்ம அம்மா போல பாசத்தை காட்டுவாரே என்ற ஃபீலிங்ஸ் கூடுதல் உந்துதல். ஆனா அயல்நாட்டு சதி, அங்கு செல்ல செலவு கண்ணாபிண்ணா எனவாகும் என்ற அச்சம் நடுமண்டையில் பொளேர் என அடித்தது. மற்றொன்று விசா கெடுபிடிகள்....

சரி நமக்கு தோதான அதே சமயம் நம்ம ஊரு திசையே தெரியா வட இந்தியாவில் இருக்கும் சிம்லா, குளு, மணாலி, டார்ஜ்லிங்,  தாஜ்மகால் என பயணத்திட்டம் போட்டேன்.

நம்ம பவர் என்னவென்று நமக்கு அப்போதான் புரிந்தது. திட்டம் போட்ட அடுத்த நாளே, ஊரே அழியும் வண்ணம் கனமழை, புயல் என சிவபெருமானே பெயர்த்துகொண்டு ஓடுறார்.... நம்ம திட்டத்திற்கே ஊரே அழியுதே, இந்த லட்சனத்தில் நாம அங்கு சென்றால் என்னாவது என்ற இந்திய மக்கள் நலன் கருதி, உலக சாந்தி வேண்டி பயணத்தை ஸ்ரீலங்காவிற்கு மாற்றினேன்.

அங்கு என் துபாய் நண்பர் மூலியமாக விசாரித்தேன். என்னுடன் பணிபுரியும் பெண் ரெண்டொரு நாளில் ஸ்ரீலங்கா செல்வதாகவும், அங்கு சென்றவுடன் தட்பவெப்பம், சூழ்நிலை பற்றி தகவல் தருவதாக சொன்னாள். ரெண்டாவது நாள் என்னுடைய ஈமெயிலில் கதறல் குரல், அப்பெண்ணிடமிருந்து. தயவு செய்து இங்கு வர வேண்டாம், ஊர் பூரா பேய் மழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம், தண்ணீர் நிரம்பி ஓடும் ரோடுகள் என... இப்பொழுது தான் நானே ஜெர்கானேன். என்னடா இது, நம்மகிட்ட இப்படி ஒரு பவர் இருக்குன்னு இவ்ளோ காலமா தெரியாம போச்சேன்னு :) :) :)

சரியென்று, மனம் தளறாமல் பட்ஜெட்டை சிறிது கூட்டி மலேசியா என முடிவானது. எங்கு போவது, என்ன பயணத்திட்டம் என ஒன்றும் இல்லை. நம்ம ராசி பத்திதான் இப்ப உங்களுக்கே தெரியுமே...!!! அதனால் எதை பற்றியும் விசாரிக்காமல், ஒரே நாளில் விசா எடுத்துவிட்டேன்.

(நான் ஏற்கனவே என் அம்மாவை அழைத்து கொண்டு நான்கு வருடத்திற்கு முன்பு சென்றுள்ளேன். என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும் நினைவுகள் அவை. அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள். பிறகு ஒரு வருட இடைவெளியில் காலமாகிவிட்டார்கள்)


 65 திர்ஹாமிற்கு ஒரு விசா கிடைக்கிறது துபாயில்.. விசா ஃபார்மாலிட்டீஸ் ஒன்றும் பெரிசா இல்லை, வெறும் தங்கும் இடம், விமான டிக்கெட், கம்பெனி கிட்ட ஒரு கடிதம் மட்டும் போதும். (காலை விண்ணப்பித்தால் அடுத்த நாளே கிடைக்கிறது)

என் பயணத்திட்டம் 11 நாட்கள். முதல் 4 நாட்கள் லங்காவியிலும், 2 நாட்கள் பினாங்கிலும், மீதி 4 நாட்கள் கோலாலம்பூரில் சுற்றவும் என வரைவு திட்டம். நம்ம முகநூல் மலேசிய நண்பர் ’தமிழ் புகழ் தமிழ்மகனிடம்’ மட்டும் அங்கு வருவதை சொல்லிருந்தேன். ஆனால் எங்கு செல்வது, எந்தந்த இடத்தை பார்ப்பது என்ற விரிவான திட்டமேதும் இல்லை. ஒரு குருட்டு தைரியம் தான்.

ஓமான் ஏர்ஸ்’ என்ற விமானத்தில் 1 Stop-Over ல் புக் செய்தேன். துபாயில் இருந்து மஸ்கட் சென்று, அங்கிருந்து கோலாலம்பூரில் தரையிறங்கும். சுமாராக 9.30 மணி நேர விமான பயணம்.  ஒரு நபருக்கான டிக்கெட் விலை 1,600 திர்ஹாம்ஸ். ஸ்டாப்-ஓவரில் வைட்டிங் வெறும் 45 நிமிடங்களே. நமக்கு மஸ்கட் இறங்கி, அடுத்த பிளைட்டை பிடிக்க சரியாக இருக்கும்....


மிக மிக அருமையான சர்வீஸ். புத்தம் புதிய விமானம். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸை விட சர்வீஸ் அட்டகாசம். பயண நேர முழுதும், ஏதாவது ஒன்னு வந்துகொண்டே இருக்கு.... நமக்கு அதானே முக்கியம்.... டவலில் ஆரம்பிச்சு சாக்லேட், நட்ஸ், டிரிங்ஸ், சாப்பாடு, ஜூஸ், ஸ்னேக்ஸ், மீண்டும் ஜூஸ் என ஏக அமர்க்களம்... ஒவ்வொரு சீட்டின் முன்பும் சின்ன கம்பூட்டர் திரைகள், நாம் படம் பார்த்துக்கொண்டு போக. பயணத்தின் நடுவில் ஒரு சிறிய லெதர் பேக் ஆளுக்கொன்று கொடுத்தார்கள், பாஸ்போர்ட் வைத்துக்கொள்ள. திறந்து பார்த்தால் சிறிய பிரஸ், டூத்பேஸ்ட், கண்களை கட்டி தூங்க கருப்பு துணி (சதிலீலாவதி படத்தில் கமல் போட்டுப்பாரே, அதே தான்), சாக்ஸ் என்று. சத்தியமா இந்த சாக்ஸ் எதற்கு எனக்கு என்றே தெரியவில்லை. என் மனைவி கரேக்டா அதே கேள்வியை கேட்டாள். நாமா தான் தெரியாது என்று சொல்ல மாட்டோமே... :) :) :) பாத்ரூம் செல்லும் போது போட்டுக்கொள்ள இருக்கும் என்றேன். என் மகன் சில விநாடிகளில் அப்பா என்று, காலில் போட்டுக்கொண்டு இது தூங்க என்றான்.... பல்பு பல உடஞ்சு சிதறுச்சு பாருங்க... :) :) :) இப்பவே இப்படியா...


துபாயில் ஜூலை 21 இரவு 7.15 மணிக்கு தொடங்கி 8.20 மஸ்கட் அடைந்தது. 9 மணிக்கு வேறொரு பிளைட்டில் கோலாலம்பீரில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தரையிறங்கும் வரை தூக்கமே இல்லை. பையன் ஏகப்பட்ட கேள்விகள், போதாதென்று திரையில் Tom & Jerry, Ice Age என பல கார்டூன்கள், கேம்ஸ் என மாறி மாறி போட்டுக்கொடுக்க வேண்டும்.


கோலாலம்பூரில் இருந்து லங்காவி தீவிற்கு உள்நாட்டு விமானத்தில் செல்ல வேண்டும். 3 மணி நேர இடைவெளியில் ஏர் ஆசியா விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தேன். அதற்கான விமான நிலையம் ஒரு 30 நிமிடத்தொலைவில் இருந்தது. டிக்கெட் விலை வெறும் 60 திர்ஹாம்கள். (ஒரு வழி மட்டும்)

கோலாலம்பூரில் தமிழை முதன்முதலாக சந்தித்தோம். மனுஷன் அம்புட்டு அடக்கமா பவ்யமா வந்திருந்தார். தென்றல் ஜோதியுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு ஏர்போர்டில் இருக்கும் தமிழ் உணவகத்தில் சாப்பிட சென்றோம்.  கருமம், ஒன்னும் வாய்ல கூட வைக்க முடியல. :( ஆரம்பமே அமர்க்களம் தான் போங்க.

ஆனால் முகநூல் தந்த தமிழ், மனம் முழுவதும் நிறைந்தார்... எங்களுக்கு லோக்கல் மொபைல் நம்பர் வாங்கித் தந்தார். பிறகு அடுத்த உள்நாட்டு விமானத்திற்கு டாக்ஸியில் சென்றோம். தமிழின் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு எங்களுடன் வந்தார். pre-paid Taxi யில் செல்ல 42 மலேசிய ரிங்கிட்டுகள ஆகிற்று. இங்கு தமிழர்கள் எல்லோரும் மலேசிய ரிங்கிட்டை வெள்ளி என்றே அழைக்கிறார்கள். இனிமேல் தான், பயணக் கட்டுரையே தொடங்கும்... அவ்வ்வ்வ் :) :) :)

செவ்வாய், 7 மே, 2013

'The Princess' - புத்தகம் பற்றிய பார்வை (பகுதி-2)

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்...!!!

இது வெறும் அரச பரம்பரை பற்றிய நிகழ்வுகளாக இல்லாமல், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றிய பதிவும், அங்கு நிலவிய அரசியல் சூழலும், அந்த நாட்டின் சட்டதிட்டங்களும், ஆதிக்கம் செலுத்தும் மதகுருக்கள் பற்றியும், அங்கு நடந்த சட்ட மீறல்கள் என இப்புத்தகம் நிறைய பேசுகிறது, சுல்தானாவின் மூலமாகவே...

திரைப்படத்தில் வரும் ஃபிலேஷ்பேக் காட்சிகள் போன்று, சிலசமயம் பின்நோக்கி சென்று தன் தோழிகளின் கதைகள், அங்கு நடந்த சம்பவங்கள், சுல்தானாவின் பணியாளர்கள் பற்றிய வாழ்க்கை, தொழிலாளர்களின் நிலைமை, அரச குடும்பத்தின் பகட்டு வாழ்க்கை, ஆடம்பரம், திருமண முறை, என மிக அழகாக இதன் எழுத்தாளர் கோர்த்துள்ளார்... இதன் காரணமாகவே படிக்கும் நமக்கு ஒரு முழு தேசத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் திருப்தியை கொடுக்கிறது.


இந்த புத்தகம் உலக அளவில் சிறந்த விறபனை செய்த புத்தகங்களில் ஒன்று (International best Seller). நியூ யார்க் டைம்ஸ், பெண் எழுத்தாளர்கள் எழுதிய தலை சிறந்த 500 புத்தகங்களில் இதுவும் ஒன்று. (1300ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் உட்படுத்தப்பட்ட பட்டியலில்)

இனி கதையாக இல்லாமல் சில சம்பவங்களை நான் கூறுகிறேன்.

நாம் அறியும் சில திடுக் செய்திகள்


1. மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்ட ஆடவர்கள். பெண்களுக்கு முற்றிலும் கருத்துரிமை வழங்காத நிலை. அவ்வூர் பெண்கள், ஆண்களின் முன் பேசக்கூட மாட்டார்கள்

2. ஆண்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற சமூக எண்ணம்

3. எந்த ஆடவனும் தாய் சொல்லை தட்ட மாட்டார்கள்

4. வசதி படைத்த பெரும்பாலானோர் 4 மனைவிகளுடன் தான் வாழ்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என குரான் கூறுவதாக அறிகிறேன்.

5. இருப்பினும் மனைவிகளுடன் ஏற்ற தாழ்வுகள் நிறைய உண்டு.

6. சுழற்சி முறையில் தினமும் ஒரு மனைவி வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்று முதல் மனைவி, நாளை இரண்டாவது மனைவி என வரிசையாக. இருப்பினும் இளைய மனைவியுடன் சிலர் பெரும்பொழுதை கழிக்கிறார்கள். ஆனால் ஆடவனை எதிர்த்து கேட்க யாருக்கும் துணுவு இல்லை.

7. பெண்களை வெறும் பிள்ளை பெறும் மிஷின்களாக எண்ணுவது

8. அங்கும் மாமியார், மருமகள் பேதம் இருப்பதாக அறிகிறோம். இது சர்வதேச பிரச்ச்னை போல :) :)

9. பெண்கள் பூப்பெய்தவுடன், அபயா எனும் பர்தா போட்டுக்கொள்கிறார்கள், நம்மூரில் தாவணி அணுவது போல. அதில் பல வேலைப்பாடுகள், மாறுபாடுகள் இருப்பது படிக்கையில் ஆச்சர்யம் அளிக்கிறது.

10.  பெண்கள் எந்நேரமும் அபயா அணிந்துதான் இருக்க வேண்டும். தன் வீட்டில் இருக்கும் சமயத்தை தவிர. அதிலும், உறவினர்கள் வந்தால் அபயா போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்கள் முன்னால் முகத்தை எக்காரணம் கொண்டும் காட்டக்கூடாது என கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறார்கள்


 11. வீட்டு ஆண்களின் (தந்தை அல்லது கணவர்) அனுமதி இல்லாமல், பயணம் செய்ய இயலாது.

12. பாஸ்போர்ட் போன்ற ஆவனங்கள் ஆடவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆண்கள் துணையில்லாமல் பயணிப்பது கடினம். அவ்வாறு இல்லாமல் பயணிக்க நேர்ந்தால், அவர்களிடம் No Objection கடிதம் வாங்கி ஏர்போர்டில் சமர்பிக்க வேண்டும்

13.  பெண்கள் வண்டியோட்ட தடை. குடும்ப தலைவரின் நம்பிக்கையான டிரைவர்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும் அல்லது குடும்பத்தின் ஆணுடன் தான் செல்ல வேண்டும்.

14. கல்வி என்பது பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது. இருப்பினும்  அரச பரம்பரையில் இருப்போருக்கு தனி ஆசிரியர் மூலமாக அடிப்படை கல்வி அளிக்க சவுதி அரசரின் மனைவியின் நிர்பந்தத்தின் காரணமாக பயன் கிடைக்கிறது

15.  பெண்கள் எந்நேரமும் கணவனின் ஆசையை பூர்த்தி செய்பவளாக இருக்க வேண்டும்

16.  ஆண்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் தன் மனைவியை டைவர்ஸ் செய்யலாம். அவ்வுரிமை பெண்களுக்கு இல்லை... நிறைய நடைமுறைகள், விதிமுறைகள் இருக்கின்றது

17. முட்டாவாஸ் (Mutawas) எனும் மதகுருக்கள் மிகுந்த சக்தி படைத்தவர்களாக திகழ்கிறார்கள்.

18. மதகுருக்கள் தான் தீர்ப்பும் வழங்குகிறார்கள். தங்களுக்கென ஒரு கலாச்சார குழு பாதுகாவலர்களை கொண்டுள்ளார்கள். அங்கு நடைபெறும் கலாச்சாரத்தின் மீறல்களை தடுக்க.

19. அரசனே மதகுருக்களை கண்டு அஞ்சும் நிலை நீடிக்கிறது

20. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என அவர்கள் சமூகத்தில் இருக்கிறது

21. புனித நூல் குரானின் சில கருத்துகளை தவறாக புரிந்துக்கொண்டவர்களாக, ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்றவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என சுல்தானா கூறுவதில் அறிகிறோம்.

22. ஆண்கள் தனக்கு 20-50 பிள்ளைகள் இருந்தால் அது தங்களின் கௌரவத்தின் சின்னம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

23. குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

24. பூப்பெய்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிடுகிறது.

25. 50 வயதோ அல்லது 60 வயதோ உடைய ஆண்கள், சர்வ சாதாரணமாக 16 வயது பெண்களை மூன்றாம் தாரமாகவோ நான்காம் தாரமாகவோ மணமுடிக்கிறார்கள்

26.இன்னும் நிறைய இருக்கு. புத்தகத்தை படித்தால் பலப்பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறது.

முரண்கள்

1. என்ன தான் சட்டம், ஒழுங்கு அனைவருக்கும் சமம் என கூறினாலும், அதிகாரம் பொருந்திய அரச குடும்பத்தினர் இதில் இருந்து எளிதில் தப்பிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, அமேரிக்காவில் படித்த ஒரு இளவரசர், சவுதி சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் மேற்கு வாழ்க்கையின் முறையில் ஈர்க்கப்பட்டு, அடங்க மறுக்கிறார். மதுபானத்தை தன் சொந்த நாட்டுக்கு கடத்தி தொழில் செய்கிறார். அவ்வாறான ஒரு சமயம், மதகுருக்களிடம் மாட்டிக்கொள்கிறது இவருக்கு சொந்தமான வண்டி. நடவடிக்கை என்று பார்த்தால், மிகக்கடுமையாக இருக்க வேண்டும். அரச பரம்பரையின் குறுக்கீட்டால் தண்டனை ஏதும் இல்லாமல்,கமுக்கமாக விஷயத்தை அமுக்கி பக்கத்து ஊருக்கு கட்டிட காண்டிராக்ட் செய்யும் தொழில் அமைத்து அதில் வாழ வழிவகை செய்கின்றனர்.இது போல் நிறைய சம்பவங்கள் இதில் இடம் பெறுகிறது

2. மதுவகைகள் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று. மது அருந்துவது ஒரு பெரிய குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சுல்தானா கூறுகையில், அவர்களுக்கிடையேயான விருந்தில் விலை உயர்ந்த மதுவகைகள் இல்லாத பார்ட்டிகள் மிக அறிது என்கிறார்.

3. எந்த வழக்காக இருந்தாலும், ஆண்கள் சொல்லும் சாட்சியம் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அதனால் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களை எளிதாக குற்றவாளியாக்குகிறார்கள்.

உதாரண சம்பவம் - சுல்தானா பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் இருக்கையில், பக்கத்து அறையில் ஒரு பெண் சகல போலீசோடு அட்மிட் செய்யப்படுகிறாள். ஏதேனும் அரச குடும்பத்தினரா என விசாரிக்கையில் அவள் ஒரு கைதி, குழந்தை பெற்ற பின் அவளை நேரே ரோட்டிற்கு சென்று கல்லால் அடித்து கொள்ளும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சுல்தானா அவள் கதையை அறிகிறாள். வெறும் 16 வயதைக் கடந்த பெண் அவள்...

அவளின் சகோதரன், தன் பெற்றோர் இல்லாத சமயத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு இரவு விருந்து அளிக்கையில் பாட்டின் சத்தம் தாங்கிக் கொள்ள முடியாமல், கீழே சென்று அதை குறைக்க முறையிடுகிறாள். நண்பர்கள் அனைவரும் செம போதையில் இருக்கையில் இவலை சின்னா பின்னப்படுத்துகிறார்கள்... சகோதரன், பாத்ரூம் சென்றிருக்கையில் நடக்கும் சம்பவம்... இவள் எவ்வளவு முறையிட்டும், மதுவின் காரணமாக அவர்கள் கேட்கவில்லை. இவளின் கதறல் சத்தம், ஸ்பீக்கரின் சத்தத்தால் வெளியில் கேட்கவில்லை. சகோதரன் போதை தெளிந்து பார்க்கையில் தன் தங்கையின் நிலையை காணுகிறான். விபரீததை உணர்ந்த அவன், மது விருந்து விஷயத்தில் இருந்து தப்பிக்க நண்பர்களின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். இப்பெண் தங்களை செக்‌ஷிற்கு தூண்டியதாகவும், வேண்டாம் என்று ஒதுங்கையில் விடாமல் தங்களை டீஸ் செய்ததாகவும் மதகுருக்களுடமும், பெற்றோர்களிடமும் கூறுகிறார்கள்.... இந்த சாட்சியத்தை ஏற்று இவளுக்கு கல்லடிப்பட்டு சாகும் தண்டனை வழங்குகிறார்கள்..குழந்தை ஈன்ற சில மணித்திளியில் கொடூரமாக சாகிறாள், ஒன்னும் செய்யாத அறியா பொண்ணு.

4. தாயை போற்றினாலும், பெண்களுக்கான அநீதி அதிகம் நடக்கும் ஊர். ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாட்டில் இருந்து செக்ஸ் கொத்தடிமைகளை, வீட்டு வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி வர வைக்கிறார்கள்.அவ்வாறான ஒரு பணிப்பெண்ணின் தோழியின் கதை கண்ணீர் வரவழைக்கிறது. இருண்ட அரையில் அடைத்து, அவர்கள் வேண்டும் பொழுது இன்பத்தை அனுபவித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

5. நிறைய ஆண்கள், வெளியூர் பயணம் அடிக்கடி செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் அங்கு கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் அனுபவிக்கவே பெரும்பாலும் செல்கிறார்கள். ஆனால் அவர்களே உள்ளூரில் கடுமையாக நடந்துக்கொள்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் என்ற எண்ணம் சிலருக்கு உண்டு.

இது சில சம்பவங்களே.. உங்க ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. படிக்க சுவாரஸ்யம் குறைந்து போகுமாதலால் இங்கு விரிவாக சொல்லவில்லை.

சுல்தானா வாழ்க்கை சுருக்கமாக

 சுல்தானா குழந்தை பருவத்தில் தந்தை பாசத்திற்கு ஏங்குகிறார். தந்தைமார்கள், ஆண் பிள்ளைகளை தான் கொஞ்சுகிறார்கள். இதன் காரணமாக தன் மூத்த சகோதரனை வெறுக்கும் நிலை வருகிறது. மூத்த சகோதரனும் மூர்கமாக வளர்கிறான். பெண்களை பற்றி கீழ்தரமான எண்ணங்களோடு.

சுல்தானாவின் அக்கா சாராவிற்கு 53 வயதான நபருடன் திருமணம் நடைபெறுகிறது. அதில் திருமண சம்பர்தாயங்கள், பெண்ணிற்கு இளைக்கப்படும் அநீதி என அனைத்தும் இடம்பெறுகிறது. சில காலத்தில் தற்கொலைக்கு முயன்று மீட்கப்படுகிறாள். அவள் கணவன் மிகவும் செக்ஸ் டார்சர் கொடுத்தபடியால் இந்த விபரீத முடிவு. சில்தானாவின் அம்மாவின் பிடிவாதத்தின் காரணமாக தன் அக்கா மீட்கப்படுகிறாள். பின்பு அவள் கணவர் விவாகரத்து செய்து விடுகிறார்.

சுல்தானாவின் மனதில் திருமணம் பற்றிய அச்சங்கள் ஆழ்மனதில் தொற்றிக்கொள்கிறது. திருமண வீட்டார் காண வருகையில் அடங்காபிடாரியாக நடந்துக்கொள்கிறார். ஒரு இனிய திருப்பமாக கல்யாணத்திற்கு முன்பாகவே கணவருடன் பேசும் பாக்கியம் பெறுகிறார். ஆச்சர்யமாக சுல்தானாவிற்கு அவரை பிடித்துவிடுகிறது. நன்கு படித்த, பெண்களை புரிந்து நடக்கக்கூடிய நபராக இருக்கிறார் (பெயர் கரீம்). 16ஆம் வயதில் தன் விருப்பப்படியே நல்ல இளம் கணவர் கரீமுடன் (27 வயது) கைக்கோர்கிறார்.

மாமியாரை அவமானப்படுத்தியதை மனதில் வைத்துக்கொண்டு அவர் பழி வாங்க நினைக்கிறார். மாமியார் மருமகள் சண்டை அரங்கேறுகிறது. சிலப்பல சண்டைக்கிடையே கர்பமாகிறாள். வாழ்க்கை நன்று செல்கிறது. கரீமுடன் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்கிறாள். இவர்களுக்கு ஒரு பையனும், ரெண்டு பெண் குழந்தைகளும் பிறக்கிறது.

இடையில் மார்பக புற்றுநோய் தாக்க,  இதற்கும் தகுந்த சிகிச்சை பெற்று குணமாகிறாள். ஆனால் பிள்ளை பேறு பெற இயலாது என மருத்துவர்கள் கூறிவிடுவதன் காரணமாக....அவள் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் வாழ்க்கை தடம் புரள்கிறது.

அதை எப்படி சமாளித்தாள், அவள் செய்த காரியங்கள் அனைத்தும் விறுவிறுப்பான திரைப்படத்திற்கு ஒப்பானவை.

இதனூடே தன் அக்கா சாராவின் வாழ்க்கையில் அடிக்கும் வசந்தம், அவர்கள் காதல், பிள்ளை பெறுகையில் இருக்கும் ஆடம்பரம் என சுவையான ஒரு புத்தகம்....

இன்றைய சவுதியின் நிலையும், சுல்தானாவின் நிலை அறியவும
 இப்புத்தகம் பதிப்பித்து ஒரு 20 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது சுல்தானா நலமாக இருக்கிறாளா? அவளுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டின் மூலமாக தன் வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் இருந்ததா? தற்பொழுது சவுதியில் நிலைமை மாறியிருக்கிறதா? சுல்தானா தரும் விவரங்கள் மிக துள்ளியமனவை. எளிதில் குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காண முடியும், அதனால் தற்பொழுது அவளின் கதி என சில கேள்விகளை முன் வைத்து ஜீன் சேசனிடம் கேட்டேன். அவரின் பதில்கள் கீழே...

Hi Hari, Thanks for telling me this… I’m so glad that the true story of a Saudi princess is informative and has put you to thinking about the lives of women behind the veil.

Saudi Arabia is changing but certainly not fast enough. The truth is this: A Saudi woman can have a good life If the men in her family are kindhearted and caring about females. I know Saudi women who live absolutely good lives — they are educated and pursuing many good things. On the other hand, I hear true stories of young girls and women who are suffering terribly because the men of the family are still very backward in their thoughts. It’s a world filled with contradictions with some women being educated and working and fulfilling their dreams and other women are being abused and even murdered by the men in their family.

Yes, her immediate family knows who she is — you can read the full story in the sequel to PRINCESS (there are three books about Princess Sultana and her family & friends. ALl should be available a the bookstores in Dubai).

I hope this answers your questions and feel free to write to me anytime. Thank you, again…. Jean
--------------------------------------------------------------------------------------------------

'The Princess' - புத்தகம் பற்றிய பார்வை (பகுதி-1)

'The Princess: A True Story of Life Behind the Veil in Saudi Arabia' by Jean Sasson


இப்புத்தகத்தை டுபஜார் எனும் ஆன்லைன் புத்தக வெப்சைட்டில் தான் முதலில் கண்டேன். அதன் சிறுகுறிப்பில், ‘ஒரு சவுதி நாட்டு இளவரசியின் சுயசரிதை’ என்று படித்தேன். நம் எல்லோருக்கும் இருக்கும் கியூரியாசிட்டி, பிரபலங்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்குமே...!! அதன் பயனாக எனது ஆவல் பீறிட்டு வந்தது... 

மேலும்,  மண்டைக்குள் சவுதி நாட்டின் சட்டதிட்டம் மிகக்கடுமையாச்சே..!! அது எப்படி? சவுதி நாட்டில் இருக்கும் ஒரு அரபி பேசும் இளவரசி, அமேரிக்க நாட்டு எழுத்தாளருடன் தன் எண்ணங்களை பகிர்ந்து, எப்படி எழுத முடியுமென்று.(ராஜ பரம்பரையில் உள்ளவர்களை சுற்றி பல குண்டா தடியன்கள், அதாங்க பாடி கார்ட் இருப்பாங்களே). ஒரு வேலை அப்படி எழுதிவிட்டு, எப்படி இந்த இருவரும் அங்கு உயிர் வாழ முடியும்? என்பது அடுத்த கேள்வியாக தோண்றியது.... இக்காரணிகளே இப்புத்தகத்தை வாங்க பேராவலை தூண்டியது.

எழுத்தாளரை பற்றிசுல்தானா என்ற இளவரசியின் கதையை உள்வாங்கி எழுதிய ஜீன் சேஷன்,  ஒரு அமேரிக்க பெண் எழுத்தாளர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவரின் ஸ்டைல், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்களின் உண்மைக் கதைகளை மையமாக கொண்டதாக இருக்கும். இது வரை 11 புத்தகங்கள் எழுதியள்ளார் என நினைக்கிறேன், அனைத்தும் இப்பகுதிகளில் வாழும் பெண்களின் போராட்ட வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவைகளே....

சதாம் உஷேன் படைகளிடம் அகப்பட்ட பெண்ணின் கதை, குவைத் போரில் சீரழிந்த பெண்னின் கதை, சுல்தானா இளவரசியின் வாழ்க்கை தொடர்ச்சுயாக 3 புத்தகங்கள், ஒசாமா பின் லேடனின் மகன் பற்றிய கதை (Growing up with Bin Laden) என ஏராளம்...

புத்தகம் படிக்கும் முன் என் எண்ணம்

 இதுநாள் வரை, துபாயில் பர்தா அணிந்து நம்மை கடந்து போகும் அரபி பெண்களை பார்த்தால்.... இவர்களுக்கென்ன ராஜ வாழ்க்கை, சொகுசு பங்களா, ஹ்ம்ம் என்றால் ஓடி வந்து வேலை செய்ய பல ஆட்கள், பணக்கஷ்டம் என்றால் என்னவெண்று தெரியாத ஒரு ஆடம்பர வாழ்வு, என கண்டு வியந்துள்ளேன், இல்லை இல்லை பெருமூச்சு விட்டுள்ளேன் இதுநாள் வரை... இந்த புத்தகமும் அவ்வாறான ஒரு ஆடம்பர வாழ்க்கை முறையை கூறும் என்று நினைத்த எனக்கு, படிக்க படிக்க பல்வேறு திடுக் திடுக் ஷாக்...!!

நம்மையும் அறியாமல் சில நேரம் கோபம் பொத்துக்கொண்டு வருமே, அது போல ஒரு தருணம்... என்ன மாதிரி சமூகம்டா இது..? என்ன வாழ்க்கைபா இது ? சுதந்திரமே கிடையாதா? பெண்கள் என்ன கொத்தடிமைகளா?? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு? வெளிநாட்டவர்களுக்கும் இவ்வளவு ஜீரனிக்க முடியா கஷ்டங்களா? இன்னும் பலப்பல கேள்வி கணைகள் உங்களை நிச்சயம் போட்டு பிராண்டும், இந்த புத்தகத்தை படித்தால்.... சரி புத்தகத்தினுள் இனி செல்வோம்.

முதல் முடிச்சு
எனது முதல் கேள்வியான, இது எப்படி சாத்தியம் என்பதற்கு எழுத்தாளரின் குறிப்பிலேயே விடை கிடைத்தது. இவர் 1978ஆம் ஆண்டு சவுதியில் வேலை நிமித்தமாக செல்கிறார். தொடர்ந்து 4 ஆண்டுகள் King Faisal Specialist Hospital என்ற ஆஸ்பத்திரியில் உயர்ந்த நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். அதன் மூலமாக பல அரச குடும்பத்தினரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களின் நலன்விரும்பியாகவும் மாறுகிறார். அதன் பொருட்டு சில விருந்துகளில் பங்கேற்கையில் 1982ல் சுல்தானாவிடம் பழக்கம் ஏற்படுகிறது. 9 வருடம் நட்பின் நம்பகத்தன்மை காரணமாக சுல்தானா என்ற இளவரசி, தன் கதையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலை தெரிவிக்கிறார். நிர்பந்தத்தின் பயனாக கதை எழுத தீர்மானித்து அனைத்து தகவல்களையும் கோர்க்கிறார்.

ஆனால் இவையனைத்தும், அரச குடும்பத்திற்கு தெரிந்தால் மொத்த ஆட்களும் காலி. அதனால் புத்தகத்தில் குறிப்பிடும் அனைத்து பெயர்களும் புனைப்பெயர்களே...சுல்தானா உட்பட. ஆனால சம்பவங்கள், காட்சிகள் உண்மையானவை.

மேலும், எழுத்தாளரின் நட்புகள், நெருங்கிய வட்டம் என அனைவரும் சவுதி நாட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து 1991ஆம் ஆண்டு, இவரும் சவுதியை விட்டு அமேரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கிறார். அங்கு சென்றடைந்தபின் தான், முழு புத்தகத்தை 4, 5 மாதத்தில் எழுதி பதிப்பிக்கிறார்.
அப்போ சுல்தானாவின் கதி ?? என்ற கேள்வி வரும் உங்க மனதில்.. எனக்கும் தான், அதற்கான பதில் இறுதியில்..

சுல்தானா - இளவரசி

 21,000 அரச உறுப்பினர்கள் (மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அவர்களின் வாரிகல், கிளைகல் என) உள்ள மாபெரும் அரச பரம்பரையில் வாழும் ஒரு பெண். தன் பால்ய நாட்களில் தொடங்கி தான் சந்தித்துவந்த இன்னல்களை, வாழ்க்கை முறையை நமக்கு அப்படியே அப்பட்டமாக தோலுறித்து காட்டுகிறது.

சுல்தானா, சிறுவயதிலிருந்தே மிகமிக துடிக்கானவள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள், பழமைகளை அகற்றி புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். ஆனால் இதை சாத்தியப்படுத்துவது அரிதான் ஒன்று. ஏனெனில் தான் வாழ்வது இரும்புக்கோட்டைக்குள், ஆணாதிக்கம் மிகுந்த ஒரு நாட்டில், சமூகத்தில்....

தன் சகோதரனுக்கு கிடைக்கும் கவனிப்பு, மரியாதை பெண்ணாக பிறந்ததால் இவளுக்கு கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே அவனை வெறுக்க ஆரம்பிக்கிறாள்...

குடும்பத்தின் ஆண் தான் அனைத்தையும் தீர்பானிக்கும் நபர். பெண் என்பவளுக்கு பேசவோ, தன் கருத்தை சொல்லவோ அனுமதியில்லை. அதே போல் பெண்களின் தலையாய கடமை தகப்பனுக்கு, கணவனுக்கு அடிப்பனிந்து செல்வதே. திருமணமான பெண், தன் கணவனின் இச்சைகளுக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் தலையாய கடமை, பிள்ளை பெற்று தருவதே... அதிலும் ஆண் பிள்ளைகள் தான் பெற்று தர வேண்டும். பெண் பிள்ளை பெற்றால் இளக்காரமாக பார்க்கும் சமூகம்.... ஆண் பிள்ளைகள் பெரும் பெண்களுக்கு தான் கணவனின் சிறப்பு கவனிப்பு என இன்னும் நிறைய இருக்கிறது.

அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக என்னை திடுக்கிட்ட சம்பவங்களை ஒன்றின் பின் ஒன்றாக தொகுக்கிறேன்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

Special-26 Hindi Film

ஸ்பெசல் 26 - ஹிந்தி படம்


ஒரு பரபரப்பான படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சா ??? உடனே இந்த படத்தை பாருங்கள்.. 2-1/2 மணி நேரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பார்க்க நிச்சயம் உகந்த படம். அப்படியான அருமையாக பொழுது போகும் ஒரு படம்.

நஷ்ருதின் ஷா நடித்த 'A Wednesday' என்ற ஹிந்தி படத்தை அறியாதோர் மிகக் குறைவாகத்தான் இருக்க முடியும். இப்படத்தைத் தான் தமிழில் கமல்ஹாசன் ‘உன்னை போல ஒருவன்’ என ரீமேக் செய்தார். ’ஏ வெட்னஸ்டே’ படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே’வின் ரெண்டாவது படம், Special 26.

கதையென பார்த்தால் ரொம்ப எளிது. 1987 ஆம் ஆண்டில் பம்பாய் ஒபேரா ஹவுஸில் நடந்த ஒரு நிஜ கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இதன் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. நிஜ சிபிஐ ஆபிசருக்கும், டூபாக்கூர் சிபிஐ ஆபிசருக்கும் நடக்கும் Cat and Mouse விளையாட்டு தான் படம்.... ஆனால் செம விறுவிறுப்பா பின்னி பெடலெருத்திருக்கிறார்கள்....

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி தான். சிபிஐ அக்‌ஷய் குமார், லோகல் போலிஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து மந்திரி வீட்டிற்கு ரெய்டு செய்ய போவதாகவும், அதற்கு துணையாக சிபிஐ டீமுடன் வருமாறு கூறுகிறார். அக்‌ஷய் குமாரும், அனுபம் கேரும் மந்திரி வீட்டிற்கே சென்று ரைய்ட் நடத்தி, பணம், நகைகள், பொருட்கள் அனைத்தும் சீல் செய்து செல்லும் இடம் அடடா சூப்பர்ப் என சொல்ல வைக்கும்... அதிலும் குறிப்பாக அனுபம் கேருக்கு மந்திரி லஞ்சம் தர முயலுகையில் அவர் கொடுக்கும் டிரீட்மெண்ட் ஒரு நிஜ ஆபிசரை நம் கண்முன்னே கொண்டாண்டு நிறுத்துவார்...

இவர் தான் டா சிபிஐ ஆபிசர் என நாம் நினைக்கையில், அடுத்த காட்சியில் அவர் அக்‌ஷய் குமாருடன் நடுங்கிட்டு பேசும்போது தான், இது டூபாக்கூர் ஆபிசர்ஸ் என அறிவோம். :) :) :)


இதைத் தொடர்ந்து, நிஜ ஆபிசராக மனோஜ் பாண்டே என்ற நிஜ சிபிஐ ஆபிசருக்கு கேஸ் செல்கிறது. நம்ம ‘சமர்’ படத்தில் சக்ரவர்த்தியுடன் வரும் வில்லன்களில் ஒருவன். அந்த படத்தை பார்த்தவர்கள், இப்படத்தை பார்த்தீர்களேயானால்,  ஒரு நல்ல நடிகனை எவ்ளோ மொக்கையா காட்ட முடியுமோ அவ்ளோ மொக்கையா காட்டினாங்களே, படுபாவி பசங்க என்று நிச்சயம் கூறுவீர்கள்.

3 கொள்ளை சம்பவங்கள் தான் மொத்த படமும். ஒன்று மந்திரி வீடு, அடுத்து கல்கத்தா சந்தை, கடைசியாக ஒபேரா ஹவுஸில் லம்பாக அடித்து எல்லோரும் வாழ்க்கையில் செட்டில் ஆகலாம் என முடிவெடுக்கிறார்கள். கல்கத்தா ரெய்டு செல்லும் இடத்தில் நிஜ ஆபிசர்களை எதிர்கொள்ளும் சமயோஜித இடம் நல்லதொரு சான்று.

மனோஜ் பாண்டே இவர்களை பிடிக்க எடுக்கும் நடவடிக்கை ஒரு புறமும், அக்‌ஷய் குமார் ஒபேரா ஹவுசில் அதையும் மீறி கொள்ளை அடிக்க முயலுவதும் தான் செம சுவாரஸ்யம்.... 


ஒபேரா ஹவுஸில் கொள்ளை அடிக்க, ஒரு பெரிய டீம் அமைக்க திட்டமிடுகிறார்கள். தினசரியில் சிபிஐ ஆபிசர்கள் தேவை என விளம்பரப்படுத்தி, 26 பேர் கொண்ட ஒரு சிபிஐ டீமை உருவாக்குகிறார்கள்.இண்டர்வியூ வருபவர்களுக்கு இவர்கள் போலி என தெரியாது. அதே சமயம் மனோஜ் பாண்டே 26 பேர்களில் சிலரை ஊடுருவ செய்கிறார், இவர்களின் மொத்த செயல் திட்டத்தை அறிந்துக்கொள்ள.

அடுத்து என்ன, இவர்கள் எப்படி தப்பிப்பார்கள் என நம் ஆர்வத்தை அநியாயத்திற்கு தூண்டியதில் தான் படத்தின் பெர்ய வெற்றி இருக்கு.  விட்டா நான் முழுக்கதையை சொல்லிவிடுவேன். நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்கோங்க.

இப்படி ஒரு பரபரப்பான படத்தில், காசு கொடுத்து படம் பார்க்க வந்தவனுக்கு தம் அடிக்க, உச்சா போக Gap கொடுக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் கொடுத்த காட்சிகள் தான் அக்சய் குமாரும், காஜல் அகர்வாலும் லவ்வும் இடமும், பாடலும்...ஆனாலும், மொத்தமே 15 நிமிடம் தான் இவர்கள் போர்சன் என்பது என்னை போன்ற அம்பிகளுக்கு ரிலீஃப்....!!!


கடைசியா நீங்க நிஜ சிபிஐ ஆபிசர் கணக்கா ஓவரா ஃபீல் பண்ணி, படத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடி அலையாதீர்கள். படம் பார்த்தோமோ, மகிழ்ந்தோமா என பார்த்து மகிழுங்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த படத்தை ஒரிஜினல் டிவிடியில் மட்டுமே பாருங்கள். உயிர்வானியில் நல்ல ப்ளூ ரே குவாலிட்டி வித் இங்கிலீஷ் சப்-டைட்டிலோடு இருக்குன்னு போய் பார்க்காதீர்கள்....ஆங் !!!! :) :) :)

மிக்க நன்றி ஆல் நட்பூஸ்....!!!

வியாழன், 4 ஏப்ரல், 2013

யோகவும் நானும் (2)

Yogev & Me - பள்ளிக்கு சென்ற முதள் நாள் (03-04-13
யோகவும் நானும்
முன்பு எழுதிய பதிவு ஒன்று - யோகவ் பள்ளியில் அட்மிஷன் பெற்ற கதை

நமக்கு எல்லாமே கடைசி நிமிஷ ஞானோதயம் தானே..!!! இவ்ளோ நாட்கள் அவனை லேசா விட்டுவிட்டு, கடைசி இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்தினோம்.

கராமாவில் (துபாயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி) இருக்கும் லூலூ சூப்பர் மார்கெட் சென்று அவனுக்கு வேண்டிய ஸ்கூல் பேக், பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், துண்டு, தண்ணி பாட்டில் என வாங்கிக்கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே, அவன் தேர்வு செய்த மாடல், கலர்களிலேயே அனைத்தும் அவன் எண்ணத்திற்கே விட்டு விட்டோம்.

இதில் என்ன விஷேசன்னா, அனைத்தும் ப்ளூ கலரில் எடுத்துக்கொண்டான். Blue Color School Bag, Blue color Water bottle, Blue color, Blue color Pencil box, Blue color Lunch box என அனைத்தும் ப்ளூ மயம்....!! அதில் யோகவ் ஏக குஷி. குறிப்பாக டிராலி டைப்பில் இருக்கும் ஸ்கூல் பேக், கையிலேயே வைத்துக்கொண்டான்.

ஒரே ப்ளு மயம்
இதுதான் சமயம் என்று நாங்க சந்து கேப்பில், இது எல்லாம் ஸ்கூலுக்கு எடுத்துக்கொண்டு போகனும், அங்க நீயே சாப்டனும், நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க, ஜாலியா இருக்கும், விளையாட சருக்கு இருக்கும், தூரி இருக்கும், கிளாஸ் மிஸ் எல்லாம் உன்னை நல்ல பையன் (Good Boy) என்று சொல்லுவார்கள் என அவனை மனதளவில் உற்சாகப்படுத்தினோம்.

எங்கள் முன் இருந்த அடுத்த மிகப்பெரிய சவால், அவனை காலை எழுப்பி தயார் செய்வது தான் :) :) :) இரவு 1 மணிக்கு உறங்கி, காலை 11 மணிக்கு எழும் பழக்கமுள்ளவன் யோகவ். அதற்கு முற்றிலும் மாறாக அதிகாலை எழுப்பி, அவனுக்கு அனைத்தும் முடித்து காலை 7.10 க்கு பஸ்சில் ஏற்றிவிட வேண்டும். ஒரு நாள் கூட அவனை முன்பே எழுப்பி, தயார் செய்து பழக்கப்படுத்தவில்லை.
பேருந்திற்காக காத்திருக்கையில்
03-04-13 நாள் வந்தது.
காலை 5.30 மணிக்கு என் மனைவி என்னை எழுப்பிவிட்டாள். நானே முனங்கிட்டு தான் முழித்தேன். யோகவ்வை எழுப்பி ரெடியாக்கச் சொன்னாள். பாவம் அவன், இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்றேன். பழைய படத்தில் நம்பியார் அடியாட்களிடம் முறைப்பது போல் முறைத்து, முடியாது என்றாள்.

அவனை அதிகாலை 5.45க்கு மெதுவாக எழுப்ப துவங்கி 6.00 மணியளவில் முழித்தான். படுத்துக்கொண்டே சன்னனில் பார்த்தவன், அப்பா  சன்னே (சூரியன்) இன்னும் வரலை... எனக்கு ஸ்கூல் நாளைக்கு தான், நீயும் படுப்பா, என்றான் பாருங்க....!!! அவன் பதிலில் விக்கித்து போனேன். :) :) :) என்ன சொல்ல முடியும் !!!!

ஒரு வழியா எழுப்பி, அடுத்த டார்கட்டான பல் துலக்குவதில் நின்றது. என்ன என்னமோ முயற்சித்தும், பல்லை காட்டவே இல்லை. வேண்டாம் என என் மீது சாய்ந்துக்கொள்கிறான். நான், தங்கம், செல்லம், குட்டி என எல்லா ஆசை வார்த்தையும் சொல்லி ஸ்டாக் தீர்ந்துப்போனது. மணி 6.40 என்ற பதற்றம் வேறு. அவன் அம்மாவிடம் ரெண்டு பூஜை விழுந்தப்புறம் தான், பல் துலக்கும் படலம் முடிந்தது.

அடுத்து குளிப்பதில் அதிகம் சிரமம் வைக்கவில்லை. என்னுடன் குளிப்பது என்றால் அவனுக்கு எப்பவும் ரொம்ப குஷி. அதனால் டக்கென வந்துவிட்டான். சீக்கிரம் குளித்து, புதுத்துணி ஆசைக்காட்டி ரெடியாக்கிட்டேன். என் மனைவியும் அவனுக்கு ஸ்கூலுக்கு வேண்டியதை தயார்ப்படுத்தினாள். பிறகு யோகவ்விற்கு பூஸ்ட் அருந்தக்கொடுத்தாள். அந்த சந்து கேப்பில், நான் முகம் கழுவி, முந்தைய நாள் ஆபிசுக்கு போட்ட துணியை போட்டுக்கொண்டேன்.

பள்ளி போக ஆர்வமாக யோகவ்
புறப்படும் முன், என் அம்மாவிடம் நின்று சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டோம். அவன் சொன்ன வார்த்தைகள் - பாட்டி, நான் நல்லா படிச்சு பைலட் ஆகனும் என்று கூறியது ஆச்சர்யம். ஆனந்த் ஃபேமிலி, என் தங்கை கிருத்திகா என மொத்த பேமாலியும் கீழே இறங்கினோம். வீட்டை பூட்டிவிட்டு கீழே இறங்கும்போது தொண்டை எல்லாம் அடைக்குது, ஒரு இனம் புரியா துக்கத்தில் மனம். வெளியே காட்டிக்கொள்ளாமல், ஒரு மாதிரியாக ரோட்டிற்கு வந்தேன். பஸ் வரும் வரை, மனதில் நம்ம பையன் பிரச்சனை இல்லாமல் சென்று விடுவான் என்று நம்பிக்கை இருந்தது.


பஸ்சும் வந்தது. அதைக் கண்டவுடன் என்னை அறியாமல் என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. ஏன் என்று தெரியவில்லை!!! முதல் முறையா என்னை என் மகன் பிரியும் தருணமாதலால் இருக்கக்கூடும். ’அபியும் நானும்’ படத்தில் பிரகாஷ்ராஜ், தன் மகளை பள்ளியில் விடும்போது அழுவாரே, அதே காட்சியில் இப்போ நான். அந்த காட்சியுன் ஆழம் இப்போ புரிகிறது. யோகவை பஸ் பஸ்சில் ஏற்றிவிட்டு, ஆயாவிடம் பத்திரம், அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் அவ்வளவா தெரியாது என்று கூறிக்கொண்டேன். ஒரு சிங் பையன் அருகில் யோகவை அமர வைத்தார்கள். அந்த பையன் அழுதுக்கொண்டு இருந்தான், யோகவ் அவனையே பார்த்துக்கொண்டு சமத்தாக இருந்தான்.

ஓட்டுனரிடம் மதியம் நாங்கள் வந்து கூட்டிக்கொண்டு வருகிறோம் என பேசும்போது, ஓ என அழுகை சத்தம். திரும்பி பார்த்தால் யோகவ், அப்படி கத்திக்கொண்டு அழுகிறான். என் மனைவியை திரும்பி பார்த்தால், அவள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர்....

சிங் பையன் - தொடக்க புள்ளி
ஓட்டுனர், பெற்றோர்களில் ஒருத்தர் கூட வாங்க என்னும்போது நான் பதற்றத்தில், அப்படியே வண்டியில் ஏறிக்கொண்டேன். யோகவை சமாதானப்படுத்தி வண்டி கிளம்பியது. சிறிது நேரத்தில் தம்பி ஆனந்த் அழைக்கிறான், வீட்டு சாவி என்னிடம் தான் இருக்கு .... எல்லோரும் வீட்டு வெளியே என்று. வண்டி ஓட்டுனர், நேரமாதலால் சிறிது நேரம் நிறுத்த மறுக்க, நான் யோகவ் இருவரும் வண்டியை விட்டு கீழே இறங்கிக்கொண்டோம். யோகவ்விற்கு ஒரே குஷி. ஸ்கூல் அவ்ளோ தானா என்று!!! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்....!!!

வீட்டிற்கு வந்து சாவி கொடுக்கையில், மனதில் எப்படியும் டாக்‌ஷியில் தான் செல்ல வேண்டும், என் மனைவி அழுத காட்சியும் கண்முன்னே இருந்ததலால் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போவோம் என தோணியது. நான் தான் மொத்த நாள் விடுமுறை எடுத்தாச்சே....!!! அனைவரும் ஒன்றாக யோகவை விட பள்ளிக்கு டாக்‌ஷியில் சென்றோம், பக்பக்வென. பள்ளிக்கு செல்ல 20 நிமிடம் தான் இன்னும் மீதி, இந்த கலவரத்தில்....
யோகவ்வின் இருக்கை, பள்ளி அறை
ஒரு வழியாக மிகச்சரியான நேரத்தில் பள்ளி அடைந்து விட்டோம். அங்கு பள்ளி அறை வரை யோகவுடன் செல்ல அனுமதித்தார்கள். யோகவ் இருக்கையில் யோகவ் என்று போட்டிருந்தது. எங்களை விட மாட்டிறான் பையன்.... மீண்டும் அதே சிங் பையன், அழ ஆரம்பிக்க நமக்கு ஏழரையை கூட்டிட்டான் :) :) :). நாங்கள் எல்லோரும் வெளியே நிக்க, மனைவியை உள்ளே சென்று அவ்னை சமாதானம் செய்தாள். பள்ளி ஆரம்பித்து 30நிமிடத்திற்கு மேல் போராடியும் சமாதானமாகவில்லை யோகவ். நாங்கள் ICU வார்டில் இருக்கும் கண்ணாடி ஜன்னல் போல கதவில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இப்போ 3 குழந்தையை தவிர ஏனைய அனைவரும் செட்டிலாகிவிட்டார்கள்.... அந்த மூவர் ரன்பிர் சிங், இன்னொரு பொன்னு எலிசபத் மற்றும் நம்மாளு யோகவ் . இவ்ளோ நேரமும் யோகவ் இருக்கையில் கூட உட்காரவில்லை... இவ்ளோ கலேபரத்திலும் அவன் டிராலி பேக்கையும் விடவில்லை.... அதை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அவன் அம்மாவை மற்றொரு கையில் பிடித்து வீட்டிற்கு போகலாம் என்று ஒரே அழுகாச்சி....

யோகவை சமாதானம் செய்தபோது
இவ்வேலையில் அவன் பள்ளி மிஸ் எல்லோருக்கும் பேப்பர், குழந்தைகள் விரும்பிய கலர் பென்சில் என கொடுத்தார்கள். முடிவாக என் மனைவியை வெளீயே வரச்சொல்லிவிட்டு நான் உள்ளே சென்றேன். யோகவ்விடம் நான் எங்கும் செல்லவில்லை. நீ முதலில் உன் சீட்டில் உட்கார். நான் உன்னருகிலேயே இருப்பேன் என்று உத்திரமாதம் கொடுத்தேன். ஒருவாரு அழுகையை கைவிட்டு உட்கார்ந்தான்.

யோகவின் பள்ளி மிஸ் பெயர் திவ்யா, நிஜமான கண்கண்ட தெய்வம்.... !!! அத்தனை குழந்தைகளை வைத்து சமாளிப்பது சத்தியமா சாதாரணக் காரியமில்லை. ஒன்று அழுக ஆரம்பித்தால், அடுத்தடுத்தாக வரிசையாக தொடங்குகிறார்கள்....அவர்களை எடுத்து கொஞ்சிக்கொண்டு, பொம்மைகளை கொடுத்து விளையாடிக்கொண்டு, சிலரை சமாதானப்படுத்த அவர்களை இடுப்பில் எடுத்து தூக்கிக்கொண்டு பந்து, பொம்மை, விடீயோ என பலதரப்பட்ட வேலைகள்.... அதீத பொறுமை தேவை. A Royal Salute to her..!!

நம்ம கலையுலக வாரிசு, இப்போது தான் ஆசுவாசமாகி, மேஜையில் இருக்கும் கிரேயான் பென்சிலில் அவனுக்கு பிடித்த கலரை எடுத்து கொடுக்கப்பட்ட தாளில், கிறுக்க ஆரம்பித்தான்... நொடிக்கொரு முறை, நான் மூலையில் இருக்கேனா என பார்த்து உத்திரவாதத்துடன். நைசாக ஒரு அடி மெல்ல வைத்து கதவை நோக்கி நகர்ந்தால், உடனே அப்பாஆஆஅ போக வேண்டாம் என அழுகை.... நான் படித்த காலத்தில் கூட ஒரு பனிஷ்மண்ட் வாங்கியதில்லை. இப்போது ஏதோ தண்டிக்கப்பட்டவன் போல ஒரு மூலையில் நின்றுக்கொண்டு நான்...!!!

டிஜிடல் ஸ்கிரீனிங் முறையில் பயிற்றுவிக்கும் பள்ளி இது. அதனால் குழந்தைகளை நார்மலாக்க, ஸ்கிரீனில் மிக்கி மௌஸ் கார்ட்டூன் போட்டிருந்தார்கள்..யோகவிற்க்கும் பிடித்த ஒன்று. ஒரு மணி நேரமாகிவிட்டது. வெளியில் எட்டிப்பார்த்தால் என் மனைவி, ஆனந்த என யாரும் இல்லை... எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்கள் என புரிந்துக்கொண்டேன்.

ஸ்கூல் பிரின்சிபால் ஒவ்வொரு அறையாக  வந்தார்கள்.. என்னையும் சேர்ந்து மூன்று பெற்றோர்கள் உள்ளே இருந்தோம். நீங்க ஏன் இங்க நிக்குறீங்க என்று விசாரித்து, எங்களுக்கு விடுதலை அளித்த மற்றொரு தெய்வம் :) :) :) அவர்கள் அழுதால் பரவாயில்லை, நாங்க பார்த்துக்கொள்கிறோம், நீங்க பள்ளிக்கு வெளியே நில்லுங்க என்றார்கள். யோகவ் அழுக ஆரம்பித்தான்... ஆனால் இருக்கையில் இருந்து எந்திருக்கவில்லை. அவனை பார்க்காத மாதிரி ஓடி வந்துவிட்டேன்.
மணி காலை 9.45. நாங்க யாரும் பல்லு விலக்கவில்லை, குளிக்கவில்லை...:) :) :) பசி கொல்லுது. நானும் மனைவியும் கேண்டீனுக்கு சென்று 2 டீ சாப்பிட்டு வந்தோம். 11 மணி வரை வெளியில் இவனுக்கு காத்துகொண்டு.

11.00 மணிக்கு அனைத்து பெற்றோர்களையும் அவரவர்கள் பேருந்தில் சென்று அமரச்சொன்னார்கள்... குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம். குழந்தைகள் அனைவரும் பேருந்தில் ஏறுவார்கள் என்று.எல்லா குழந்தைகளும் சாராசாரையாக வரும் அழகைக்காணவே கண்கோடி வேண்டும். ஒருவர் பின் ஒருவராக கை பிடித்துக்கொண்டு எல்லோரும் ஒன்றாக வருகிறார்க்ள். (நாம் சிறு வயதில் ரயில் விளையாட்டு விளையாடுவோம்ல, அது போல). என் மனது படபடக்கிறது, என் மகனைத்தேடி. நம் கண்களில் அகப்படவே இல்லை. பொறுமை, டென்சன் தாங்காமல் பேருந்து விட்டு இறங்கி, யோகவ் அறை நோக்கி சென்றேன். மிஸ்சுடன் கை பிடித்துக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான்.... அப்பாடா, உயிர் வந்தது. மிஸ்சிடம் வினவியபோது, ஒன்றும் இல்லை... தூங்கிவிட்டான், இப்போ எழுப்பி கூட்டி வந்தேன் என்றார்கள்....

எங்களை கண்டவுடன், புத்துணர்வு பெற்று மீண்டும் அதே சேட்டை, வாய், ஆயிரம்  கேள்விகள் என இயல்புக்கு திரும்பினான்....!!

சோழர் பரம்பரையில் ஒரு MLA...!! ஹஹ்ஹஹஹா.

என் அம்மா இருந்திருந்தால் மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.... எங்க வாழ்க்கை இவ்வளவு மாறியதை எண்ணிக்கொண்டு. நான் பள்ளிக்கு செல்லும் போது, புதுத்துணி உடுத்தக்கூட காசில்லை. நம்மளிடம் இருப்பதிலேயே கொஞ்சம் நல்ல பள்ளி சீருடைதான் தான், பள்ளிக்கு முதல் நாள் உடுத்தும் புதுத்துணி நமக்கு. பெரும்பாலும் நம்முடைய டவுசரை,  போஸ்ட் பாக்ஸ் என கிண்டல், ஏளனம் செய்வார்கள் சில உடனிருக்கும் மாணவர்கள். அதை மறைக்க சட்டையை (இன் செய்யாமல்) வெளியே போட்டுக்கொண்டு பல நாள் சென்றுள்ளோம். பல நாள் என்ன... எல்லா நாளும்...!!! :) :) :) எங்களுக்கு பள்ளிக்கு பை என்பது, ஒரு மஞ்ச பை அல்லது எங்கம்மாவே தைத்த ஒரு பச்ச நீள ஜோல்னா பை. அவ்வளவே...!!

என் அம்மா எங்களிடம் அடிக்கடி கூறிய வார்த்தைகள், இந்த வறுமையில் எனக்கு உங்களை ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்கு போடுவது எளிது, ஆனால் செய்ய மாட்டேன். என்னால் முடிந்த வரைக்கும் படிக்க வைக்கிறேன், கல்வி ஒன்று தான் நம்மளை வேறொரு தளத்திற்கு கூட்டிச்செல்லும். அதை உணர்ந்து படியுங்கள் என்றுதான். அதனால் என்னை எப்படியோ டிப்ளமோ படிக்க வைத்து விட்டார். என்னை இன்ஜினியர் படிக்க வைக்க முடியவில்லை என்று கடைசியில் வருந்தியதும் உண்டு.

என் அம்மாவும் யோகவும்
அதே போல், என் மகனுக்கும் என்னாலான அனைத்தும் கொடுத்து அவனை படிக்க வைப்பேன். விதை விதைத்த அம்மாவிற்கு நன்றி.

திங்கள், 25 மார்ச், 2013

Paulo Coelho’s Eleven minutes - Novel


போர்சுகல் எழுத்தாளர் பௌலோ கோல்ஹோவின் 'The Alchemist' நாவல் கொடுத்த தைரியத்தால், மீண்டும் ஒரு ஆங்கில நாவல படிக்க உந்தப்பட்டு (Paulo Coelho’s) Eleven minutes என்ற நாவலை படித்தேன். நான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இப்பதிவு. நான் படித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், எழுதுவதில் சிறிய தாமதம். வேறென்ன, நாளை நமதே என்ற நம்ம சோம்பேறித்தனம் தான்..... JJJநான் படித்த இவரின் முந்தைய நாவலான ‘ The Alchemist’ ஐ  விட பலமடங்கு வித்தியாசமான களம், எழுத்து நடை. மனுஷன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில் வல்லவர் போல JJJ. லெவன் மினிட்ஸ்என்ற இந்நாவல் நிச்சயம் 18+ வயதானோருக்கே... சில பகுதிகளில் காதல் ரசம், கொட்டோ கொட்டென கொட்டுகுறது, ஆனால் செம்ம அருமையான வசீகரிக்கும் எழுத்து.

இதன் ஆங்கில மொழிப்பெயர்பாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு இடத்திலும், நாம் வாசிப்பது ’ஒரு மொழிபெயர்ப்பு நாவல்’ என்பதை நாம் அறிய வாய்ப்பே இல்லை.
இந்நாவலும் கிட்டதட்ட 50 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இன்னும் மொழி பெயர்க்கவில்லை என கூகுளாண்டவர் சொல்லுகிறார்.... !!!
 
நம்முள் ஒரு பாசிடிவ் எண்ணம் தோணும் வண்ணம் இருக்கும் எழுத்து நடை, நம் வாழ்க்கையை எவ்வாறு எதிர் நோக்குகிறோம் என்று நம்மை நாமே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு புத்தகம்.

முக்கிய கதாபாத்திரங்கள்
மரியா - கதையின் நாயகி
ரோஜர் - வெளிநாட்டு (ஸ்விசர்லாந்து) கிளப் ஓனர்; வெளிநாட்டு அழகிகளைதன் கிளப்பிற்கு நடனமாட வேலைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர்
ஹைதி - வாடகை நூலகத்தின் இருக்கும் நபர்
மிலன் - “Copacabana”பாரின் முதலாளி
நியா - பணியிடத்தில் இருக்கும் மரியாவின் சக தோழி
ரால்ப் ஹர்ட் - ஒரு புகழ்பெற்ற ஓவியன்
டெரன்ஸ் - பணக்கார ஆங்கிலேயன், பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவன்

கதைச்சுருக்கம்
மரியா என்ற இளம்வயது பிரேசில் பெண், தன் சிறு வயது பால்ய காதலை மனதில் கொண்டு, காதலை முற்றிலுமாக வெறுக்கிறாள். ரோஜர் என்ற தொழிலதிபர் கொடுக்கும் ஆசை வார்த்தைகளில், வெளிநாட்டு வேலை என்ற மாய பிம்பத்தில் சிக்கி, கொத்தடிமை வாழ்க்கையில் சிக்குகிறாள். ஒரு வருடம் முழுவதும் வேலை செய்தாலும், தான் நாடு திரும்ப மட்டுமே பணம் ஈட்ட முடியும் என்ற நிலை. தன் கனவெல்லாம் சுக்குநூறாக உடைகிறது. இருப்பினும், என்னை போல புலம்பி தள்ளாமல், வாழ்க்கையை ஏற்று பாிடிவ்வாக முன்னேறுகிறாள்.

இச்சமயத்தில் தன் சாமர்த்தியத்தால் ரோஜரிடமிருந்து மீண்டு, ஊருக்கு பயணிக்க தீர்மானிக்கையில் விபச்சாரம் தன் வாழ்வில் எதிர்பாரா விதமாக குறுக்கிடுகிறது. வாழ்க்கையில் தோற்ற பிம்பத்துடன் நாட்டுக்கு செல்ல வேண்டுமா என இதில் கிடைக்கும் அதிகப்படியான பணம்  (Easy Money) இவளை யோசிக்க வைக்கிறது. தன் பயணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுகிறாள்.

மிலன் என்ற நபர் நடத்தும் ‘கோபகபானா’ என்ற இரவு பாரில், நடனமாடவும் விபச்சாரம் செய்யவும் சந்தர்ப்பம் அமைகிறது. இவ்வாறான சூழலில் தன் ஆன்மாவை, தன் மனதை எவ்வாறு பாசிடிவ்வாக வைத்துக்கொள்கிறாள் என்பதில் தான் என்னே ஒரு மேஜிக் எழுத்து நடை. காதலே கூடாது என்று இருப்பவளிடம் காதல் பூகம்பமாக பூக்கிறது, ரால்ப் ஹார்ட் என்ற இளம்ஓவியன் மூலமாக.

இவள் திட்டமிட்டப்படி ஒரு வருடத்தில் நாட்டிற்கு சென்றாளா? அல்லது ஈஸி மனி என்ற வலையில் நிறைந்திரமாக விழுந்தாளா? ரால்ப் ஹார்டுடனான காதல் என்னவானது என்பதே நாவலின் மையம். படிக்க படிக்க ஆர்வமூட்டும் எழுத்துகள்.....

நான் ரசித்த துளிகள்

 * இதன் ஆசிரியர் நினைத்திருந்தாரேயானால் இந்நாவலின் களத்தில் சோகத்தை பிழிய பிழிய கொடுத்திருக்கலாம்.  ஆனால் நாம் எதிர்பார்க்கா வண்ணம், அட்டகாசமான ரசிக்கும் படியான பாத்திரப்படைப்பு, மரியா. 

* லெவன் மினிட்ஸ் பற்றியிளக்கம் நாம் அறியும் இடம், அட்டாசம். என்னால் அை வார்த்ையால் கத்ுடியில்லை.
எல்லாத்தையும் பாசிடிவாக நோக்கும் எண்ணம். செய்யும் தொழிலில் ஒரு தொழில் நேர்த்தி (Professionalism), எதற்காக ஆண்கள் விபச்சாரத்தை நோக்கி வருகிறார்கள் என்ற உளவியல் பார்வை, தொழிலின் நேர்மை, அவளின் மனம் எவ்வாறு சிந்திக்கிறது, அவள் எவ்வாறு உயிர்ப்போடு இருக்கிறாள் என்று அனைத்தும் அருமை..... வாசித்தால் மட்டுமே கிடைக்கும் ஆனந்தம். 

* மரியாவின் சிறு வயது காதல் (Puppy Love) முறிவிற்கான காரணம், அட்டகாசம்... பென்சில் இருக்கா என கேட்டு, பதில் கூறாமல் மியபோவதால் காதல் முறிவு என கூறுவது வாவ்...

* மரியாவின் பதின்பருவத்து காதல், அதிலும் தோல்வியில் முடியும் காரணி நாம் அறியும் இடம் மிகுந்த சுவாரஸ்யமானது. கிஸ் அடிக்கும் போது, வாய் திறக்காமல், பல்லை காட்டியதால் :) :) :) ஹ

* நியா, இவளிடம் சொல்லும் தொழில் நுணுக்கம், தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள டைரி எழுதுவதும் ,அதின் மூலம் நாம் அவளின் மனதை அறியும் யுத்தி ரசிக்க வைத்தது.

* இடையில், அதீத துன்பத்தின் இறுதியில் இன்பம் காண்பது போன்ற சாடிசம் பற்றிய விளக்கங்கள், பண்டைய காலத்து புனித செக்ஸ் பற்றிய குட்டி கதைகள் நம்மை வேறொரு களத்திற்கு இட்டுச்செல்லும். சிலருக்கு மொக்கையா இருக்கும், எனக்கும் தான்....

*ியான் இத்ாள் அடையா இன்பம், டெரன்ஸ் என்பால் அடையம் ுணம், அில் இரந்து மியாவின் எண்ணம் மாறுபும் இடம் அருமை. டெரன்ஸ் என்பவன் பிறரையும், தன்னையும் துன்புறுத்தி உடல் இன்பம் காணும் தன்மை பற்றி விவரிக்கும் இடம், ஒரு கட்டத்திற்கு மேல், துன்பமும் இன்பமாக மாறுகிறது என்ற விளக்கம், என்னை பல்வேறு சிந்திக்க வைத்தது. அதற்கு காரணம், என் நண்பர் ‘செந்தில் முருகன்’ திருச்சந்தூரில் தான் ஒரு முறை அலகு குத்துவதை பற்றிய குறிப்பை வாசித்தது நினைவடுக்கில் வந்தது. ஒரு வலியை விட இன்னொரு அதீத வலி அதை முற்றிலுமாக மறைக்க செய்யும், நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறி இருப்பார்.

* சோனியா என்ற ஒரு பெண்ணின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு, ஆசிரியரால் எழுதப்பட்ட நாவல்.


* ரால்ப் ஹார்ட்கும், மரியாவிற்கும் இடையில் நடக்கும் காதல், காமம் பற்றிய வர்ணிப்புகள் கவிதை :) :) :)

* கிளைமாக்ஸ், ஒரு தமிழ் படம் கொடுக்கும் உணர்வை கவிதையாக கொடுக்கும்.


* போர்சுகள் கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றுகிறது.(பதின் பருவத்து காதலை விவரிக்கும் இடம், மரியாவின் அறியாமையில் சொல்லும் திரைப்பட காட்சிகள் எல்லாம் நம் சினிமா போலவே இருக்கு)


* நாவலின் முதல் வரியே, Once Upon a time, there lived a Prostitute in a small town என்று அதிரிபுதிரியா தொடங்கும் இடம், அசத்தியது. (குழந்தைகளுக்கு சொல்லும் கதை நடையில், எப்படி ஒரு விபச்சாரி வர முடியும்!!!! என்று தொடங்கும் இடமும், அதற்கு ஆசிரியரே தரும் பதில், At every moment of our lives, we all have one foot in a fairy tale and the other in the abyss.


நான் ரசித்த சில வரிகள்

* When I had nothing to lose, I had everything. When I stopped being who I am, I found myself (மிகவும் பிடித்த வரிகள்)

* I can choose either to be a victim of the world or an adventurer in search of treasure. It's all a question of how I view my life (மிகவும் பிடித்த வரிகள்)

* Everything tells me that I am about to make a wrong decision, but making mistakes is just part of life. What does the world want of me? Does it want me to take no risks, to go back to where I came from because I didn't have the courage to say "yes" to life?”

*  Life moves very fast. It rushes us from heaven to hell in a matter of seconds

* Its best to live as if it were the first and last day of my life

* The true experience of freedom: having the most important thing in the world without owning it

*  No one loses anyone, because no one owns anyone

* Life always waits for some crisis to occur before revealing itself at its most brilliant

* The strongest love is the love that can demonstrate its fragility

* Don't listen to the malicious comments of those friends who, never taking any risks themselves, can only see other people's failures

* I'm not a body with a soul, I'm a soul that has a visible part called the body

* Considering the way the world is, one happy day is almost a miracle

* Sometimes life is very mean: a person can spend days, weeks, months and years without feeling new. Then, when a door opens - a positive avalanche pours in. One moment, you have nothing, the next, you have more than you can cope with

* Dreaming is very pleasant as long as you are not forced to put your dreams into practice

* you only know yourself when you go beyond your limits

* A time to be born, and a time to die;
A time to plant, and a time to pluck up that which is planted;
A time to kill, and a time to heal;
A time to break down, and a time to build up;
A time to weep, and a time to laugh;
A time to mourn, and a time to dance;
a time to cast away stones, and a time to gather stones together;
A time to embrace, and a time to refrain from embracing;
A time to get, and a time to lose;
A time to lose; A time to keep, and a time to cast away;
A time to rend, and a time to sew;
A time to keep silence, and a time to speak;
A time to love, and a time to hate;
A time of war, and a time of peace

இன்னும் இது போல், நிறைய இருக்கு.....

A Salute to Paulo Coelho.


கண்டிப்பா உங்க எல்லோருக்கும் பிடிக்கம் என நினைக்கிறேன். உங்க மேலான கருத்துக்களை தெரியப்படுத்துங்க, நண்பர்களே.....