செவ்வாய், 30 அக்டோபர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய்

பக்ரீத் பண்டிகையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருக்க வேண்டும். அதுவும் துபாய் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருந்தால் சொல்லவே தேவையில்லை. துபாய், பக்ரீத் என்றால் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். நிறைய மால்களில், கடைகளில் உண்மையான தள்ளுபடி விற்பனை, சிறப்புப் பேருந்துகள், 23 மணி நேர மெட்ரோ ரயில்கள், துபாய் பீச் பார்க்களில் எல்லாம் பெரும் திரளான கூட்டம், அலைமோதும் டூரிஸ்ட் கூட்டம், ஊரு பூரா காணுமிடமெல்லாம் மின் விளக்குகளால் அலங்கரித்து நம்மை ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு உட்படுத்திவிடுவார்கள்.

ஈத் விடுமுறை வருகிறது என்றாலே, நீ எங்க போற, நான் இங்கு போகப்போகிறேன் என்றுதான் எல்லோரிடமும் ஒரே பேச்சா இருக்கும். நாமும் கண்டிப்பா எங்காவது நிச்சயம் போவோம், அல்லது போகத் தூண்டப்படுவோம். போதாகுறைக்கு 4, 5 நாள் எல்லா அலுவலகத்திற்கும் விடுமுறை வேறு. விதி வலியது பாஸ்……….

இது போதாதா....!! எளிமையா விளங்க சொல்லனும் என்றால் நம்ம ஊர் தீபாவளி போல, இவங்களுக்கு ஈத் திருநாள் (பக்ரீத்). நீங்கள் பிரியப்பட்டால், இந்தத் திருவிழாவைப் பற்றித் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

நான் ஒரு நாள் பயணமாக, காரில் ஒரு லாங்-டிரைவ் போகலாம் என்று முடிவெடுத்து, சனிக்கிழமைக்குத் தேதியும் குறித்தாயிற்று. எங்கு செல்வது என்று திட்டமேதும் வகுக்கவில்லை. ஆனால் எல்லோரும் போகும் அதே வழியில் போகாமல், புதிய அறியப்படாத ரோட்டில் போகலாம் என்ற எண்ணம் உதித்தது. மேலோட்டமாக, ஹத்தா வழியாகச் சென்று ஃபுஜேரா அடைந்து, வீடு திரும்பலாம் என்பது தான் அடிப்படைத் திட்டம். நான், மகன் யோகவ், மனைவி, இரு தங்கைகள் மற்றும் என் அலுவலக நண்பன் சார்ல்ஸ். இவர்தான் காரோட்டுனர், ஏன்னா என்கிட்டதான் லைசன்ஸே இல்லியே...

ஹத்தா (Hatta)...

ஹத்தா என்பது துபாயிலிருந்து சுமார் 100கி.மி. தொலைவில் அமைந்துள்ள துபாயின் சிறிய டவுன். நம் நாட்டின் ஒப்பீட்டில் ஒரு சிறிய கிராமம் அளவில் இருக்கும் டவுன் (town), அவ்வளவே. வீட்டில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும்போது, சிறிய அளவில் மட்டும் பெட்ரோல் அடித்துக்கொண்டு கிளம்பினோம். இத்தனை தொலைவு செல்லும்போது கார் பெட்ரோல் டேங்க் முழுதும் நிரப்பிக் கொண்டு செல்வதுதானே உத்தமம் என்று நீங்க சொல்வது கேட்கிறது. இதற்கான விடை நீங்களே பின்பு அறிவீர்கள். அதுவரை உங்கள் யூகத்திற்கு விடுகிறேன்.

இந்த சிறிய டவுனுக்கா இத்தனை தூரம் போக வேண்டும் என நினைத்தீர்களா? ஹத்தா சிறப்பு என்னவென்றால், இது பலப்பல சின்னஞ்சிறு ’ஹஜ்ஜார்’ எனும் மலைகளால் சூழ்ந்த ஒரு ரம்மியமான பகுதி. மேலும் துபாய் இருக்கும் கடல் மட்டத்தைவிட, மேல இருப்பதால் சீதோஷ்ன நிலையும் நன்றாக இருக்கும். மொட்டை மலைகளாக இருந்தாலும் நல்ல காற்று வீசும் ஊர்.
 

ஹஜ்ஜார் எனும் சிசின்னஞ்சிறுமலைகள்
  ஹத்தா போகும் வழியில்தான் ’டசர்ட் சஃபாரி’ என்று சொல்லப்படும் பாலைவனத்தில் காரை ஓட்டி சாகசம் செய்யும் இடம் இருக்கு. நிறைய டூரிஸ்ட் கம்பனிக் கார்கள் சுற்றி திரிவதை காணலாம். இதற்கென தனிக்கட்டணம், முன்பதிவு ஆகியவை தேவை.Desert Safari Ride
மேலும் போகும் வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் சுற்றித் திரிவதையும் காணலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் ஒட்டகங்கள் ரோட்டின் ஓரமாக நடந்து வரும். நாம் வாகனத்தை நிறுத்திவிட்டு அதை தொடலாம், போட்டோ எடுக்கலாம், உணவளிக்கலாம். எனக்கும் அதிர்ஷம் அடித்தது என்றால் பார்த்துக்கோங்க.

ஹத்தா போகும் வழியில் - பாலைவனம்
ரோட்டோரமாக வந்த ஒட்டகங்கள்


ஒட்டகத்தை பார்த்து ரசிக்கும் யோகவ்
என் மகன் ஒட்டகத்தை, அது வரை புத்தகத்தில் மட்டுமே பார்த்துள்ளான். அதை நேரில் கண்டதும், ஏக குஷியாகிட்டான். என் தோலின் மீது அமர்ந்து, ஒட்டகத்தை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் மகிழ்ச்சி முகத்தில் பொங்கி வழிந்தது. என்னாதா இருந்தாலும், தொடுணர்சியின் சுகமே தனி தானே....!!

பின்பு பயனத்தை ஹத்தாவிற்கு தொடர்ந்தோம். வழி நெடுகிலும் என் மகன் யோகவ், அப்பா ஒட்டகம், இப்படி சாப்பிடுகிறது, நான் அதை தொட்டேனே என்று ஒரே கலாட்டா, நம் காதுகள் செவுடாகும் வரை. :) :) :) ஹத்தா ஊரை நெருங்குவதற்கு 15கி.மி. முன், போலீஸ் இடைமறிந்த்தார்கள். பயம் வேண்டாம். அது ஓமன் நாட்டின் எல்லை. ஹத்தா ஊரை சென்றடைய ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும். ஒரே குழப்பமாக இருக்கிறதா, இது துபாயின் டவுன் என்று சொன்னேன் என்று?

இந்த ஊரின் புவியியல் அமைப்பு அப்படி. ரோடு வழியாகச் சொல்லும் போது, ஒரு சிறிய பகுதி ஓமன் நாட்டிற்கு சொந்தமானது. ஆகையால் நம் எமிரேட்ஸ் ஐடி கார்டை காட்டிவிட்டு, பயனத்தை தொடரலாம். உங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக மேப் படத்தை தருகிறேன், காணுங்கள்.


 பத்தி அதிகமாக வருவதால், பகுதி பகுடியாக தொடர்கிறேன், உங்கள் விருப்பம், ஆதரவு இருக்கும் பட்சத்தில்.

திங்கள், 29 அக்டோபர், 2012

Ustad Hotel – Malayalam Movie

உஸ்தாட் ஹோட்டல் – Ustad Hotel – Malayalam Movie

இப்படி ஒரு படம் பார்த்து வெகு நாளாச்சு. என்னடா இவன் எப்போ பார்த்தாலும் மலையாளப்படம் பற்றி சொல்றானே என்று நீங்க நினைப்பது புரியுது. தமிழ், இங்கிலீஷ் படம் என்று பிரிச்சுமேய கேபிள் சங்கரும், ஹ
ாலிவுட் பாலாவும் இருக்காங்க. நாம அவிங்க கிட்டக்ககூட நிக்க முடியாது, மூஞ்சி முகரை எல்லாம் பிஞ்சிடும். :):):)


 
நான் இங்கு சொல்வது எல்லாம் என்னை போட்டு புரட்டிய மிக அற்புதமான படங்கள் மட்டுமே.... சரி விசயத்திற்கு போவோம்.

மிக சிம்பிளான கதை. ஹோட்டல் பிஸினசையும் மனித நேயத்தையும் முடிச்சு போடும் ஒரு கதைகளன், அவ்வளவே. ’இங்கு சாப்பிட வருபவர்களின் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது, சமைக்கும் நம் மனதும் நிறையனும்’. எதற்காக சமைக்கிறோம் என்று உணரனும். இதை வைத்துகொண்டு ஒரு முழுப்படம் ஓட்ட முடியுமா என்றால் ஒரு காவியமே செய்ய முடியும் என்று நெத்தியில் அடிச்சு சொல்லிருக்கும் படம்.

உஸ்தாட் ஹோட்டலை கரீம் என்ற வயதான முதியவர் (திலகன்) நடத்திவருகிறார். இவரின் பேரன் ஃபைசல் (துல்கர்) இன்றைய நவீன காலத்து இளைஞனின் லட்சியங்களோடு எதிர்பாரா விதமாக இங்கு வந்து சிறிது காலம் தஞ்சம் புகுகிறார். உஸ்தாட் ஹோட்டல் பிரியாணி அந்த ஏரியாவில் மிகப்பிரபலமாக இருந்தும், ஹோட்டல் கடன் சுமையில் தத்தளிக்கிறது. அதற்கு காரணம் தன் தாத்தா காசுக்கு அலையாமல், வருபவர்களின் மனசே பெரிதென்று இருப்பவர்.

நிறைய குட்டி குட்டி கதைகள். ஃபைசல் பிறக்கும் கதை, ஃபைசலுக்கும், நித்யா மேனனுக்கும் நடக்கும் பெண் பார்க்கும் படலம், பின்னாளில் ஏற்படும் மெல்லிய நட்பு கலந்த காதல், நித்யா மேனன் ஒரு முஸ்லீம் பெண், வீட்டிற்கு தெரியாமல் அடிக்கும் லூட்டி, அவள் அனுபவிக்கும் சுதந்திரம், பேரனுக்கும் தாத்தாவிற்கும் இருக்கும் முரண் மற்றும் அன்பு, ஃபைசலுக்கும் தந்தைக்கும் இருக்கும் லட்சிய மோதல், இறுதியில் நம்ம ‘பசங்க’ பட வாத்தியார் ஜெயப்பிரகாஷின் குட்டி நெகிழ்ச்சியூட்டும் கிளைக்மாக்ஸ், ஃபைசல் மனிதநேயம் பற்றி உணரும் தருணம் எல்லாம் படிப்படியாக காவியமாக விரிகிறது.

ஃபைசலாக (Faizal) மம்முட்டியின் மகன் துல்கர் சுல்தான். இவர் பிறக்கும் குட்டி கதையே ரகளை. இவர் தந்தை தனக்கு, பையன் தான் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்பட்டு அடுத்தடுத்தாக 4 பெண்களாக பிறக்கிறார்கள். ஐந்தாவதாக இவர் பிறக்கும் முன் வெறுத்து துபாய்ல வேலைக்குபோய் நல்ல பணக்காரனாக முன்னேறுகிறார்.

துல்கர் படத்திற்கு என்ன தேவையோ அதை பர்ஃபெக்டா கொடுத்து நடித்து விளையாண்டிருக்கார். குறிப்பா இவர் வாய்ஸ்ல ஒரு அட்ராக்‌ஷன் செம்மயா இருக்கு. செம வசீகரிக்கும் குரல். இனிமேல் மம்முட்டியோட மகன் துலகர் என்று சொல்லக்கூட தேவையில்லை போல.

திலகன் என்னா நடிகன்யா..!!! நமக்கு தெரிந்ததெல்லாம் ‘வர்னும் பழைய பன்னீர்செல்வமா வர்னும்’ என்று சத்திரியன் படத்தில் சொன்ன திலகனைத்தான். படத்தின் நிஜ ஹீரோவே இந்த மனுஷன் தான். உண்மையில் இவர் ஒரு மகாநடிகன், ’ஜஸ்ட் லைக் டட்’ நம்ம சிவாஜிய கிராஸ் பண்ணிடுவார் மனுஷன் - மிகைப்படுத்திய நடிப்பு துளியும் இல்லாமல். இவர் நடித்த கடைசி படமும் கூட.

ஹீரோயினாக நித்யா மேனன் (வெப்பம் பட ஹீரோயின்) அருமையான நடிப்பு. ஒரு இளமை துள்ளல் படம் பூரா பரவிகிடக்கு. குறிப்பா தான் வெளியில் சுதந்திரம் அனுபவிக்கும் காட்சி, நடுரோட்டில் டிரைவரிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சி, அந்த சமயத்தில இவள் சிரிப்பு கொள்ளை அழகு. பார்த்துட்டே இருக்கலாம்....இன்னொன்று படத்தின் இசை...... அட்டகாசம், ஆனந்தம்...ஆசம் (Awesome)!!! சூஃபி இசை படம் பூரா படர்ந்து கிடைக்கிறது. அவ்வளவு இனிமை அதை கேட்க. சூஃபியையும், வெஸ்டர்ன் இசையும் சேர்த்து சில இடத்தில் கொடுத்துள்ளார்கள்.... வர்ணிக்க வார்த்தையில்லை.

இன்னொரு குட்டி கதை சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.... இந்த மேலே போஸ்டரில் இருக்கும் காட்சி....அதாவது திலகன், சுலைமானி டீயை எப்படி செய்தார் என்று துல்கர் கேட்கும் இடமும், அதை தொடர்ந்து திலகர் சொல்லும் தன் கதையும் அருமையோ அருமை...... இந்த காட்சியை பார்த்தால் தான் அதன் பரவசம் புரியும். கீழே கொடுத்துள்ள பாடலை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=wp-_XtXAPF4

கண்டிப்பா பாருங்க... மிஸ் பண்ணவே கூடாது....!!!

இந்த படம் முடியும் போது, நீங்களும் இனிமேல் நாம் சாப்பிடும் உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். அதுவே இந்த படத்தின் வெற்றி.

’Pranchiyettan & the Saint’ - Malayalam Movie

நீங்க விழுந்து விழுந்து வகுரு வலிக்க சிரிக்க ஆசையா?? ரிலேக்க்ஷா ஜாலியா ஒரு படம் பார்க்கனும்னா உடனே ’Pranchiyettan & the Saint’ என்ற மம்முட்டி நடித்த மலையாள படம் பாருங்கள்.... உங்க வகுத்தை பதம்பார்க்க போவது உறுதி. அதுக்கு நான் கியாரண்டி.


பிராஞ்சியேட்டனாக வரும் மம்முட்டி, திரிசூரில் பெரிய தொழிலதிபர், நல்ல மனிதன். அளவிற்கு மேல் பணமிருந்தும் புகழ் இல்லை, அதற்கு காரணம் தமக்கு படிப்பிலை, (10ஆம் வகுப்பு தேராதவர்) அதனால் தான் யாரும் தம்மை மதிக்கவில்லை என்று நம்புகிறார்.

இவருடன் இருக்கும் அடிபொடிகள், இவரை புகழ் அடைய அடிக்கும் லூட்டிகள் தான், நம் வயிற்தை பதம் பார்க்கும் பெரும் பகுதி.

கிளப் பிரசிடண்ட் தேர்தலில் போட்டி போட செய்து தோற்பது, ஆஸ்கார் விருது வாங்கிய ஒருத்தருக்கு பாராட்டு விழா நடத்தி புகழ் அடைய முயற்சிப்பது, அவ்விடத்தில் பத்மஸ்ரீ வாங்கியவர் வந்தயுடனே மம்முட்டியை கண்டுக்காமல் எல்லோரும் ஒதுக்குவது, உடனே நாமலும் பத்மஸ்ரீ குறுக்கு வழியில் காசு கொடுத்து வாங்கி புகழ் அடையலாம் என்று சந்து கேப்பில் முயற்சிப்பது என்று எல்லா செய்தும் தோல்வியே....ஆனால் அனைத்தையும் சிரிக்க சிரிக்க சொல்லிருக்கிறார்கள்.... டயலாக் காமெடி எல்லாம் சரவெடி, அடி தூள்.

இதற்கிடையே நம்ம பிரியாமணிக்கூட ஒரு சிறிய அழகான க்யூட் காதல், பௌலி என்ற மாணவனை வகுப்பில் தேர்ச்சி அடைய செய்யும் மம்முட்டியின் பிராயத்தம் என கதை நகரும்.

படம் முழுதும், மம்முட்டி கடவுளிடம் நேரில் பேசுவது போல் கதை நகரும்.

குறிப்பாக மம்முட்டி திரிசூர் பாஷையில் பேசும் விதம் டயலாக் டெலிவரி, செம அருமை.

இன்னஷண்ட் மம்முட்டியிடம், செவாலே சிவாஜி விருது சும்மாவே தராங்களாம், பைசா செலவு செய்ய தேவையில்லை என்று சொல்லும் இடமும், அதற்கு மம்முட்டி, இன்னஷண்டை போட்டு பிரிச்சு மேயும் பகுதியும், கடவுள் மலையாளிகளை குறிப்பிடும் பகுதியும் செம நக்கல் அடிச்சு விளையாடிருக்காங்க...
 
ஹைலைட்டே கிளைமாக்ஸில் கடவுளையும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டி தள்ளிருப்பாங்க.... :) :) :) சேன்ஷே (chance' ae) இல்லை. அந்த டயலாக்கும் நீங்க பார்த்தா தான் புரியும். :) :) :)

என்ஞாய்...

'22 Female Kottayam' - Malayalam Movie review

இந்த வாரம் '22 Female Kottayam' என்ற மலையாளம் திரைப்படம் பார்த்தேன். அருமையான படம். 
மலையாள படத்திற்கே உரிய கதைக்கரு, அதையொட்டி செல்லும் slow ஸ்கிரீன் ப்ளே.... Heroine ஆக்டிங் பிரமாதம். அதிலும் ரெண்டாம் பாதியில், அவள் நடிப்பு அடி தூள்...

கேரளாவில் அதி
கப்பெண்கள் நர்ஸிங் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு செட்டிலாகும் வழக்கம் கொண்டவர்கள் அங்கிருக்கும் இக்காலத்து பெண்கள் (குறிப்பாக கோட்டயம் பெண்கள்). வீட்டிற்கு ஒரு நர்ஸ் நிச்சயம் இருப்பார்களாம் அங்கு. அவர்கள் வாழ்க்கையில் நடக்கும், எதிர்நோக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கலம்..


சாதாரணமாக பார்த்தால், ஒரு பழிக்கு பழி வாங்கும் கதை தான். அதை இந்த பெண் எப்படி இவர்களின் வலையில் மாட்டுகிறாள், அவள் அடுக்கும் முடிவு, அதை எப்படி செய்கிறாள் என்பதில் தான் படத்தின் வெற்றியே...
குறிப்பாக கிளைமாக்ஸ் மிக அருமை.

தமிழ்ல இப்படியெல்லாம் வர வாய்ப்பே இல்லை...

'Diamond Necklace' - Malayalam Movie Review


'Diamond Necklace' என்ற மலையாள படம் நான்கு ஐந்து நாட்களுக்கு முன் பார்த்தேன். அது தந்த ஹேங் ஓவர் இன்னும் தீரலை, ஆதலால் பகிர்கிறேன்.

இயல்பான கதை, குறிப்பாக Gulf ல் வாழும் இன்றைய இளைஞர்களின் நிலை அப்படியே பிரதிபலிக்கும் கதைக்களன். இங்கு 'Cre
dit Card' ஐ சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் முறையை தோலுறிச்சு காட்டும் படம்.

இந்த கிரெடிட் கார்ட் நம்மை எப்பேற்பட்ட சூழ்நிலைக்கு தள்ளும் என்பதை மிக எதார்த்தமாக, அதே சமயம் அழுது வழியாமல் ஜாலியாகவும் சொல்கிறது.

டைரக்டர் ஃபைசலின் வாரிசு ‘Fahad Faizal’ நடித்த படம். (22 Female Kottayam) படத்திலும் இவர் நடிப்பு சிறப்பாக இருக்கும். நல்ல நிலையில் இருக்கும் ஒரு டாக்டர் இளைஞன், ஆனால் பொறுப்பில்லாமல் செலவு செய்யும் ஜாலி ஆள். இதற்கிடையில் தன்னுடன் வேலை செய்யும் நர்சுடன் காதல், கடன் தொல்லையால் சந்தர்ப்ப வசத்தால் வேறொரு பெண்ணுடம் கல்யாணம், பேஷண்டாக வரும் பெண்ணுடன் ஏற்படும் இயல்பான நட்பு , பின்பு மெல்லிய  காதல்.

ஒரு கட்டத்தில், credit Card கடன் தொல்லை தாங்காமல், தன் தோழியின் (பேஷண்ட்) Diamond necklace ஐ திருட முனையும் ஒருத்தனின் கதை. படிக்கதான் சீரியலாக இருக்கே ஒழிய, படம் பூரா டயலாக் காமெடி, கதையுடன் நிறைய இருக்கு.

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்.

சீனிவாசன் கடைசியில் சொல்லும் செய்தி அருமை. 21 வருடம் வேலை செய்து ஒரு வீடு தான் வாங்க முடிந்தது. இங்கு செலவு செய்ய தூண்டும் காரணிகள் அதிகம், ஆனால் ஒரு கனம் ஊரில் நம்மை சார்ந்து இருக்கும் பெற்றோர், மனைவி, குழந்தைகள் கண் முன்னாடி வரும் பொழுது நம்மை அடக்கி ஆள பழக்கி கொள்கிறோம் என்று கூறும் செய்தி அபாரம்.

படம் முழுதும் துபாய்ல எடுத்து இருக்காங்க. என் ஆபிஸ் அருகில் கூட ஒரு காட்சி இருக்கு. எப்போ எடுத்தாங்கன்னே தெரியுலை.