புதன், 6 மார்ச், 2013

’யோகவும் நானும்’ (Yogev & me)

இத்தலைப்பில் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். எனக்கும் என் மகனுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை கோர்த்து தொகுத்தளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.


னால் நாமதான் சோம்பேறியின் முழு ஏஜண்ட் ஆச்சே..... மேலும், எழுத ஆரம்பித்தால் நிறைய உண்மைகள் எழுத வேண்டிவரும், பின்விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்று தான் ஒரு தயக்கம்...??? (இப்போ ஒழுங்கா அட்லீஸ்ட் மூணு வேலை சாப்பாடு கிடைக்குது, அதுக்கும் ஆப்பு தான் JJJ)

அம்மாவுடம் யோகவ் - பிறந்த ஒரு நாளில்
நேற்று இரவு சூர்ய குமாரிடம் பேசுகையில், எதேச்சையாக அவரிடம் பகிர்ந்த ஒரு பகுதியை, அவர் எல்லோருக்கும் நீங்க சொல்லுங்க என்று ஊக்கம் கொடுத்தார். அது ஊட்டமா? ஆப்பா? என்பது போகப்போகத்தான் தெரியும். மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வெட்டி ஆவேசத்தின் காரணமாக இதோ ஆரம்பிக்கிறேன். எனக்கு கஞ்சியேனும் கிடைக்க பிராத்தியுங்கள் JJJ உங்களுக்கும் தருகிறேன்.

சூர்யகுமாரிடம் பகிர்ந்த பகுதியை மட்டும் இப்போ தருகிறேன். மேலும், அனைத்து பகுதியும் ஒன்றின் பின் ஒன்றாக உங்களை இம்சிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

பெயர் காரணம்

என் மனைவி கருவுற்ற போதே, எனக்கு மகன் தான் என்பதில் ஒரு அசட்டு (அசைக்க முடியா) நம்பிக்கை. மனதளவில் ஆணோ, பெண்ணோ எதுவானாலும் ஓகே தான்... ஆனால் பையனா இருந்தால் எனக்கு ஒரு கம்பெனி கிடைக்குமே என்ற கேல்குலேஷன் தான் JJJ அதே போல், டாக்டரின் பரிசோதனையில் 4 மாசத்துலேயே தெரிஞ்சிருச்சு ... நமக்கு பிறக்கப்போவது பையன் தான் என்று. அன்றைய நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது.... எவ்வளவு வார்த்தை போட்டாலும் அந்த உணர்வை கொடுக்கலாகாது. பையன் தான்னு உறுதியானவுடன் அப்படி ஒரு பிரகாசமான சிரிப்பு.... இன்னும் அந்த காட்சி கண் முன்னால் வந்துப்போகிறது. (நான் நார்மலா சிரிச்சாலே ஊரே முரைக்கும்.... இதுல பிரகாசமான சிரிப்பென்றால், நீங்களே யோசிச்சுக்கோங்க).

ஆனால் கடைசி வரைக்கும் எனக்கு பிறக்கப்போவது பையன் என்று யாருக்கும் சொல்லவில்லை. தெரியவில்லை என்றே சமாளித்தேன், என் அம்மா உட்பட. பிறந்த நாள் அன்று நடந்த சம்பவம் பற்றி பின்னே சொல்கிறேன். இப்போ பெயர் காரணத்திற்கு வருவோம்.

டாக்டர் சொன்னவுடன், என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.( எப்போ? 4 மாசத்திலிருந்து....) எப்படியும் ஊருக்கு போனா, ஜாதகம், நியூமராலஜின்னு சொல்லி தாளிப்பாங்கன்னு என்று முடிவு பண்ணி... என்னவா இருந்தாலும் A முதல் Z க்குள் தானே வரும் என்று அதிபுத்திசாலியாக யோசித்து, குழந்தைக்கு பெயர் தேட ஆரம்பித்தேன்..
ஆஸ்பத்திரியில்
’A' எழுத்தில் ஆரம்பிக்கும் எனக்கு பிடித்த எல்லா பெயர்களையும் தேடி தேடி தொகுத்தேன். அதே போல B, C, D என. உதாரணம் - A என்றால் அகில், அபிலேஷ், அபினௌவ், என ஒரு பெரிய லிஸ்ட் B என்றால் பிஜேஷ், பீமா, புவன் என ஒவ்வொரு எழுத்திற்கும் மாசக்கணக்காக தேடி ஒரு டேட்டாபேஷ் ஃபைலே போட்டுட்டேன். (MS Excel file).

இவ்வாறு V வரை தொகுத்து, X, Y, Z ஐ நிராகரித்தேன். எப்படியும் A to V குள்ள தான் வரும், X,Y,Z வரவாப்போகுதுன்னு நினைத்துக்கொண்டேன்..... எனக்கு தனிப்பட்ட முறையில் மிக மிக பிடித்த பெயர்கள் ப்ரனாவ், பீமா, பிரசன்னா.. முடிந்தால் எல்லோரையும் சமாதானம் செய்து ப்ரானவ் வைத்து விடலாம் என்பது திட்டம்.


னால் விதி வலியது பாஸ்....ஜத்ின் மேலம்பிக்கையில்லை என்றாலும், பையின் வாழ்க்கையில் விளையாடக்கூடு என்று அம்மா சொல்லிட்டாங்க.... அால் ஜம், நியூமாலிப்பி வைக்காம் என்று சொன்னாங்க. (நாமிர்பார்த்ானே!). முக்குள் நக்கான் எல்லா எழத்ுக்கிலும் பெயர் இருக்க... அப்புறம் என்ன ம் பாலுமார...??? என்ரினைப்பு. அப்பியே செய்யாம் ம்மி என்று ஜோசியிடம் போனோம். என் மில், நியூமாலிலிஞ்சி போன, நாமொல்றெயில் சில எழத்ுக்கை (A,R,S) போல ோ ஒன்னு கூட்டி கிப்பாங்க என்றிடத்ிரான எண்ணம். அப்பும், P or Bலந்தால் சூப்பர் என்று இருமாப்போனேன். என் திிட்டம்அனத்ும் அப்பொறுங்கியு....

கிராதகன், y எழுத்தை தந்தான். சாய்ஸே கொடுக்கலை பிக்காலிபய... தலையே சுத்திருச்சு....அய்யகோ, நம்ம லிஸ்ட் எல்லாம் போச்சான்னு...!!! :):):) Y’ல யோசித்தால், மண்டை எல்லாம் காயுதே தவிர வேற ஒன்னும் நடக்க மாட்டிது. யோகேஷ், யோகேஷ்வரன், யோகன், என ஒருவாறு ரெடியானது.
 

யோகேஷ், ஓகே என நினைத்து சொல்லிப்பார்த்தேன், மனைவி விட்டா ஓடி வந்து ாலத்சாத்துவா போல. நல்ல வேலை, அவளால் நடக்க முடியவில்லை:):):) இருந்தும் மனசு முழு திருப்தி எனக்கேயில்லை. எங்க அம்மாவிற்கு யோகேஷ் பிடிச்சது. ப்ரனாவ்’ என்ற பெயர் என்னை போட்டு தாக்கியது. கெஞ்சிப்பார்த்தும் யாரும் ஒத்துக்கவேயில்லை. இறுதியாக அம்மாவின் ஆசைக்காகோகஷ்ல இரந்தயோக’வும், ப்ரனாவ்’ல் இருந்து ’வ்’ வையும் சேர்த்து ஒரு புது பெயர் சொன்னேன். யோகவ் என்று. 

யோகவ்’வா??? அப்படின்னா...??? என்னாது... யோகவ் வா..?? என்னடா பேரு...அத்தனை பேரும் என்னை பார்த்த பார்வை இருக்கே....அப்பப்பா.....!!! என்னா அர்த்தம் என்று கேட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க.... யோகம் என்று பொருள்ன்னு எல்லோருக்கும் அடிச்சு விட்டேன். எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்தாங்க. சிலர் பார்த்தே, எங்க போட்டிருக்கு, எங்கே எனக்கு காட்டு என்று டீடெயில் வேற.... :):):)

அடுத்து நியூமராலஜி மேட்டர்.... கூட்டு எழுத்து 1 வரனும் என்று சொல்லிட்டான், அப்பதான் பிரகாசமா இருக்கும் என்று பிட்டு வேற. பையன் வாழ்க்கைடா, ஹரி... நீ தான் எல்லா எழுத்திற்கும் அதன் எண் எவ்ளோ என்று எடுத்து வெச்சுருக்கியே... அட்ஜஸ்ட் பண்ணு நல்லா கூட்டி சொல்லு என்று அம்மா அன்பாக சொன்னாங்க.... ஒரு சைண்டிஸ்ட் (Scientist) கூட சீக்கிரம் பதிலை கண்டுபுடிச்சுருவான் போல.... இது அவ்ளோ கஸ்டமா இருக்கு...
ும் யோகும்
 என் மகன் வளர்ந்து, எனக்காக என்னடா அப்பா சேர்த்து வெச்சன்னு கேட்டிறக்கூடாது பாருங்க.. அதனால் எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியா H.Prasad அவன் பெயரில் சேர்த்தேன். இன்ு காரம் - ஒரேளான் பெரர்ய ஆளாகிட்டேனா, பிரத் ஃபேமிலின்னு பெருமையா என் மன் போட்டுக்காம்ல... :) :) :) .(அம்பானி ஃபேமிலி மிரி)  ஒரு வழியாக Yogev.H.Prasad என்று முடிவானது. எல்லோரும் அது என்னடா H.Prasad....??? ஒன்னு H.ன்னு இனிசியல் வை, இல்லைன்னா H.P என்று வை. (என் மனைவி பெயர் பிரகலா, அதனால்)

ஃபாரின் போனா, இவனுங்க இப்படி தான் என்று பாராட்டு பத்திரம் மூக்குமுட்ட நிறைய கொடுத்தாங்க... புதுசு புதுசா யோசிக்குறாங்கன்னு.... :) நம்ம சொல்றது யார் கேட்குறான்னு....:சொந்தங்கள் பாசப்பாட்டு :):):) இங்கும் சிக்கல், அது என்ன Yogev, yoghav என்று தானே வரனும் என்று...... இல்லை இல்லை, இதான் நல்லா இருக்குன்னு முடிவு பண்ணிட்டோம் என்று சமாளித்தேன். கூட்டு எழுத்து 1 வரனுமே....:)

எங்கம்மா, H. Yogev Prasad ன்னு எழுது என்று சொல்லிட்டே இருந்தாங்க, கடைசி வரைக்கும். அது என்னடா Yogev.H.Prasad என்று. நான் பாஸ்போர்டில் இப்படி இருந்தால் தான் எழுத ஈஸி என்று சால்ஜாப்பு சொல்லிட்டேன்...

ஏனோ, இவ்ளோ கலேபரத்திலும் இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்தது. இப்போ எல்லோரும் இந்த பெயர் சூப்பரா, புதுசா இருக்கே என்று சொல்லும் போது இக்காட்சிகள் நினைவிற்கு வர தவறுவதில்லை.... :):):)

ஆனால் ஒன்று...!!! இந்தியாவுல இந்த பெயர் கொண்ட ஒரே ள் என் மகன் தான். பிறகு கூகுளாண்டவரிடம் தேடிய பொழுது இது ஹீப்புரூ பெயர் என்று இருந்தது ஆச்சர்யமே...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா
பாபாபா
பாபா ....!!! (உங்கூச்சு சத்ம் எனக்கு கேட்குங்கோவ்....)


4 கருத்துகள்: