வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

The Alchemist - இறுதி பகுதி

முதல் பகுதி படிக்க
http://nondavan.blogspot.com/2013/02/the-alchemist.html

இரண்டாம் பகுதி
இவனும் அந்த அந்நிய பையன் மேல் நம்பிக்கை வைத்து அவனையே பின்தொடர்கிறான். மார்க்கெட்டில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கவே வைத்த கண் வாங்காமல் அவனை பின்தொடருகிறான். மார்க்கெட்டின் ஓர் இடத்தில் போர்வாளின் கலைநயம் இவனை சில மணிதுளிகள் கட்டிப்போடவே உறைந்து அதைக்காணுகையில், வழிகாட்டும் அந்தையகாணவில்லை. பிறஅவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அக்கடைகாரன் இவனை எச்சரித்தது இதுதான் என தற்போதுதான் உணர்கிறான். தன் பையில் ஏதேனும் தேறுமா? என பார்க்கையில் ஒரு பைசாக்கூட இல்லை. தன் விதியை நினைத்து நொந்துக்கொள்கிறான். மிகுந்த குழப்பத்தில், மெல்சிஜெடெக் கொடுத்த உரிம் & துமிம் கற்களைக்கொண்டு தன் புதையலைத்தேடி பயணம் தொடரலாமா அல்லது நாட்டிற்கே திரும்பலாமா என பார்க்கிறான். தொடரலாம் என விடை கிடைக்கவே மார்க்கெட்டை கடந்து ஒரு சிறிய மலைமீது ஏறி மிகந்திரத்ுடன் பயணிக்கிறான்.

கையில் நையைசூட இல்லை, கடும்பசியின் காரணத்தால் ஒரு படிகக்கடையின் (Crystal Shop) வாசலில் நின்று அதன் முதலாளியிடம், ான் கடையின் சன்னல்களை துடைக்கிறேன், அதற்கு பதிலாக தனக்கு உணவு தருமாறு கூறிவிட்டு அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் சுத்தப்படுத்த ஆரம்பிக்கிறான். அச்சமயம் சில வெளிநாட்டவர்கள் வந்து சில பொருட்களை வாங்குகிறார்கள். கடையின் முதலாளி, இை நல்லுனாகார்க்கிறார்.ேலும் இவனை அழைத்துக்கொண்டு சாப்பிட போகிறார். இவன் கதையை கேட்டவுடன், இங்கேயே வேலை செய்ய சம்மதமா என வினவுகிறார். இன்று ஒரு நாள் வேலை செய்கிறேன்; அதற்கான பணத்தில் எகிப்து செல்லும் நோக்கத்தை கூறுகிறான். கடைக்காரர், எகிப்து செல்ல நீ என்னுடன் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்தாலும் கூட செல்வது கஸ்டம், அது வெகுதொலைவில் இருக்குமென்று எடுத்துரைக்கிறார். வேணுமென்றால் ஊருக்கு போக பணம் தரேன், நாளையே ஊருக்கசெல் என உதவ முன்வருகிறார். இவன் சிறிது நேரம் பிலும் சொல்லாமல், இறுதியாக வேலை செய்ய சம்மதிக்கிறான்.

படிகக்கடை முதலாளியின் வாழ்க்கையும், கடையின் நிலைமை பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் அறிகிறான். கடையில் தொழில் சூடுப்பிடிக்கிறது. இவனுடைய ஒரே குறிக்கோள், கடுமையாக உழைத்து வேண்டிய பணத்தை சேர்த்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் வாங்கிக்கொண்டு எகிப்து நோக்கி செல்வதே. கடை பெரியவர், பொதுவாக ரிஸ்க் எடுக்க தயங்குபவர்; நல்ல மனிதர்; இவனின் தேடலின் தீவிரத்தை இவனைவிட நன்கு உணர்ந்தவர். இவனும் கடைக்காரரின் வாழ்க்கை பற்றிய கண்னோட்டமும், கனவு காண்பதின் முக்கியத்துவத்தையும் அவரிடம் கற்கிறான். 

11 மாதத்தில் கடை வியாபாரம் நன்கு வளர்ச்சியடைகிறது; இவனுக்கும் கமிஷன், சம்பளம் என நன்கு கவனித்துக்கொள்கிறார் அக்கடையின் முதலாளி. இதனால் வேண்டிய கையிறுப்பு பணமும் கிடைக்க வேலையில் இருந்து விடைப்பெறுகிறான்.

தான் முன்பு ஏமாந்துப்போன அதே பாரில் 11 மாதம் கழித்து மீண்டும் போய் அமர்கிறான். ஊருக்கு சென்று தன் பெற்றோர்களை சந்த்தித்துவிட்டு தன் பயணத்தை தொடரலாம் என்றவனுக்கு, கேரவேன் ஒன்று அல் ஃபயூம் (எகிப்தின் பாலைவனச்சோலை) நோக்கி செல்கிறது என்ற தகவல், திசை திருப்புகிறது. அங்கு ஒரு ஆங்கிலேயன் அறிமுகமாகிறான். காரோட்டுனர், தன்னுடைய சட்டதிட்டங்கள் பற்றிக்கூறி அனைவரையும் வண்டியில் ஏறச்சொல்கிறார். அதில் பலதரப்பட்ட நபர்கள் பயணிக்கிறார்கள். 


பயணத்தின் ஊடே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு மலர்கிறது. ஆங்கிலேயன், தான் ஒரு மிகப்பெரும் அல்கெமிஸ்டாக (ரஸவாதியாக) முயல்வதாகவும், எகிப்தில் 200 ஆண்டுகள் உயிர்வாழும் சிறப்புமிக்க அல்கெமிஸ்ட் (ரஸவாதி) இருப்பதாகவும், அதற்காகத்தான் இப்பயணம் என தன் பயனத்தின் காரணத்தை கூறுகிறான். எகிப்தில் இருக்கும் ரஸவாதியால் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என கூறுகையில் அதிசியக்கிறான். இப்படியெல்லாம் உலகத்தில் இருக்கிறார்களா என தனக்குள் சிந்திக்கிறான். 

இவன் வானத்தை, நட்சத்திரத்தை, காற்றை, சூரியனை என இயற்கையை, அதன் மொழியை அறிய முற்பட்டு அதில் ஒரு ஆனந்தம் காண்கிறான். மேலும் இவன் ஆங்கிலேயனை பார்க்கையில் அவன் எதிலும் நாட்டமில்லாமல் நிறைய புரியாத புத்தகங்களுடன் எந்நேரமும் பயணிக்கிறான். இடையில் ஒட்டகத்தின் ஓசையை கவனித்து, அதன் மொழியை ஆடுகளின் மொழிப் போலவே இயல்பாக அறியமுடிகிறது. தன் ஆத்மா சொல்வதை எந்த தொந்தரவும் இல்லாமல் கேட்க முடிகிறது. இடையில் பழங்குடியினர் சண்டை காரணமாக தங்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு தொடர்கிறது.

ஒரு வழியாக, அல் ஃபாயூமை அடைகிறார்க்ள். (அல் ஃபயூம் என்பது நைல் நதிக்கரையின் படுகையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான பாலைவனச்சோலை.) இங்கு தங்கிருக்கையில் ஃபாத்திமா என்ற அழகு தேவதையை காண்கிறான். அவள் பழங்குடியின தலைவரின் மகள் என அறிகிறான். பொதுவாக அரபிப்பெண்களின் கட்டுப்பாடு மிக அதிகம். அதையும் மீறி அவளுடன் பேச முயலுகிறான். சில நாட்களில் இருவரும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குமான காதல் அவ்வளவு அருமையாக இருக்கும்... தமிழ் பதிப்பில் பின்னிபெடல் எடுத்திருப்பாங்க என்று நினைக்கிறேன்.

தான் கற்ற உலக மொழியின் மூலம் பழங்குடியின தலைவருக்கு ஆருடம் கூற, அது அப்படியே நடந்தேறுகிறது. அதன் காரணமாக அவர்களின் கூட்டத்திற்கு ஆலோசகராக (கவுன்சிலர்) ேர்வாகிறான். இதன் பொருட்டு இவனுக்கு நிறைய பொற்காசுகளம், வசதியும் செய்து தருகிறார்கள். தன் லட்சியத்தை விட்டுவிட்டு இவளுடனே காலத்தை கடக்கலாம் என்ற என்ணம் வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் எதேச்சையாக ரஸவாதியை காண்கிறான். அவரின் மேல் உள்ள ஈர்ப்பால் அவரை பின்தொடர்கிறான்.

காதலா? லட்சியமா? என்ற தடுமாற்றம் ஏகத்திற்கு வருகிறது. ஃபாத்திமாவுடன் வாழ முடிவெடுக்கும் போது, அல்கெமிஸ்ட் (ரஸவாதி) அறிவுரை கூறுகிறார். மனம்மாறி ஃபாத்திமாவிடம் தன் லட்சியத்தை நோக்கி செல்வதாகவும், தான் மீண்டும் திரும்பி வந்து மனமுடிப்பதாக கூறுகிறான். 

அவளிடம் விடைபெற்று ரஸவாதிவுடன் எகிப்து பிரமிட் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறான். ரஸவாதியிடம் உலோகத்தை தங்கமாக மாற்றும் வித்தையை கற்றுத்தருமாறு அடிக்கடி வினவுகிறான். (அல்கெமிஸ்ட்) ரஸவாதி தன்னை தானே உணரும் வாயிலாக, உலக மொழி கற்களாம் என்ற உண்மையை பல உதாரணங்களுடன் கூறுகிறார். 

தங்களின் பயணத்தில், ஒரு பழங்குடி இன கும்பல் இவர்களை ஒற்றர்கள் என சந்தேகப்பட்டு, சிறை வைக்கிறார்கள். ரஸவாதி, தாங்கள் ஒற்றர்கள் இல்லையெனவும், இத்தலைவனை காண பை நிறைய பொற்காசுகளை இப்பையன் கொண்டு வந்துள்ளான் எனவும், இவனின் ஆற்றல் மகத்தானது எனவும், காற்றோடு காற்றாக பப்பான் என்று அனைவரையும் வியக்க வைக்கிறார். அப்படியெனில் ரெண்டு நாட்களில் காற்றோடு காற்றாக பறப்பதை காண்பிக்குமாறு கட்டளையிடுகிறான். இவன் திடுக்கிட்டு அல்கெமிஸ்டை பார்க்கிறான். தன்னுடய பொற்காசுகளால் ரெண்டு நாள் சாவை தள்ளிப்போட்டுள்ளதாக கூறும் அல்கெமிஸ்ட், முயன்றால் முடியும் என்றும் இவனுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகவும் தெம்பூட்டுகிறார். 

மூன்றாவது நாள், தலைவனின் கட்டளைக்கிணங்க இவன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி இயற்கையுடன் பேச முயலுகிறான். இதில் பூமியிடனும், காற்றுடனும், சூரியனுடனும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறான். இவன் காற்றுடன் பேசுகையில்  முன்பெப்போது இல்லாத வகையில் சூறாவளிக்காற்று அங்கு வீசுகிறது. அனைவரும் அல்லாவின் (கடவுளின்) கருணை என மெச்சுகிறார்கள். கடைசியாக இவன் காற்றால்  அடித்து வேறொரு இடத்தில் நிற்கிறான். தான் செய்த செயலை தன்னாலேயே நம்ப முடியாமல் அல்கெமிஸ்டிடம் திளைக்கிறான். அப்பழங்குடியுனர் மிகுந்த ஆனந்தத்தில் இவர்களுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்புகிறார்கள். 

இருவரும் தங்களின் பயணத்தை மீண்டும் பிரமிட்டை நோக்கி தொடர்கிறார்க்ள். வழியில் ஒரு துறவி வீட்டில் அடைக்களம் கேட்டு அடைகிறார்கள். அல்கெமிஸ்ட், அடுப்பறைக்கு சென்று வெரும் பத்ிரத்(உலோகத்தை) உருக்கி தங்கமாக மாற்றிக்காட்டுகிறார். 4 பங்காக பிரித்து, இரண்டை இவனுக்கும், ஒன்றை துறவிக்கும் தருகிறார். துறவி அதைப்பெற மறுக்கையில், தங்களிடம் இருக்கட்டும், இவன் மீண்டும் திரும்புகையில் தேவைப்படினெனில் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என அல்கெமிஸ்ட் கூற, அதை பெற்றுக்கொள்கிறார் துறவி. 

மேலும் இவனிடம் இருந்து விடைப்பெற்றுக் கொள்கிறார். தான் வந்த பாதையிலேயே பயணிக்கிறார். இவன் பிரமிட்டை அடைந்து, அங்கு பூமிக்கியில் தோண்ட ஆரம்பிக்குறான். மிகுந்த சோர்வடைகையில் அங்கு சில திருடர்கள் வந்து இவனை சூரையாடுகிறார்கள். பலத்த அடி, ரத்த வெள்ளத்தில் இருக்கும் இவனிடம் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள், அல்கெமிஸ்ட் கொடுத்த தங்கத் தட்டின் இரண்டு பங்கு உட்பட. வாழ்க்கை வெறுத்து தான் பயணித்த பாதையை நினைத்துப்பார்க்கையில் தான் அடைந்த அனைத்தையும் நினைத்து பெருமிதம் கொள்கிறான். 

இடையில் சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக் சொன்ன ஒரு கோடாளி கதை நினைவு வரவே, முயற்சியை விடாமல் மீண்டும் தோண்டுகையில் ஒரு புதையல் அகப்படுகிறது. மெல்சிஜெடெக்கின் கவசம் போலவே ிலைமிக்குடியையல் கிடைக்கிறது. மனதில் ஃபாத்திமாவை நோக்கி செல்வதையும், மனமுடித்து ஸ்பெயினுக்கு செல்வதையும், அந்த மூதாட்டிக்கு பத்தின் ஒரு பங்கு மறக்காமல் கொடுக்க வேண்டும் என்ர எண்ணத்துடன் நிறைவடைகிறது கதை.

என் கத்

படிக்க எந்த இடத்திலும் Bore அடிக்கவோ, சோர்வாகாத எழுத்து நடை. அதே போல இப்புத்தகம் எப்படி ஆறதை கோடி விற்றது என்னும் எண்ணம் தோன்றாமல் இல்லை. இன்னும் இப்புத்தகம் உலகில் அதிகம் விற்கப்படும் நாவலின் பட்டியலில் உள்ளது. கட்டாயம் படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று, அட்லீஸ்ட் அதில் என்ன இருக்கு என்று நீங்கள் அறியவேனும். (நான் செய்தது போல :) ) நம்ப முடியா பல காட்சிகள் இதில் அரங்கேற்கிறது.சுவாரஸ்யம் கி பிற்பி நிறையுருக்கிவிட்டேன். ீங்கள் பித்ால் உணர்வீர்கள். மேலும், ிழில் ூள் கிளப்பாம் என்றோன்றுகிறு. 


இக்கையில் கையின் நாயன் ’சண்டியாகோ’ ெயர் ஒன்றோ இரண் ுறை மட்டுமஆரம்பத்ில் வும். நாவல் முழுவும், பையன் என்று மட்டுமே இருக்கும். அே பாணியில் நானும், பெயர் குறிப்பிடாமல் எழுயற்சித்ேன். அால் ான், இவன் என்று எல்லா இடத்ிலும் போட்டுள்ளேன்.

பௌலோ கோல்ஹோ ஒரு பாதியாரா இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியத, எனக்கு. ஆனால், இவரின் அடுத்த நாவல் 'Eleven minutes' வாங்கி படிக்கையில் அப்படியே ஆடிப்போயிட்டேன். முற்றிலும் மாறுதலான கதை, எழுத்து நடை. அதில் ஆரம்பமே அமர்க்களம்.


மேலும் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். ஆங்கில நாவல் என்றாலே ஏதோ கஷாயத்தை சாப்பிடுவது போல முகம் கோணலா போகும் எனக்கு. பல சொற்களுக்கு டிக்‌ஷினரி தேவைப்படுமே என்ற உண்மை தான். ஏனெனில் நம்ம ஆங்கில புலமை அப்படி...!! 

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் - நான் பள்ளி பயின்றபோது எனது ஆங்கில வாத்தியார் When are you getting up in the morning to come to school’ என்ற கேள்விக்கு, 9.30 சார் என்று சத்தம் போட்டு சொன்னேன். என் புரிதலில் எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு வருவாய் என்று கேட்கிறார் போல என நினைத்துக்கொண்டேன் JJJ. பள்ளியே சிரித்தது. எதுக்குடா சிரிக்கிறீங்க் என்று ஒன்னும் அறியாதவனாக நண்பர்களை கேட்டேன். மாஸ்டர் என்னை வெளியே நிற்க வைத்துவிட்டார்.... நான் கரெக்டா தானே சொன்னேன் என்று மண்டை குழம்பி போன சம்பவம் என் ஆங்கில புலமைக்கு சான்றுJJJ

துணிந்துதான் களத்தில் இறங்கினேன்
, ஆங்கிலமா நாமா பார்த்திருலாம் ஒரு கை என்று. அதிசயம், என்னை போல தற்குறிகளும் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிமையான ஆங்கில எழுத்துகளால் புரியும் வண்ணம் இருந்தது மிகுந்த ஆச்சர்யம் தந்த விஷயம்.

மேலும் எழுத்தாளர் திரு. சாருவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்; அவர் மூலமாகத்தான் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கார் என்றே எனக்கு தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக