சமீபத்தில் பிரேசில் நாட்டு
எழுத்தாளர் பௌலோ கோல்ஹோ’வின் (Paulo Coelho) "The
Alchemist" என்ற
நாவலை படித்தேன். நான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். அதற்குமுன் இந்த புத்தகம்
பற்றி சில சாதனை குறிப்புகள்.
1. 65 மில்லியன் (ஆறரைக் கோடி) காப்பிகளுக்கு விற்றுத் தீர்ந்த ஒரு நாவல்
2. உலகி வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட ஒரு புத்தகம்
3. கிட்டதட்ட 71 மொழிகளுக்கு மேல் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு நாவல்
4. வாழும் ஒரு எழுத்தாளரின் நாவலை அதிக மொழிகளில் மொழிபெயர்த்தலால் கின்னஸ் சாதனை பெற்ற ஒன்று
இந்த நாவல் தான் பௌலோ கோல்ஹோ’விற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் கொடுத்ததாம். இக்காரணிகளால் உந்தப்பட்டு இந்த நாவலை வாங்கினேன். இனி நாவலுக்குள் செல்வோம். இது என் முதற்முயற்சி, குறையிருப்பின் என்னை திருத்துக.
கதைச்சுருக்கம் - ஒரு ஆடு
மேய்ப்பவன்,
தன் கனவை
நனவாக்க தன் தேடல்களை எகிப்து பிரமிட்டை நோக்கி செல்லும் பயணமும், அதில் அவன் அடையும்
அனுபவங்களும், அதில் தன்னை தானே உணர்வதுமே நாவல்.
கதாபாத்திரங்கள்
நாயகன் – ’சாண்டியாகோ’ எனும் ஆடு மேய்க்கும் பையன்
நாயகி – அரபி பழங்குடியின பெண் ஃபாத்திமா
முக்கிய
பாத்திரங்கள் – (Melchizedek) மெல்சிஜெடிக்
எனும் அரசன், திருடன், அல்கெமிஸ்ட் (ரஸவாதி), படிகக்கடை(கிரிஸ்டல்) முதலாளி, சகபயணி ஆங்கிலேயன் மற்றும் ஒட்டக
மேய்ப்பாளர், பழங்குடியின
தலைவர், துறவி மற்றும்
பலர்
ஆண்டலுசியா (Andalusia) பகுதியில் வசிக்கும் ஒரு ஏழை
குடும்பத்தின் வாரிசு சாண்டியாகோ. (ஆண்டலுசியா என்பது ஸ்பெயின் நாட்டின் பிரபலமான
சுயாட்சிப்பகுதி). அன்றாடம் கஞ்சிக்கும், சாப்பாட்டிற்குமே திண்டாடும்
ஒரு ஏழை குடும்பம். சாண்டியாகோவின் பெற்றோர்கள் இவனை கிருஸ்துவ பாதரியாராக
உருவாக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள்,
அதன் மூலம் தன்
குடும்பத்திற்கு நற்பெயர் விளையும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பையனின் கனவோ, உலகத்தை அறிந்துக்கொள்ள வேண்டும், உலகத்தின் மொழியை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே. பாதரியாராக
கடவுளின் மொழியை அறிவதைவிட, பலதரப்பட்ட மக்களின்
வாழ்வியலை அறிந்துக்கொள்வது அதற்கும் மேல் (உசத்தி) என்ற தீர்க்கமான எண்ணம்
கொண்டவன். ஒரு சண்டையின் இடையில் தயங்கி தயங்கி தன் எண்ணத்தை பெற்றோருக்கு சொல்லி
விடிகிறான். தன் தந்தை உலகை அறிய ஆடுதான் மேய்க்க போகனும் என்றதும், அப்படியானால் தான் அதை செய்வதாகவும் கூறுகிறான். தன்
தந்தை முதலில் மறுத்தாலும், பையனின் முடிவிற்கு
ஒத்துக்கொண்டு, தன் வயலில் கண்டெடுத்த மூதாதயர்களின்
3 தங்க காசுகளை கொடுத்து ஆட்டு மந்தையை வாங்கிக்க சொல்கிறார். குளிர் காலத்திற்கு
ஏற்புடைய ஒரு நல்ல ஜாக்கட்டும் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். முடிவில் நம் ஊர்
தான் உயர்ந்தது என புரிந்து கொள்வாய் என ஆசிர்வதித்து அனுப்புகிறார். தனக்கென ஒரு
ஆட்டு மந்தையும், இளைப்பாரும் போது படிக்க ஒரு புத்தகமும், பருந்த வைனும் தன்னுடன் எடுத்துக்கொண்டு பயனத்தை
தொடங்குகிறான்.
நம்மாளு, ஆடு போகும் போக்கில் பயனித்து, ஸ்பெயினின்
குறுக்கு வெட்டு எல்லாம் சுற்றித்திரிந்து தன் நாட்டின் அனைத்து நகரத்தையும்
அறிந்துக்கொள்கிறான். சலிப்பு வரும்போது சில ஆடுகளை விற்று கடற்கரையோரம் சில
நாட்களை கடத்துகிறான். பிறகு மீண்டும் ஆடுகளை வாங்கித் தன் பயணத்தை தொடர்கிறான்.
இந்நாட்களில் ஆடுகளின் மொழியை அறிந்துக்கொள்கிறான். அதன் தேவைகளை, அது எவ்வாறு செயல்படுகிறது,
அதற்கும்
தனக்குமான ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்கிறான். தனக்கு பணத் தேவைப்படும்போது தன் ஆடுகளை
அறுத்து, அதன் தோலை விற்று
சமாளித்துக்கொள்கிறான்.
அவ்வாறு சென்ற வருடம் தரிஃபா (Tarifa) நகரம் போனபோது அந்த அக்கடை முதலாளியின் மகளிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவளின் சிரிப்பில், பேச்சில் மயங்கி, அவளின் நினைப்பிலேயே ஒரு வருடம் கழிந்துவிடுகிறது. தற்சமயம் அவளைக்காண இந்தாண்டும் பயணிக்கிறான். அவளிடம் தன் காதலை, எண்னத்தை தெரியப்படுத்த வேண்டும் என நல்ல உடை, முடி திருத்தம், செண்ட் என ஜோராகிறான். இன்னும் 4 நான்கு நாட்களில் அவள் இருப்பிடத்தை அடைந்துவிடுவான். ஓர் பாழடைந்த சர்ச்சில் இரவு தங்குகையில் கனவு வருகிறது. இதே போன்ற கனவு முன்பொரு முறை இவனுக்கு வந்திருக்கிறது. அப்பெண்ணை காண பயணிக்கையில், தரிஃபாவில் கனவுகளின் அர்த்தத்தை சொல்லும் ஒரு மூதாட்டி இருக்கிறாள் என செவிவழியாக கேட்ட செய்தி இவனை ஆர்வப்படுத்துகிறது. தன் கனவின் அர்த்தம் என்னவென அறிய ஒரு முற்படுகிறான்.
அவ்வாறு சென்ற வருடம் தரிஃபா (Tarifa) நகரம் போனபோது அந்த அக்கடை முதலாளியின் மகளிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவளின் சிரிப்பில், பேச்சில் மயங்கி, அவளின் நினைப்பிலேயே ஒரு வருடம் கழிந்துவிடுகிறது. தற்சமயம் அவளைக்காண இந்தாண்டும் பயணிக்கிறான். அவளிடம் தன் காதலை, எண்னத்தை தெரியப்படுத்த வேண்டும் என நல்ல உடை, முடி திருத்தம், செண்ட் என ஜோராகிறான். இன்னும் 4 நான்கு நாட்களில் அவள் இருப்பிடத்தை அடைந்துவிடுவான். ஓர் பாழடைந்த சர்ச்சில் இரவு தங்குகையில் கனவு வருகிறது. இதே போன்ற கனவு முன்பொரு முறை இவனுக்கு வந்திருக்கிறது. அப்பெண்ணை காண பயணிக்கையில், தரிஃபாவில் கனவுகளின் அர்த்தத்தை சொல்லும் ஒரு மூதாட்டி இருக்கிறாள் என செவிவழியாக கேட்ட செய்தி இவனை ஆர்வப்படுத்துகிறது. தன் கனவின் அர்த்தம் என்னவென அறிய ஒரு முற்படுகிறான்.
இருவருக்கான உரையாடலில், கனவில் தன் ஆடுகளுடன் குழந்தை ஒன்று விளையாடுவது போலவும், திடீரென்று அக்குழந்தை இவனை மட்டும்
அலேக்காக தூக்கிச்சென்று எகிப்து பிரமிட்டை காட்டுவது போலவும் மூதாட்டியிடம் சொல்கிறான்.
ரெண்டு முறையும், அதற்கு மேல் தடங்கள் ஏற்பட்டு
விழித்துக் கொள்வதாக முடிக்கிறான்.
மூதாட்டி முழுவதுமாக கேட்டுவிட்டு, இது கடவுளின் மொழி.... உன் கனவின் அர்த்தம், நீ
எகிப்து நோக்கி பயணம் செய்தால் அறிய புதையல்
கிடைக்குமென சொல்கிறாள். குழந்தை வருவதால் ஒரு கடவுள் காட்டும் சுகுனம் எஅன்வும் கூறுகிறாள். மூதாட்டிக்கு சன்பானப்பணம்
வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக புதையல் கிடைத்தால் அதில் பத்தின் ஒரு பங்கு
வேண்டும் எனவும் உரிமையுடன் கூறுகிறாள். கிடைக்காவிட்டால் என இவன் ஐயமெழுப்பும் போது,
தனக்கு
கல்சல்டேஷன் ஃபீஸ் கிடைக்காது அவ்வளவே என சிரிக்கிறாள்.
என்ன செய்வதென்று
குழம்பிப்போய்,
நாம் செய்வது
போலவே தன் ஃபிகரை (அப்பெண்ணை) காண பயனத்தை தொடர்கிறான். வெயில் அதிகமாக இருக்கவே, ஊரின் நடுவில் இருக்கும் வணிக
வளாகத்திற்கு முன்பாக இளைப்பாறி புத்தகத்தை வாசிக்கிறான். அச்சமயம் ஒரு பெரியவர்
இவனிடம் பேச முற்பட, தனது
வாசிப்பின் தீவிரத்தால் பேசுவதை இடைஞ்சலாக பார்க்கிறான்,.... அந்த பெரியவர், இவனிடம் வம்மடியாக சற்று பேச, யாரென பரஸ்பரம் வினவுகிறார்கள்.
அதில் அப்பெரியவர், ’சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக்’ என கூறுவதைக் கண்டு திகைக்கிறான். ஏனெனில் சேலம் என்பது மர்மமான வெகுதொலைவில் இருக்கும் ஒரு ஊர் என பைபிலில் நம்பப்படுகிறது. (மெல்சிஜெடெக் என்பவர் ஹீப்புரு பைபிலில் வரும் ஒரு கதாபாத்திரம். மிகவும் தூய்மையானவர், உயர்ந்த கடவுளுக்கு போதித்தவர், சாகாவரம் பெற்றவர்.) அவர் நீண்ட சாதாரண அரபி உடைபோல அணிந்துள்ளார். ஒரு மரக்குச்சியை எடுத்து மண்ணில் எழுதுவதற்கு முன்பாக, தன் உடையை சரிச்செய்யும் தருணம் தன் கண்முன்னால் ஒரு மாஜிக் நிகழ்வது போல ஒரு ஒளிக்கீற்று வந்து மறைவதாக உணர்கிறான். மறுகனத்தில் மண்ணில் பையன் பெயரும், இவனுடைய பெற்றோர்களின் பெயரும், இவன் சந்திக்கப்போகும் பெண்ணின் பெயரும் எழுதுவதைக் கண்டு பிரம்மிக்கிறான்.
அதில் அப்பெரியவர், ’சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக்’ என கூறுவதைக் கண்டு திகைக்கிறான். ஏனெனில் சேலம் என்பது மர்மமான வெகுதொலைவில் இருக்கும் ஒரு ஊர் என பைபிலில் நம்பப்படுகிறது. (மெல்சிஜெடெக் என்பவர் ஹீப்புரு பைபிலில் வரும் ஒரு கதாபாத்திரம். மிகவும் தூய்மையானவர், உயர்ந்த கடவுளுக்கு போதித்தவர், சாகாவரம் பெற்றவர்.) அவர் நீண்ட சாதாரண அரபி உடைபோல அணிந்துள்ளார். ஒரு மரக்குச்சியை எடுத்து மண்ணில் எழுதுவதற்கு முன்பாக, தன் உடையை சரிச்செய்யும் தருணம் தன் கண்முன்னால் ஒரு மாஜிக் நிகழ்வது போல ஒரு ஒளிக்கீற்று வந்து மறைவதாக உணர்கிறான். மறுகனத்தில் மண்ணில் பையன் பெயரும், இவனுடைய பெற்றோர்களின் பெயரும், இவன் சந்திக்கப்போகும் பெண்ணின் பெயரும் எழுதுவதைக் கண்டு பிரம்மிக்கிறான்.
இதைக்கண்டவுடன்
மெல்சிஜெடெக்குடன் பேச ஆர்வமடைகிறான். ஒவ்வொருவருக்கும் தன் இளம்வயதில் தனக்கென
ஒரு கனவு இருக்கும். அதை
அடைய எந்த தயக்கமின்றி தீவிரமாக முயலுவார்கள். நாட்கள் செல்லச்செல்ல தேங்கி, தன்னால் முடியாதோ என்ற தாழ்வு
மனப்பான்மையில் ஒதுங்கிவிடுகிறார்கள் என கூறுகிறார், சேலத்தின் அரசன். அவரே தொடர்ந்து, உலக ஆத்மா பற்றியும், மனிதனின் தனிப்பட்ட நோக்கம் பற்றியும்
முதல்முறையாக இப்பையனுக்கு விரிவாக கூறுகிறார். மேலும், எவனொருவன் தன் கனவை, நோக்கத்தை (Personal Legend) அடைய பாடுபடுகிறானோ, அவனுக்கு இப்பிரபஞ்சமே தன் பின்னால்
வந்துதவும் என அலுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார். மக்களை வழிநடத்த சகுனங்களை கடவுள் காட்டுவார் எனவும்
கூறுகிறார். இக்கதையின் அடிநாதமே இங்குதான் தொடங்குகிறது. (என்ன இப்பவே மூச்சு
முட்டுடா.. தண்ணிய குடிங்க... தண்ணிய குடிங்க, இன்னும் எவ்ளோ தூரம் போகனும் நாம)
மிகுந்த ஆர்வமடைந்து, அப்படியானால் தன்னுடைய கனவு, வாழ்க்கையின் நோக்கம் (Personal Legend) என்ன என்று மெல்சிஜெடெக்கிடம் கேட்கும்போது, உன்னிடம்
இருக்கும் ஆட்டு மந்தையின் ஒரு பகுதியை எனக்கு கொடு. நான் நாளை பதில் தருகிறேன் என
கூறிவிட்டு விடைபெறுகிறார். இவன் குழப்பத்துடனே, அங்கு அருகில் சுற்றி திரிகிறான்.
அடுத்த நாள், ஒரு முடிவோடு தன்னுடைய மந்தையில் இருந்து 6 ஆறு ஆடுகளை கொடுக்கலாம்
என அழைத்து வருகிறான். மெல்சிஜெடெக், அதைப் பெற்றுக்கொண்டு எகிப்து நோக்கி பயணி,
அங்கு பிரமிட் அருகில் புதையல் இருக்கும் என சொல்வதை கேட்டு அதிசியக்கிறான்.
ஏனெனில், மூதாட்டி ஜோசியர் சொன்னதும் அப்படியே இருக்கே என எண்ணுகிறான்.
அங்கிருக்கும் கோட்டையின் உச்சிக்கு இருவரும் பேசியபடியே மேலேறுகிறார்கள். அரசன்
பல தத்துவ கதைகளும் இதனூடே கூறுகிறார்.
அரசன் இவனிடமிருந்து விடைபெறுவதற்கு முன்,
தன் நவரசகவசத்தில் இருந்து ’உரிம்
& துமிம்’ தெய்வீக
கற்களை தருகிறார். இதை வாழ்க்கையில் தீர்மானிக்க் முடியா சமயங்களில்
உபயோகப்படுத்துமாறும், இவனுக்கு வழி காட்டும் என கூறுகிறார். உரிம் என்றால் இல்லை,
துமிம் என்றால் ஆம் என்பது அர்த்தம். ஆம், இல்லை என்று பொருள் படும்படியாக மட்டுமே
கேட்க முடியும் என கூறிவிட்டு மறைகிறார்.
நம் ஹீரோ பையன் கோட்டையின் மேல் நின்று அக்கரையில்
பரந்து விரிந்த ஆப்பிரிக்காவை காண்கிறான். எகிப்து சென்று புதையலை அடையலாம் என தீர்மானிக்கிறான், அதுவே தன் வாழ்வின் நோக்கமெ. ன திடமான நம்பிக்கை பிறக்கிறது. தன்னிடம் இருக்கும் அனைத்து ஆடுகளையும்
விற்றுவிட்டு அக்கரையில் உள்ள ஆப்பிரிக்காவிற்கு கப்பலில் அன்று இரவே பயணிக்கிறான். ஒரு இரவு
பயணத்தில் ஆப்பிரிக்க எல்லை நகரமான ’தாங்கியர்’ல் (Tangier- மொராக்கா நாட்டில் இருக்கும் ஒரு சிறிய துறைமுகம் கொண்ட நகரம்) தரை இறங்குகிறான். அவ்வூரில் இருக்கும்,
நடக்கும் அனைத்துமே வித்தியமாசமாகப் படுகிறது இவனுக்கு. அவர்களின் அரபி மொழி, உடை,
திடீரென்று எல்லோரும் ஒன்றாக அல்லாவை மண்டியிட்டு வணங்குவது என மார்கெட்டில்
ஒவ்வொன்றாக காணிகையில் ஒரு பார் கண்ணில் பட, அங்கு செல்கிறான்.
நீளம் கருதி ரெண்டாம் பகுதியை நாளை தொடர்கிறேன்.
நீளம் கருதி ரெண்டாம் பகுதியை நாளை தொடர்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக