போர்சுகல் எழுத்தாளர் பௌலோ கோல்ஹோ’வின் 'The Alchemist' நாவல் கொடுத்த தைரியத்தால், மீண்டும் ஒரு ஆங்கில நாவல படிக்க உந்தப்பட்டு (Paulo Coelho’s) Eleven minutes என்ற நாவலை படித்தேன். நான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இப்பதிவு. நான் படித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், எழுதுவதில் சிறிய தாமதம். வேறென்ன, ’நாளை நமதே’ என்ற நம்ம சோம்பேறித்தனம் தான்..... JJJ
நான் படித்த இவரின் முந்தைய நாவலான ‘ The Alchemist’ ஐ
விட
பலமடங்கு வித்தியாசமான களம், எழுத்து நடை. மனுஷன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில்
வல்லவர் போல JJJ. ’லெவன் மினிட்ஸ்’ என்ற இந்நாவல் நிச்சயம் 18+ வயதானோருக்கே... சில
பகுதிகளில் காதல் ரசம், கொட்டோ கொட்டென கொட்டுகுறது, ஆனால் செம்ம அருமையான வசீகரிக்கும்
எழுத்து.
இதன் ஆங்கில மொழிப்பெயர்பாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு இடத்திலும், நாம் வாசிப்பது ’ஒரு மொழிபெயர்ப்பு நாவல்’ என்பதை நாம் அறிய வாய்ப்பே இல்லை. இந்நாவலும் கிட்டதட்ட 50 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இன்னும் மொழி பெயர்க்கவில்லை என கூகுளாண்டவர் சொல்லுகிறார்.... !!!
நம்முள் ஒரு பாசிடிவ் எண்ணம் தோணும் வண்ணம் இருக்கும் எழுத்து நடை, நம்
வாழ்க்கையை எவ்வாறு எதிர் நோக்குகிறோம் என்று நம்மை நாமே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு
புத்தகம்.
முக்கிய கதாபாத்திரங்கள்
மரியா - கதையின் நாயகி
ரோஜர் - வெளிநாட்டு (ஸ்விசர்லாந்து) கிளப் ஓனர்; வெளிநாட்டு அழகிகளைதன் கிளப்பிற்கு நடனமாட வேலைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர்
முக்கிய கதாபாத்திரங்கள்
மரியா - கதையின் நாயகி
ரோஜர் - வெளிநாட்டு (ஸ்விசர்லாந்து) கிளப் ஓனர்; வெளிநாட்டு அழகிகளைதன் கிளப்பிற்கு நடனமாட வேலைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர்
ஹைதி - வாடகை நூலகத்தின் இருக்கும் நபர்
மிலன் - “Copacabana”பாரின் முதலாளி
நியா - பணியிடத்தில் இருக்கும் மரியாவின் சக தோழி
நியா - பணியிடத்தில் இருக்கும் மரியாவின் சக தோழி
ரால்ப் ஹர்ட் - ஒரு புகழ்பெற்ற ஓவியன்
டெரன்ஸ் - பணக்கார ஆங்கிலேயன், பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவன்
கதைச்சுருக்கம்
மரியா என்ற இளம்வயது பிரேசில் பெண், தன் சிறு வயது பால்ய காதலை மனதில் கொண்டு, காதலை முற்றிலுமாக வெறுக்கிறாள். ரோஜர் என்ற தொழிலதிபர் கொடுக்கும் ஆசை வார்த்தைகளில், வெளிநாட்டு வேலை என்ற மாய பிம்பத்தில் சிக்கி, கொத்தடிமை வாழ்க்கையில் சிக்குகிறாள். ஒரு வருடம் முழுவதும் வேலை செய்தாலும், தான் நாடு திரும்ப மட்டுமே பணம் ஈட்ட முடியும் என்ற நிலை. தன் கனவெல்லாம் சுக்குநூறாக உடைகிறது. இருப்பினும், என்னை போல புலம்பி தள்ளாமல், வாழ்க்கையை ஏற்று பாசிடிவ்வாக முன்னேறுகிறாள்.
இச்சமயத்தில் தன் சாமர்த்தியத்தால் ரோஜரிடமிருந்து மீண்டு, ஊருக்கு பயணிக்க தீர்மானிக்கையில் விபச்சாரம் தன் வாழ்வில் எதிர்பாரா விதமாக குறுக்கிடுகிறது. வாழ்க்கையில் தோற்ற பிம்பத்துடன் நாட்டுக்கு செல்ல வேண்டுமா என இதில் கிடைக்கும் அதிகப்படியான பணம் (Easy Money) இவளை யோசிக்க வைக்கிறது. தன் பயணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுகிறாள்.
மிலன் என்ற நபர் நடத்தும் ‘கோபகபானா’ என்ற இரவு பாரில், நடனமாடவும் விபச்சாரம் செய்யவும் சந்தர்ப்பம் அமைகிறது. இவ்வாறான சூழலில் தன் ஆன்மாவை, தன் மனதை எவ்வாறு பாசிடிவ்வாக வைத்துக்கொள்கிறாள் என்பதில் தான் என்னே ஒரு மேஜிக் எழுத்து நடை. காதலே கூடாது என்று இருப்பவளிடம் காதல் பூகம்பமாக பூக்கிறது, ரால்ப் ஹார்ட் என்ற இளம்ஓவியன் மூலமாக.
இவள் திட்டமிட்டப்படி ஒரு வருடத்தில் நாட்டிற்கு சென்றாளா? அல்லது ஈஸி மனி என்ற வலையில் நிறைந்திரமாக விழுந்தாளா? ரால்ப் ஹார்டுடனான காதல் என்னவானது என்பதே நாவலின் மையம். படிக்க படிக்க ஆர்வமூட்டும் எழுத்துகள்.....

* இதன் ஆசிரியர் நினைத்திருந்தாரேயானால் இந்நாவலின் களத்தில் சோகத்தை பிழிய பிழிய கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் எதிர்பார்க்கா வண்ணம், அட்டகாசமான ரசிக்கும் படியான பாத்திரப்படைப்பு, மரியா.
* லெவன் மினிட்ஸ் பற்றிய விளக்கம் நாம் அறியும் இடம், அட்டகாசம். என்னால் அதை வார்த்தையால் கடத்த முடியவில்லை.
எல்லாத்தையும் பாசிடிவாக நோக்கும் எண்ணம். செய்யும் தொழிலில் ஒரு தொழில் நேர்த்தி (Professionalism), எதற்காக ஆண்கள் விபச்சாரத்தை நோக்கி வருகிறார்கள் என்ற உளவியல் பார்வை, தொழிலின் நேர்மை, அவளின் மனம் எவ்வாறு சிந்திக்கிறது, அவள் எவ்வாறு உயிர்ப்போடு இருக்கிறாள் என்று அனைத்தும் அருமை..... வாசித்தால் மட்டுமே கிடைக்கும் ஆனந்தம்.
* மரியாவின் சிறு வயது காதல் (Puppy Love) முறிவிற்கான காரணம், அட்டகாசம்... பென்சில் இருக்கா என கேட்டு, பதில் கூறாமல் மரியா போவதால் காதல் முறிவு என கூறுவது வாவ்...
* மரியாவின் பதின்பருவத்து காதல், அதிலும் தோல்வியில் முடியும் காரணி நாம் அறியும் இடம் மிகுந்த சுவாரஸ்யமானது. கிஸ் அடிக்கும் போது, வாய் திறக்காமல், பல்லை காட்டியதால் :) :) :) ஹஹஹஹா
* நியா, இவளிடம் சொல்லும் தொழில் நுணுக்கம், தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள டைரி எழுதுவதும் ,அதின் மூலம் நாம் அவளின் மனதை அறியும் யுத்தி ரசிக்க வைத்தது.
* இடையில், அதீத துன்பத்தின் இறுதியில் இன்பம் காண்பது போன்ற சாடிசம் பற்றிய விளக்கங்கள், பண்டைய காலத்து புனித செக்ஸ் பற்றிய குட்டி கதைகள் நம்மை வேறொரு களத்திற்கு இட்டுச்செல்லும். சிலருக்கு மொக்கையா இருக்கும், எனக்கும் தான்....
* மரியா தான் இத்தனை நாள் அடையா இன்பம், டெரன்ஸ் என்பவனால் அடையும் தருணம், அதில் இருந்து மரியாவின் எண்ணம் மாறுபடும் இடம் அருமை. டெரன்ஸ் என்பவன் பிறரையும், தன்னையும் துன்புறுத்தி உடல் இன்பம் காணும் தன்மை பற்றி விவரிக்கும் இடம், ஒரு கட்டத்திற்கு மேல், துன்பமும் இன்பமாக மாறுகிறது என்ற விளக்கம், என்னை பல்வேறு சிந்திக்க வைத்தது. அதற்கு காரணம், என் நண்பர் ‘செந்தில் முருகன்’ திருச்சந்தூரில் தான் ஒரு முறை அலகு குத்துவதை பற்றிய குறிப்பை வாசித்தது நினைவடுக்கில் வந்தது. ஒரு வலியை விட இன்னொரு அதீத வலி அதை முற்றிலுமாக மறைக்க செய்யும், நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறி இருப்பார்.
* சோனியா என்ற ஒரு பெண்ணின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு, ஆசிரியரால் எழுதப்பட்ட நாவல்.
* ரால்ப் ஹார்ட்கும், மரியாவிற்கும் இடையில் நடக்கும் காதல், காமம் பற்றிய வர்ணிப்புகள் கவிதை :) :) :)
* கிளைமாக்ஸ், ஒரு தமிழ் படம் கொடுக்கும் உணர்வை கவிதையாக கொடுக்கும்.
* போர்சுகள் கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றுகிறது.(பதின் பருவத்து காதலை விவரிக்கும் இடம், மரியாவின் அறியாமையில் சொல்லும் திரைப்பட காட்சிகள் எல்லாம் நம் சினிமா போலவே இருக்கு)
* நாவலின் முதல் வரியே, Once Upon a time, there lived a Prostitute in a small town என்று அதிரிபுதிரியா தொடங்கும் இடம், அசத்தியது. (குழந்தைகளுக்கு சொல்லும் கதை நடையில், எப்படி ஒரு விபச்சாரி வர முடியும்!!!! என்று தொடங்கும் இடமும், அதற்கு ஆசிரியரே தரும் பதில், At every moment of our lives, we all have one foot in a fairy tale and the other in the abyss.
நான் ரசித்த சில வரிகள்
* When I had nothing to lose, I had everything. When I stopped being who I am, I found myself (மிகவும் பிடித்த வரிகள்)
* I can choose either to be a victim of the world or an adventurer in
search of treasure. It's all a question of how I view my life (மிகவும் பிடித்த வரிகள்)
* Everything tells me that I am about to make a wrong decision, but making mistakes is just part of life. What does the world want of me? Does it want me to take no risks, to go back to where I came from because I didn't have the courage to say "yes" to life?”
* Life moves very fast. It rushes us from heaven to hell in a matter of seconds
* Its best to live as if it were the first and last day of my life
* The true experience of freedom: having the most important thing in the world without owning it
* No one loses anyone, because no one owns anyone
* Life always waits for some crisis to occur before revealing itself at its most brilliant
* The strongest love is the love that can demonstrate its fragility
* Don't listen to the malicious comments of those friends who, never taking any risks themselves, can only see other people's failures

* I'm not a body with a soul, I'm a soul that has a visible part called the body
* Considering the way the world is, one happy day is almost a miracle
* Sometimes life is very mean: a person can spend days, weeks, months and
years without feeling new. Then, when a door opens - a positive
avalanche pours in. One moment, you have nothing, the next, you have
more than you can cope with
* Dreaming is very pleasant as long as you are not forced to put your dreams into practice
* you only know yourself when you go beyond your limits
* A time to be born, and a time to die;
A time to plant, and a time to pluck up that which is planted;
A time to kill, and a time to heal;
A time to break down, and a time to build up;
A time to weep, and a time to laugh;
A time to mourn, and a time to dance;
a time to cast away stones, and a time to gather stones together;
A time to embrace, and a time to refrain from embracing;
A time to get, and a time to lose;
A time to lose; A time to keep, and a time to cast away;
A time to rend, and a time to sew;
A time to keep silence, and a time to speak;
A time to love, and a time to hate;
A time of war, and a time of peace

இன்னும் இது போல், நிறைய இருக்கு.....
A Salute to Paulo Coelho.
A Salute to Paulo Coelho.
கண்டிப்பா உங்க எல்லோருக்கும் பிடிக்கம் என நினைக்கிறேன். உங்க மேலான கருத்துக்களை தெரியப்படுத்துங்க, நண்பர்களே.....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குI didn't remove any comment... some error may be... Thanks for your appreciation.
நீக்குI read the novel six years back. Forgotten the story almost except the reason for the title of the book. Going to read it today, having seen your good review. Thank you
பதிலளிநீக்குThank you so much friend.... Yeah, it is worth reading again.
நீக்கு