உஸ்தாட் ஹோட்டல் – Ustad Hotel – Malayalam Movie
இப்படி ஒரு படம் பார்த்து வெகு நாளாச்சு. என்னடா இவன் எப்போ பார்த்தாலும் மலையாளப்படம் பற்றி சொல்றானே என்று நீங்க நினைப்பது புரியுது. தமிழ், இங்கிலீஷ் படம் என்று பிரிச்சுமேய கேபிள் சங்கரும், ஹாலிவுட் பாலாவும் இருக்காங்க. நாம அவிங்க கிட்டக்ககூட நிக்க முடியாது, மூஞ்சி முகரை எல்லாம் பிஞ்சிடும். :):):)

நான் இங்கு சொல்வது எல்லாம் என்னை போட்டு புரட்டிய மிக அற்புதமான படங்கள் மட்டுமே.... சரி விசயத்திற்கு போவோம்.
மிக சிம்பிளான கதை. ஹோட்டல் பிஸினசையும் மனித நேயத்தையும் முடிச்சு போடும் ஒரு கதைகளன், அவ்வளவே. ’இங்கு சாப்பிட வருபவர்களின் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது, சமைக்கும் நம் மனதும் நிறையனும்’. எதற்காக சமைக்கிறோம் என்று உணரனும். இதை வைத்துகொண்டு ஒரு முழுப்படம் ஓட்ட முடியுமா என்றால் ஒரு காவியமே செய்ய முடியும் என்று நெத்தியில் அடிச்சு சொல்லிருக்கும் படம்.
உஸ்தாட் ஹோட்டலை கரீம் என்ற வயதான முதியவர் (திலகன்) நடத்திவருகிறார். இவரின் பேரன் ஃபைசல் (துல்கர்) இன்றைய நவீன காலத்து இளைஞனின் லட்சியங்களோடு எதிர்பாரா விதமாக இங்கு வந்து சிறிது காலம் தஞ்சம் புகுகிறார். உஸ்தாட் ஹோட்டல் பிரியாணி அந்த ஏரியாவில் மிகப்பிரபலமாக இருந்தும், ஹோட்டல் கடன் சுமையில் தத்தளிக்கிறது. அதற்கு காரணம் தன் தாத்தா காசுக்கு அலையாமல், வருபவர்களின் மனசே பெரிதென்று இருப்பவர்.
நிறைய குட்டி குட்டி கதைகள். ஃபைசல் பிறக்கும் கதை, ஃபைசலுக்கும், நித்யா மேனனுக்கும் நடக்கும் பெண் பார்க்கும் படலம், பின்னாளில் ஏற்படும் மெல்லிய நட்பு கலந்த காதல், நித்யா மேனன் ஒரு முஸ்லீம் பெண், வீட்டிற்கு தெரியாமல் அடிக்கும் லூட்டி, அவள் அனுபவிக்கும் சுதந்திரம், பேரனுக்கும் தாத்தாவிற்கும் இருக்கும் முரண் மற்றும் அன்பு, ஃபைசலுக்கும் தந்தைக்கும் இருக்கும் லட்சிய மோதல், இறுதியில் நம்ம ‘பசங்க’ பட வாத்தியார் ஜெயப்பிரகாஷின் குட்டி நெகிழ்ச்சியூட்டும் கிளைக்மாக்ஸ், ஃபைசல் மனிதநேயம் பற்றி உணரும் தருணம் எல்லாம் படிப்படியாக காவியமாக விரிகிறது.
ஃபைசலாக (Faizal) மம்முட்டியின் மகன் துல்கர் சுல்தான். இவர் பிறக்கும் குட்டி கதையே ரகளை. இவர் தந்தை தனக்கு, பையன் தான் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்பட்டு அடுத்தடுத்தாக 4 பெண்களாக பிறக்கிறார்கள். ஐந்தாவதாக இவர் பிறக்கும் முன் வெறுத்து துபாய்ல வேலைக்குபோய் நல்ல பணக்காரனாக முன்னேறுகிறார்.
துல்கர் படத்திற்கு என்ன தேவையோ அதை பர்ஃபெக்டா கொடுத்து நடித்து விளையாண்டிருக்கார். குறிப்பா இவர் வாய்ஸ்ல ஒரு அட்ராக்ஷன் செம்மயா இருக்கு. செம வசீகரிக்கும் குரல். இனிமேல் மம்முட்டியோட மகன் துலகர் என்று சொல்லக்கூட தேவையில்லை போல.
திலகன் என்னா நடிகன்யா..!!! நமக்கு தெரிந்ததெல்லாம் ‘வர்னும் பழைய பன்னீர்செல்வமா வர்னும்’ என்று சத்திரியன் படத்தில் சொன்ன திலகனைத்தான். படத்தின் நிஜ ஹீரோவே இந்த மனுஷன் தான். உண்மையில் இவர் ஒரு மகாநடிகன், ’ஜஸ்ட் லைக் டட்’ நம்ம சிவாஜிய கிராஸ் பண்ணிடுவார் மனுஷன் - மிகைப்படுத்திய நடிப்பு துளியும் இல்லாமல். இவர் நடித்த கடைசி படமும் கூட.
ஹீரோயினாக நித்யா மேனன் (வெப்பம் பட ஹீரோயின்) அருமையான நடிப்பு. ஒரு இளமை துள்ளல் படம் பூரா பரவிகிடக்கு. குறிப்பா தான் வெளியில் சுதந்திரம் அனுபவிக்கும் காட்சி, நடுரோட்டில் டிரைவரிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சி, அந்த சமயத்தில இவள் சிரிப்பு கொள்ளை அழகு. பார்த்துட்டே இருக்கலாம்....
இன்னொன்று படத்தின் இசை...... அட்டகாசம், ஆனந்தம்...ஆசம் (Awesome)!!! சூஃபி இசை படம் பூரா படர்ந்து கிடைக்கிறது. அவ்வளவு இனிமை அதை கேட்க. சூஃபியையும், வெஸ்டர்ன் இசையும் சேர்த்து சில இடத்தில் கொடுத்துள்ளார்கள்.... வர்ணிக்க வார்த்தையில்லை.
இன்னொரு குட்டி கதை சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.... இந்த மேலே போஸ்டரில் இருக்கும் காட்சி....அதாவது திலகன், சுலைமானி டீயை எப்படி செய்தார் என்று துல்கர் கேட்கும் இடமும், அதை தொடர்ந்து திலகர் சொல்லும் தன் கதையும் அருமையோ அருமை...... இந்த காட்சியை பார்த்தால் தான் அதன் பரவசம் புரியும். கீழே கொடுத்துள்ள பாடலை காணுங்கள்.
https://www.youtube.com/watch?v=wp-_XtXAPF4
கண்டிப்பா பாருங்க... மிஸ் பண்ணவே கூடாது....!!!
இந்த படம் முடியும் போது, நீங்களும் இனிமேல் நாம் சாப்பிடும் உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். அதுவே இந்த படத்தின் வெற்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக