பக்ரீத் பண்டிகையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருக்க வேண்டும். அதுவும் துபாய் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருந்தால் சொல்லவே தேவையில்லை. துபாய், பக்ரீத் என்றால்
திருவிழாக் கோலம் பூண்டுவிடும். நிறைய மால்களில், கடைகளில் உண்மையான
தள்ளுபடி விற்பனை, சிறப்புப் பேருந்துகள், 23 மணி நேர மெட்ரோ ரயில்கள்,
துபாய் பீச் பார்க்களில் எல்லாம் பெரும் திரளான கூட்டம், அலைமோதும்
டூரிஸ்ட் கூட்டம், ஊரு பூரா காணுமிடமெல்லாம் மின் விளக்குகளால் அலங்கரித்து
நம்மை ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு உட்படுத்திவிடுவார்கள்.
ஈத் விடுமுறை வருகிறது என்றாலே, நீ எங்க போற, நான் இங்கு போகப்போகிறேன் என்றுதான் எல்லோரிடமும் ஒரே பேச்சா இருக்கும். நாமும் கண்டிப்பா எங்காவது நிச்சயம் போவோம், அல்லது போகத் தூண்டப்படுவோம். போதாகுறைக்கு 4, 5 நாள் எல்லா அலுவலகத்திற்கும் விடுமுறை வேறு. விதி வலியது பாஸ்……….
இது போதாதா....!! எளிமையா விளங்க சொல்லனும் என்றால் நம்ம ஊர் தீபாவளி போல, இவங்களுக்கு ஈத் திருநாள் (பக்ரீத்). நீங்கள் பிரியப்பட்டால், இந்தத் திருவிழாவைப் பற்றித் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
நான் ஒரு நாள் பயணமாக, காரில் ஒரு லாங்-டிரைவ் போகலாம் என்று முடிவெடுத்து, சனிக்கிழமைக்குத் தேதியும் குறித்தாயிற்று. எங்கு செல்வது என்று திட்டமேதும் வகுக்கவில்லை. ஆனால் எல்லோரும் போகும் அதே வழியில் போகாமல், புதிய அறியப்படாத ரோட்டில் போகலாம் என்ற எண்ணம் உதித்தது. மேலோட்டமாக, ஹத்தா வழியாகச் சென்று ஃபுஜேரா அடைந்து, வீடு திரும்பலாம் என்பது தான் அடிப்படைத் திட்டம். நான், மகன் யோகவ், மனைவி, இரு தங்கைகள் மற்றும் என் அலுவலக நண்பன் சார்ல்ஸ். இவர்தான் காரோட்டுனர், ஏன்னா என்கிட்டதான் லைசன்ஸே இல்லியே...
ஹத்தா (Hatta)...
ஹத்தா என்பது துபாயிலிருந்து சுமார் 100கி.மி. தொலைவில் அமைந்துள்ள துபாயின் சிறிய டவுன். நம் நாட்டின் ஒப்பீட்டில் ஒரு சிறிய கிராமம் அளவில் இருக்கும் டவுன் (town), அவ்வளவே. வீட்டில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும்போது, சிறிய அளவில் மட்டும் பெட்ரோல் அடித்துக்கொண்டு கிளம்பினோம். இத்தனை தொலைவு செல்லும்போது கார் பெட்ரோல் டேங்க் முழுதும் நிரப்பிக் கொண்டு செல்வதுதானே உத்தமம் என்று நீங்க சொல்வது கேட்கிறது. இதற்கான விடை நீங்களே பின்பு அறிவீர்கள். அதுவரை உங்கள் யூகத்திற்கு விடுகிறேன்.
இந்த சிறிய டவுனுக்கா இத்தனை தூரம் போக வேண்டும் என நினைத்தீர்களா? ஹத்தா சிறப்பு என்னவென்றால், இது பலப்பல சின்னஞ்சிறு ’ஹஜ்ஜார்’ எனும் மலைகளால் சூழ்ந்த ஒரு ரம்மியமான பகுதி. மேலும் துபாய் இருக்கும் கடல் மட்டத்தைவிட, மேல இருப்பதால் சீதோஷ்ன நிலையும் நன்றாக இருக்கும். மொட்டை மலைகளாக இருந்தாலும் நல்ல காற்று வீசும் ஊர்.
ஹத்தா போகும் வழியில்தான்
’டசர்ட் சஃபாரி’ என்று சொல்லப்படும் பாலைவனத்தில் காரை ஓட்டி சாகசம்
செய்யும் இடம் இருக்கு. நிறைய டூரிஸ்ட் கம்பனிக் கார்கள் சுற்றி திரிவதை
காணலாம். இதற்கென தனிக்கட்டணம், முன்பதிவு ஆகியவை தேவை.
மேலும் போகும் வழி
நெடுகிலும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் சுற்றித் திரிவதையும் காணலாம்.
நமக்கு அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் ஒட்டகங்கள் ரோட்டின் ஓரமாக நடந்து
வரும். நாம் வாகனத்தை நிறுத்திவிட்டு அதை தொடலாம், போட்டோ எடுக்கலாம்,
உணவளிக்கலாம். எனக்கும் அதிர்ஷம் அடித்தது என்றால் பார்த்துக்கோங்க.
என் மகன் ஒட்டகத்தை, அது வரை புத்தகத்தில் மட்டுமே பார்த்துள்ளான். அதை நேரில் கண்டதும், ஏக குஷியாகிட்டான். என் தோலின் மீது அமர்ந்து, ஒட்டகத்தை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் மகிழ்ச்சி முகத்தில் பொங்கி வழிந்தது. என்னாதா இருந்தாலும், தொடுணர்சியின் சுகமே தனி தானே....!!
பின்பு பயனத்தை ஹத்தாவிற்கு தொடர்ந்தோம். வழி நெடுகிலும் என் மகன் யோகவ், அப்பா ஒட்டகம், இப்படி சாப்பிடுகிறது, நான் அதை தொட்டேனே என்று ஒரே கலாட்டா, நம் காதுகள் செவுடாகும் வரை. :) :) :) ஹத்தா ஊரை நெருங்குவதற்கு 15கி.மி. முன், போலீஸ் இடைமறிந்த்தார்கள். பயம் வேண்டாம். அது ஓமன் நாட்டின் எல்லை. ஹத்தா ஊரை சென்றடைய ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும். ஒரே குழப்பமாக இருக்கிறதா, இது துபாயின் டவுன் என்று சொன்னேன் என்று?
இந்த ஊரின் புவியியல் அமைப்பு அப்படி. ரோடு வழியாகச் சொல்லும் போது, ஒரு சிறிய பகுதி ஓமன் நாட்டிற்கு சொந்தமானது. ஆகையால் நம் எமிரேட்ஸ் ஐடி கார்டை காட்டிவிட்டு, பயனத்தை தொடரலாம். உங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக மேப் படத்தை தருகிறேன், காணுங்கள்.
பத்தி அதிகமாக வருவதால், பகுதி பகுடியாக தொடர்கிறேன், உங்கள் விருப்பம், ஆதரவு இருக்கும் பட்சத்தில்.
ஈத் விடுமுறை வருகிறது என்றாலே, நீ எங்க போற, நான் இங்கு போகப்போகிறேன் என்றுதான் எல்லோரிடமும் ஒரே பேச்சா இருக்கும். நாமும் கண்டிப்பா எங்காவது நிச்சயம் போவோம், அல்லது போகத் தூண்டப்படுவோம். போதாகுறைக்கு 4, 5 நாள் எல்லா அலுவலகத்திற்கும் விடுமுறை வேறு. விதி வலியது பாஸ்……….
இது போதாதா....!! எளிமையா விளங்க சொல்லனும் என்றால் நம்ம ஊர் தீபாவளி போல, இவங்களுக்கு ஈத் திருநாள் (பக்ரீத்). நீங்கள் பிரியப்பட்டால், இந்தத் திருவிழாவைப் பற்றித் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
நான் ஒரு நாள் பயணமாக, காரில் ஒரு லாங்-டிரைவ் போகலாம் என்று முடிவெடுத்து, சனிக்கிழமைக்குத் தேதியும் குறித்தாயிற்று. எங்கு செல்வது என்று திட்டமேதும் வகுக்கவில்லை. ஆனால் எல்லோரும் போகும் அதே வழியில் போகாமல், புதிய அறியப்படாத ரோட்டில் போகலாம் என்ற எண்ணம் உதித்தது. மேலோட்டமாக, ஹத்தா வழியாகச் சென்று ஃபுஜேரா அடைந்து, வீடு திரும்பலாம் என்பது தான் அடிப்படைத் திட்டம். நான், மகன் யோகவ், மனைவி, இரு தங்கைகள் மற்றும் என் அலுவலக நண்பன் சார்ல்ஸ். இவர்தான் காரோட்டுனர், ஏன்னா என்கிட்டதான் லைசன்ஸே இல்லியே...
ஹத்தா (Hatta)...
ஹத்தா என்பது துபாயிலிருந்து சுமார் 100கி.மி. தொலைவில் அமைந்துள்ள துபாயின் சிறிய டவுன். நம் நாட்டின் ஒப்பீட்டில் ஒரு சிறிய கிராமம் அளவில் இருக்கும் டவுன் (town), அவ்வளவே. வீட்டில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும்போது, சிறிய அளவில் மட்டும் பெட்ரோல் அடித்துக்கொண்டு கிளம்பினோம். இத்தனை தொலைவு செல்லும்போது கார் பெட்ரோல் டேங்க் முழுதும் நிரப்பிக் கொண்டு செல்வதுதானே உத்தமம் என்று நீங்க சொல்வது கேட்கிறது. இதற்கான விடை நீங்களே பின்பு அறிவீர்கள். அதுவரை உங்கள் யூகத்திற்கு விடுகிறேன்.
இந்த சிறிய டவுனுக்கா இத்தனை தூரம் போக வேண்டும் என நினைத்தீர்களா? ஹத்தா சிறப்பு என்னவென்றால், இது பலப்பல சின்னஞ்சிறு ’ஹஜ்ஜார்’ எனும் மலைகளால் சூழ்ந்த ஒரு ரம்மியமான பகுதி. மேலும் துபாய் இருக்கும் கடல் மட்டத்தைவிட, மேல இருப்பதால் சீதோஷ்ன நிலையும் நன்றாக இருக்கும். மொட்டை மலைகளாக இருந்தாலும் நல்ல காற்று வீசும் ஊர்.
ஹஜ்ஜார் எனும் சிசின்னஞ்சிறுமலைகள் |
Desert Safari Ride |
ஹத்தா போகும் வழியில் - பாலைவனம் |
ரோட்டோரமாக வந்த ஒட்டகங்கள் |
ஒட்டகத்தை பார்த்து ரசிக்கும் யோகவ் |
பின்பு பயனத்தை ஹத்தாவிற்கு தொடர்ந்தோம். வழி நெடுகிலும் என் மகன் யோகவ், அப்பா ஒட்டகம், இப்படி சாப்பிடுகிறது, நான் அதை தொட்டேனே என்று ஒரே கலாட்டா, நம் காதுகள் செவுடாகும் வரை. :) :) :) ஹத்தா ஊரை நெருங்குவதற்கு 15கி.மி. முன், போலீஸ் இடைமறிந்த்தார்கள். பயம் வேண்டாம். அது ஓமன் நாட்டின் எல்லை. ஹத்தா ஊரை சென்றடைய ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும். ஒரே குழப்பமாக இருக்கிறதா, இது துபாயின் டவுன் என்று சொன்னேன் என்று?
இந்த ஊரின் புவியியல் அமைப்பு அப்படி. ரோடு வழியாகச் சொல்லும் போது, ஒரு சிறிய பகுதி ஓமன் நாட்டிற்கு சொந்தமானது. ஆகையால் நம் எமிரேட்ஸ் ஐடி கார்டை காட்டிவிட்டு, பயனத்தை தொடரலாம். உங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக மேப் படத்தை தருகிறேன், காணுங்கள்.
பத்தி அதிகமாக வருவதால், பகுதி பகுடியாக தொடர்கிறேன், உங்கள் விருப்பம், ஆதரவு இருக்கும் பட்சத்தில்.
ராஜ் சிவா அண்ணனுக்கும், ராதிகா & பிரகாஷ் ஸ்ரீகந்தன் அவ்ர்களுக்கும் என் நன்றிகள்
பதிலளிநீக்குஅருமையோ அருமை......... நீங்க அப்டிக்கா போனா,,,,,,நான் பிப்டிக்கா துபாய் மாலில் கொண்டாடினேன்(வளைத்து வளைத்து சைட் அடித்தேன் என்பது தான் உண்மை).........
பதிலளிநீக்குhahahhahaha... நயவஞ்சகன்... என்னை விட்டுவிட்டு சைட் அடிக்கிறான்... :)
பதிலளிநீக்கு