'The Princess: A True Story of Life Behind the Veil in Saudi Arabia' by Jean Sasson
இப்புத்தகத்தை டுபஜார் எனும் ஆன்லைன் புத்தக வெப்சைட்டில் தான் முதலில் கண்டேன். அதன் சிறுகுறிப்பில், ‘ஒரு சவுதி நாட்டு இளவரசியின் சுயசரிதை’ என்று படித்தேன். நம் எல்லோருக்கும் இருக்கும் கியூரியாசிட்டி, பிரபலங்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்குமே...!! அதன் பயனாக எனது ஆவல் பீறிட்டு வந்தது...
மேலும், மண்டைக்குள் சவுதி நாட்டின் சட்டதிட்டம் மிகக்கடுமையாச்சே..!! அது எப்படி? சவுதி நாட்டில் இருக்கும் ஒரு அரபி பேசும் இளவரசி, அமேரிக்க நாட்டு எழுத்தாளருடன் தன் எண்ணங்களை பகிர்ந்து, எப்படி எழுத முடியுமென்று.(ராஜ பரம்பரையில் உள்ளவர்களை சுற்றி பல குண்டா தடியன்கள், அதாங்க பாடி கார்ட் இருப்பாங்களே). ஒரு வேலை அப்படி எழுதிவிட்டு, எப்படி இந்த இருவரும் அங்கு உயிர் வாழ முடியும்? என்பது அடுத்த கேள்வியாக தோண்றியது.... இக்காரணிகளே இப்புத்தகத்தை வாங்க பேராவலை தூண்டியது.
எழுத்தாளரை பற்றி
சுல்தானா என்ற இளவரசியின் கதையை உள்வாங்கி எழுதிய ஜீன் சேஷன், ஒரு அமேரிக்க பெண் எழுத்தாளர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவரின் ஸ்டைல், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்களின் உண்மைக் கதைகளை மையமாக கொண்டதாக இருக்கும். இது வரை 11 புத்தகங்கள் எழுதியள்ளார் என நினைக்கிறேன், அனைத்தும் இப்பகுதிகளில் வாழும் பெண்களின் போராட்ட வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவைகளே....
சதாம் உஷேன் படைகளிடம் அகப்பட்ட பெண்ணின் கதை, குவைத் போரில் சீரழிந்த பெண்னின் கதை, சுல்தானா இளவரசியின் வாழ்க்கை தொடர்ச்சுயாக 3 புத்தகங்கள், ஒசாமா பின் லேடனின் மகன் பற்றிய கதை (Growing up with Bin Laden) என ஏராளம்...
புத்தகம் படிக்கும் முன் என் எண்ணம்
இதுநாள் வரை, துபாயில் பர்தா அணிந்து நம்மை கடந்து போகும் அரபி பெண்களை பார்த்தால்.... இவர்களுக்கென்ன ராஜ வாழ்க்கை, சொகுசு பங்களா, ஹ்ம்ம் என்றால் ஓடி வந்து வேலை செய்ய பல ஆட்கள், பணக்கஷ்டம் என்றால் என்னவெண்று தெரியாத ஒரு ஆடம்பர வாழ்வு, என கண்டு வியந்துள்ளேன், இல்லை இல்லை பெருமூச்சு விட்டுள்ளேன் இதுநாள் வரை... இந்த புத்தகமும் அவ்வாறான ஒரு ஆடம்பர வாழ்க்கை முறையை கூறும் என்று நினைத்த எனக்கு, படிக்க படிக்க பல்வேறு திடுக் திடுக் ஷாக்...!!
நம்மையும் அறியாமல் சில நேரம் கோபம் பொத்துக்கொண்டு வருமே, அது போல ஒரு தருணம்... என்ன மாதிரி சமூகம்டா இது..? என்ன வாழ்க்கைபா இது ? சுதந்திரமே கிடையாதா? பெண்கள் என்ன கொத்தடிமைகளா?? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு? வெளிநாட்டவர்களுக்கும் இவ்வளவு ஜீரனிக்க முடியா கஷ்டங்களா? இன்னும் பலப்பல கேள்வி கணைகள் உங்களை நிச்சயம் போட்டு பிராண்டும், இந்த புத்தகத்தை படித்தால்.... சரி புத்தகத்தினுள் இனி செல்வோம்.
முதல் முடிச்சு
எனது முதல் கேள்வியான, இது எப்படி சாத்தியம் என்பதற்கு எழுத்தாளரின் குறிப்பிலேயே விடை கிடைத்தது. இவர் 1978ஆம் ஆண்டு சவுதியில் வேலை நிமித்தமாக செல்கிறார். தொடர்ந்து 4 ஆண்டுகள் King Faisal Specialist Hospital என்ற ஆஸ்பத்திரியில் உயர்ந்த நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். அதன் மூலமாக பல அரச குடும்பத்தினரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களின் நலன்விரும்பியாகவும் மாறுகிறார். அதன் பொருட்டு சில விருந்துகளில் பங்கேற்கையில் 1982ல் சுல்தானாவிடம் பழக்கம் ஏற்படுகிறது. 9 வருடம் நட்பின் நம்பகத்தன்மை காரணமாக சுல்தானா என்ற இளவரசி, தன் கதையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலை தெரிவிக்கிறார். நிர்பந்தத்தின் பயனாக கதை எழுத தீர்மானித்து அனைத்து தகவல்களையும் கோர்க்கிறார்.
ஆனால் இவையனைத்தும், அரச குடும்பத்திற்கு தெரிந்தால் மொத்த ஆட்களும் காலி. அதனால் புத்தகத்தில் குறிப்பிடும் அனைத்து பெயர்களும் புனைப்பெயர்களே...சுல்தானா உட்பட. ஆனால சம்பவங்கள், காட்சிகள் உண்மையானவை.
மேலும், எழுத்தாளரின் நட்புகள், நெருங்கிய வட்டம் என அனைவரும் சவுதி நாட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து 1991ஆம் ஆண்டு, இவரும் சவுதியை விட்டு அமேரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கிறார். அங்கு சென்றடைந்தபின் தான், முழு புத்தகத்தை 4, 5 மாதத்தில் எழுதி பதிப்பிக்கிறார்.
அப்போ சுல்தானாவின் கதி ?? என்ற கேள்வி வரும் உங்க மனதில்.. எனக்கும் தான், அதற்கான பதில் இறுதியில்..
சுல்தானா - இளவரசி
21,000 அரச உறுப்பினர்கள் (மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அவர்களின் வாரிகல், கிளைகல் என) உள்ள மாபெரும் அரச பரம்பரையில் வாழும் ஒரு பெண். தன் பால்ய நாட்களில் தொடங்கி தான் சந்தித்துவந்த இன்னல்களை, வாழ்க்கை முறையை நமக்கு அப்படியே அப்பட்டமாக தோலுறித்து காட்டுகிறது.
சுல்தானா, சிறுவயதிலிருந்தே மிகமிக துடிக்கானவள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள், பழமைகளை அகற்றி புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். ஆனால் இதை சாத்தியப்படுத்துவது அரிதான் ஒன்று. ஏனெனில் தான் வாழ்வது இரும்புக்கோட்டைக்குள், ஆணாதிக்கம் மிகுந்த ஒரு நாட்டில், சமூகத்தில்....
தன் சகோதரனுக்கு கிடைக்கும் கவனிப்பு, மரியாதை பெண்ணாக பிறந்ததால் இவளுக்கு கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே அவனை வெறுக்க ஆரம்பிக்கிறாள்...
குடும்பத்தின் ஆண் தான் அனைத்தையும் தீர்பானிக்கும் நபர். பெண் என்பவளுக்கு பேசவோ, தன் கருத்தை சொல்லவோ அனுமதியில்லை. அதே போல் பெண்களின் தலையாய கடமை தகப்பனுக்கு, கணவனுக்கு அடிப்பனிந்து செல்வதே. திருமணமான பெண், தன் கணவனின் இச்சைகளுக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் தலையாய கடமை, பிள்ளை பெற்று தருவதே... அதிலும் ஆண் பிள்ளைகள் தான் பெற்று தர வேண்டும். பெண் பிள்ளை பெற்றால் இளக்காரமாக பார்க்கும் சமூகம்.... ஆண் பிள்ளைகள் பெரும் பெண்களுக்கு தான் கணவனின் சிறப்பு கவனிப்பு என இன்னும் நிறைய இருக்கிறது.
அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக என்னை திடுக்கிட்ட சம்பவங்களை ஒன்றின் பின் ஒன்றாக தொகுக்கிறேன்.

மிக குறைந்த அளவாக உள்ளது பதிவு......இன்னும் நீட்டலாம் என்று நினைக்கிறேன்....
பதிலளிநீக்குஇது பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறேன்......
படிக்க ஆவலாக உள்ளேன்.......இவர்களின் கலாச்சாரத்தை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்......
வாழ்த்துகள் தொடரவும்ம்ம்
மிக்க நன்றி. என் எழுதும் பேட்டர்னை மாற்றி விட்டேன், இரண்டாவது பகுதியில்...
நீக்கு