எனது பார்வையில் இந்தியன் ரூபீ - மலையாள படம்
நமது நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை பின்பிலமாக கொண்ட படம்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இதை கதைக்களமாக கொண்டு ஒரு முழுப்படத்தை எடுக்க முடியுமா? நினைத்து பார்த்தால், மலைப்பே மிஞ்சும். இதை வெற்றியாக்கியதில் தான் இயக்குனரின் சாமர்த்தியம், திறமையுள்ளது. வெறும் வெற்றியோடு நில்லாமல், அந்த ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகரின் விருது பிரித்விராஜ்க்கும், பிராந்திய மொழிப் பிரிவில் தேசிய விருதும் பெற்றத்தந்த அருமையான படம்.
மிகவும் எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை. ஸ்கூல் டிராப்-அவுடான பிரித்விராஜூம் அவர் நண்பரும் கோழிக்கோட்டில் ஒரு பெரும் ரியல் எஸ்டேட்டின் சப்-பிரோக்கராக இருப்பவர்கள். நாமும் வெகுவிரைவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக ஆவோம் என பெரும் கனவுகளுடன் இருக்கும் நம்மை போல ஒரு சராசரி இளைஞன். ஆனால் நிஜத்தில் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் ஆள்.
ஒரு திணிக்கப்பட்ட காட்சி, டிவிஸ்டும் இல்லாத படம். தெளிந்த நீரோடையாக அதன் போக்கிலேயே பயனிக்கும் திரைக்கதை. சிறு பிரோக்கர்கள் சந்த்திக்கும் தொழில் போட்டி, அவ்வூரில் இருக்கும் பெரும் முதலையுடன் நடக்கும் உள்குத்துக்கள், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியா இயலாமை, அவர்களின் ஆதிக்கம் என நாம் நிஜத்தில் பார்க்கும் அத்தனை விஷயமும் அச்சுஅசலாக நம் கண்முன்னே விரிகிறது. நிச்சயம், அட ஆமாம்ல என போட வைக்கும்.
திலகன், இவர்களிடத்தில் தன் சொத்தை விற்க அணுகும்போது படம் சூடுப்பிடிக்கிறது. தன்னுடைய நிலம், கடைசி நேர சட்டசிக்களால் விற்க முடியாமல் போனாலும், இவர்களுடன் ஏற்படும் நட்பால் பிரித்விராஜுடனே தங்குகிறார். மேலும் திலகன் தரும் டிப்ஸ்களால், இவர்கள் தொழிலில் அடையும் முன்னேற்றம் என அத்தனையும் சுவாரஸ்யம்.
வித்தியாசமான குணம் கொண்ட ஜெகதி ஷாப்பிங் மால் கட்டி விற்பவர். அவரிடம் ஷாப்பிங் மாலை தனக்கென (பவர்) வாங்கி, கைமாற்றி காசு பார்க்க துடிக்கும் துடிப்பும், அதற்கான தான் மற்றும் தன் கூட்டாளி, திலகன் மேற்கொள்ளும் யுத்திகளும் தான் படம்.
நான் இந்த படம் பார்த்து ஏறக்குறைய 3-4 மாதங்களாகிவிட்டது. இன்னும் என்னில் அதன் தாக்கும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியில் வரும் டிவிஸ்ட்கள் அருமையோ அருமை. அவ்வளவு இயல்பாக கதையில் பொருந்துகிறது. அது என்னவென்று சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமாதலால் கூறவில்லை. நீங்களே கண்டு மகுழுங்கள்.
வர வர திலகன் மேல் தீரா காதல் வந்துவிடும் போல எனக்கு. என்னா ஒரு பிறவி நடிகன்யா...!!!! நாம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவரைப்பற்றி சொல்லும்போதே ஒரு பூரிப்படைகிறேன். வர்ணிக்க வார்த்தையே இல்லை. சிவாஜியை அசால்ட்டா தூக்கி ஏப்பம் விட்டிருவார் மனுஷன்...!! ஒரு துளிக்கூட நடிக்கிறார் என்று நாம் உணரவே மாட்டோம், அப்படியான ஒரு திறமை. இவர் மறைந்தாலும், இவர் புகழ் என்றும் அழியப்போவதில்லை.
கண்டிப்பாக பாருங்கள் என பரிந்துரைக்கிறேன். படத்தின் இறுதியில் நீங்களும், இதன் நிதர்சனத்தை உணர்வீர்கள். ஏன் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பதை மனதார ஒத்துக்கொள்வீர்கள்.

அருமையான விமர்சனம் ......படத்தின் எந்த காட்சியை பற்றியும் சொல்லாமல் படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்...
பதிலளிநீக்குநன்றிடா தம்பி... நீ சொல்லும்போது தான், அடா ஆமாம்ல என்று எனக்கே தோன்றுகிறது
பதிலளிநீக்கு