ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஒரு மிக்கிய பதிவு - இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு
பல நாட்கள் இதை உங்களிடம் பகிர வேண்டும் என்று இருந்தேன், ஆனால் ஏனோ தள்ளிக்கொண்டே போனது. புத்தாண்டை முன்னிட்டு இப்போ ரிலீஸ். அனைவருக்கும் உபயோகம் உள்ள செய்தி. இன்சூரன்ஸ் பற்றி தான் பேச நினைத்தேன்.

நம்மில் பலபேர் இன்சூரன்ஸ் மற்றும் முதலீட்டை ஒன்றென்று குழப்பிக்கொள்கிறோம்.. ரெண்டும் வேறுவேறு. முதலில் இன்சூரன்ஸ் என்பது நமக்கு அசம்பாவிதம் நேரும் பொழுது, நம் குடும்பத்தின் பண தேவையை எந்த நிர்பந்தம் இல்லாமல் கடன் சூழலில் சிக்காமல் எளிதில் பூர்த்தி செய்ய உதவும் ஒரு திட்டம் என்பதை நினைவில் சொல்லுங்கள். இது ஒரு வரப்பிரசாதம். ஆகவே முதலீடு அன்று. முதலீடு என்பது நம் பணம் அதன் அசலை விட நமக்கு லாபம் தரும் பொருட்டு போடுவது. ஆகவே முதலீடுக்காக இன்சூரன்சில் பணத்தை போட வேண்டாம்.

இன்சூரன்சில் பல திட்டம் இருந்தாலும், நான் இங்கு சொல்லப்போவது நம் அத்தியாவசிய தேவையை பூர்தி செய்யும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி தான். நம் எல்லோருக்கும் குடும்ப நிதித் திட்டமிடல் கட்டாயம் தேவை.நாம் நல்லதே நினைப்போம். இருப்பினும், நம் குடும்பத்தின் நலம் நம் எல்லோருக்கும் மிக முக்கியம் என்பதால் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது சாலச் சிறந்தது.

டெர்ம் இன்சூரன்ஸ் என்பது நமக்கு அசம்பாவிதம் நேரும் பொழுது, நமது குடும்பத்துக்கு அதன் முழு தொகை போய் சேரும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், ஒரு பத்து லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்கு நாம் வருடம் 2000 -2500 ருபாய் வருடம் தோறும் கட்டினால் போதுமானது. இதில் முதிர்வு தொகை கிடைக்காது. முழுக்க முழுக்க ரிஸ்க் சார்ந்த இன்சூரன்ஸ். நம்மில் பலபேர் முதிர்வு தொகை எதிர் நோக்கி இத்தகைய திட்டத்தை தேர்ந்தெடுக்க தயங்குகிறோம். இதுதான் நாம் செய்யும் தப்பு. ஒரு 1000 ரூபாய் தொகைக்கு நமக்கு 10 லட்சம் தரும் பொழுது, இதை எடுக்க தயங்க கூடாது.

தேவை இல்லாமல் நிறைய பணத்தை இன்சூரன்சில் போடுவதை நிறுத்தவும். மீதி உள்ள எல்லா பணத்தையும், ஒரு fixed டேபோசிடிலோ, ஸ்டாக் மார்க்கெட் அல்லது மூசுவல் பண்டிலோ போட்டு உங்கள் முதலீட்டை பெருக்கவும். இதுவே சிறந்த முறையாகும்.

ஒரு சந்தேகம் வரலாம். ஒருவர் எவ்வளவு தொகை ரிஸ்க் இன்சூரன்சில் எடுக்க வேண்டும் என்று. ஒரு எளிய முறை. நம் வருட வருமானத்தை 10 மடங்காக பெருக்க வேண்டும். இதுவே நாம் எடுக்க வேண்டிய டெர்ம் இன்சூரன்ஸ் தொகை.

இப்பதிவு உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். வெறும் படித்து லைக் போடாமல், இதை செயல் படுத்தி உங்கள் குடும்ப நிதி தேவையை சரியாக திட்டமிடுங்கள். பயன் பெறுங்கள். உங்கள் ஐயங்களை தெரிவியுங்கள், நான் அதை தெளிவு படுத்த முயற்சிக்கிறேன்.

குறிப்பு - நான் இன்சூரன்ஸ் agent அல்ல. உங்களிடம் மார்க்கெட் செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக