ஞாயிறு, 15 ஜனவரி, 2012

துபாய்


துபாய் - ஒரு மொக்கை டாகுமெண்டரி அட்டெம்ப்ட் - ஹரி - Part- 1


துபாய் என்றால் நம் ஊரில் பெரும்பாலானோர் மண்டை குழப்பிகொள்கிரார்கள். துபாய், சவுதி, ஓமான், பஹ்ரைன், கத்தார் எல்லாம் ஒன்றென்று. உண்மையில் எல்லாம் வேறு வேறு அண்டைய நாடுகள்.

தப்பு செய்தால் மனுஷனை வெட்டிடுவாங்க, ஆண்கள் கவலை - சரக்கு கிடைக்காது (அவர்கள் கவலை அவர்களுக்கு), பெண்கள் பர்தா அணிய வேண்டும், சைட் அடிக்க முடியாது, பொண்ணுங்க கிட்ட பேசுனா சவுக்கு அடி... ரூல்ஸ் மிக கடுமையாக இருக்கும், இன்னும் எத்தனையோ விஷயங்கள்...இப்படி எல்லாம் மனுஷன் வாழ முடியாதென்று, வரவே பயப்படுகிறார்கள்.

நிஜத்தில் துபாய் முற்றிலும் மாறுபட்ட ஊர், ஆனால் தனி மனித ஒழுக்கம் அபாரம். சுதந்திரம் என்றால் என்னவென்று இங்கு அறியலாம். சுதந்திரம் உங்கள் கையின் நுனி வரை என்று யாரோ ஒருத்தர் சொன்னதா நியாபகம். நீங்கள் அடுத்தவரை சீண்ட கூடாது. சீண்டாமல் நீங்கள் எல்லாம் செய்து சொல்லலாம்.

மற்றொரு குழப்பம், துபாய் ஊரா அல்லது தனி நாடா என்பது...??? துபாய் தனி நாடல்ல, துபாய் என்பது ஐக்கிய அரபு நாட்டின் ஒரு ஊர் (அங்கம்).

ஐக்கிய அரபு நாடு என்பது 7 பிராந்தியம் அல்லது ஊர்கள் அடங்கிய நாடு. அபு தாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜேரா, ராஸ்-அல்-கைமா, உம்-அல்-குயன் ஆகியவை அந்த ஊர்கள். அபு தாபி இந்த நாட்டின் தலை நகரம்.

நான் சொல்லபோவது இந்த நாட்டின் அரசியல் பற்றியோ, வரலாறு பற்றியோ, புவியியல் பற்றியோ நிச்சியமாக கிடையாது. நம்மக்கு தேவை யான சமாச்சாரங்கள் மட்டுமே.

இனி நான் சொல்லபோவது துபாய் பற்றிய தொகுப்பு மட்டுமே. இது ஒரு சொர்க்க பூமி. எல்லா தரப்பினர்க்கும் அவர்கள் விரும்பும்படி இருக்கும் versatile ஊர். டூரிஸ்ட்களுக்கு நிறைய புதிய புதிய இடங்கள், பார்த்து வியக்கும் விஷயங்கள், குடும்பஸ்தர்களுக்கு amusement நிறைந்த பொழுதுபோக்கு ஸ்தலங்கள்,தேசேர்ட் சபாரி, டோவ் க்ரூஸ், ஐஸ் skeing, நூற்றுக்கணக்கான மால்கள், ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தனித்துவம் பெற்றது, பேச்சுலர்களுக்கு இரவு வாழ்கை, பப், டான்ஸ் பார், (தமிழ் டான்ஸ் பாரும் உண்டு), ஐஸ் பார் (முழுவதும் ஐஸ்ல செஞ்ச ஹோட்டல்), சைட் அடிக்க வித விதமான நாட்டு பெண்கள், டிரெஸ்ஸிங் ஸ்டைல், (ஒரே குஜால்ஸ் தான்). தேசேர்ட் சபாரி, வித்தியாசமான மால்கள், பெண்களுக்கு தங்கநகை மார்க்கெட், அழகு சாதனம் கொட்டி கிடைக்கும் இடங்கள், விதவிதமான ஆடைகள், விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் கிடைக்கும் அறிய ஊர்.
துபாய் - பார்ட்-2
என்னை மீண்டும் எழுத தூண்டிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

முக்கிய குறிப்பு : நான் முதல் பாகத்தில் சொன்ன சமாச்சாரங்கள் எல்லாம்
துபாய்க்கு (UAE ) மட்டும் தான் பொருந்தும். பஹ்ரைன் நாட்டில் கூட ப்ரிச்சனை இல்லை.

ஆனால் நீங்கள் சவுதியில் செய்தால் பிறகு
கம்பெனி பொறுப்பல்ல. அங்கு வெட்டு நிச்சயம் !!!. (ஏக் மார் தோ துக்கடா தான்) சுருக்கமாக சவுதி ஒரு வனவாச துறவி வாழ்க்கை போன்றது. குஷ்டம் டா சாமி அங்க...!!! அப்புறம் ஹரி சொன்னமாரி இங்க ஒன்னுமே இல்லன்னு அழக்கூடாது.

டவுட் கிளியர் பண்றேன் - மிஸ்கின் சார் க்கு - துபாய் அரசரின் அரச
மாளிகையை ஹோட்டல் ஆக்கி விவிஐபிக்கள் தங்கும் இடமாக ஆக்கவில்லை சார். எனக்கு தெரிந்த மட்டும் அப்படி ஒன்றும் இங்கு உருவாக்கவில்லை சார்.

துபாய் என்றால் நம் மனதில் தோன்றும் சில விஷயங்கள். (அல்லது துபாயின் சிறப்புகள்.)

1.
வரி இல்லா நாடு. நாம் வாங்கும் சம்பளம் முழுவதும் நமக்கே. Income tax என்ற ப்ரிச்சனையே இல்லை.
(
ஆனால் இந்த ஊர் மாம்ஸ் ரொம்ப மோசம். நம்ம ஊரு புள்ளைபிடிக்கிரவனை விட கில்லாடிகள். எப்படித்தான் ஒளிஞ்சு இருந்து அபராதம் போடுவானோ.. ??? பார்கிங் பைன், லேட் பைன், ரோடு violation பைன்..இன்னும் லொட்டு லொசுக்கு என்று.. விரிவாக பின்னாடி பாப்போம்)
2.
உலகத்தின் மிக உயரமான பில்டிங் Burj Khalifa
3.
உலகின் மிகப்பெரிய பிரசத்தி பெற்ற வாட்டர் பௌண்டைன் (fountain) டான்ஸ்.
4.
உலகத்தின் ஒரே 7 ஸ்டார் ஹோட்டல் புர்ஜ்-அல்-அராப் இருக்கும் ஊர்
5.
கடல் நடுவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஐலன்ட்கள் (பாம் ஜுமேரா (பனை மாற வடிவில் இருக்கும் ஐலன்ட், வோல்ர்ட் ஐலன்ட் - உலக வரைப்படம் போன்று தோற்றமளிக்கும் ஐலன்ட்)
6.
ஷாப்பிங் செய்ய உகந்த இடம் (ஏராளமான மால்கள்)
7.
உலகத்தின் அதிவேகமாக வளரும் ஊர்களில் ஒன்று
8.
உலகின் பெரிய மீன் தொட்டி... (துபாய் அகோறியும் - இந்த சின்ன தொட்டியில் 3 சுறா, 33 ,000 உயிரினங்கள் உயிர் வாழ்கிறது, அம்புட்டுதான்.)
9. Desert safari &
பெல்லி டான்ஸ்
10.
உலகின் நீண்ட ஆளிலா தானியங்கி ரயில் (75 கி.மீ )
11.
உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் (மற்றும் அதிகமான பார்கிங் வசதி கொண்ட மால்)
12.
தங்க நகை மார்கெட் உள்ள இடம்.

இன்னும் நிறைய உள்ளது.


டூரிஸ்ட் இடங்கள்,
அதன் சிறப்புகள், தவிர்க்க கூடா இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், இரவு வாழ்க்கை, உணவு முறை, காஸ்ட் அப் லிவிங், ஏற்படும் சில சங்கடங்கள் பற்றி இனி ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்....
 துபாய்-பார்ட்-3 

முக்கிய குறிப்பு - இன்னைக்கு நல்ல பதமான கத்தி இல்லாத காரணத்தினால் மொக்கை கத்தியில் நான் அறுக்க வேண்டிஉள்ளது. பேச்சு பேச்சா இருக்கனும். அடிக்கவெல்லாம் கூடாது. மொக்கைக்கு நான் ரெடினா மேற்படி படிச்சு உடம்பு பூரா ரத்தம் ஆகிக்கலாம்.

மிஸ்கின் சார் பகுதி - நீங்கள் கேட்டதற்கு என்னுடைய பதில். அபுதாபியில் கூட அரசர்களின் மாளிகையை பிற்பாடு ஹோடேலாக மாற்ற வில்லை. ஒருவேளை நீங்கள் கூறுவது, நிச்சயம் இதுவாக தான் இருக்கும் என யூகிக்கிறேன். அபு தாபியில் 'எமிரேட்ஸ் பேலஸ்' ஒன்று ஒரு ஹோட்டல் உள்ளது. (இது அரசர்களின் அரச மாளிகை அல்ல.) மாறாக அரசர்களின் மாளிகைப்போல் வடிவமைக்கப்பட்ட நட்சத்ர ஹோட்டல், அபுதாபி அரசால் கட்டப்பட்டது. இப்பொழுது கேம்பென்ஸ்கி என்னும் புகழ்பெற்ற ஹோட்டல் நிறுவனம் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. உலகத்தின் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட ஹோடேல்களில் இரண்டாம் இடம் இதன் சிறப்பு. (சுமார் 13,200 கோடிகள்). இங்கு பேலஸ் கிராண்ட் சூட் ரூமில், ஒரு நாள் தங்க வாடகை சுமார் 7 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும்.

 எமிரேட்ஸ் பேலஸ்


 Grande சூட்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. உலகின் பணக்காரகளின் பட்டியலில் இந்த அரசர்கள் தான் முதல் இடம் வகிக்கவேண்டும் . ஆனால், இவர்களை தனி நபர் சம்பாத்தியமாக கணக்கில் கொள்ளவில்லை, அந்த குழுவினர் . இது ஒரு அரசின் கஜானா தொகையாக கருதினர். ஆகையால் பில் கேட்ஸ் மற்றும் பிறர் முதல் இடத்தில உள்ளனர். அவ்வளவே...


துபாய்-பார்ட்-4


துபாய் டூரிஸ்ட் இடங்கள்,
இதன் சிறப்புகள் சொல்வதற்கு முன்னால், இந்த மேட்டரை சொல்லவில்லை என்றால் உம்மாச்சி கண்ணை குத்தும். சாமிகுத்தம் ஆய்டும் சாமியோவ். சோ நான் சொல்லவந்தது இந்த ஊரின் மவ ராசன் மற்றும் அரச குடும்பத்தைப்பற்றி குலிக்கூண்டு பார்த்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.

இப்பொழுது இருக்கின்ற துபாயின் அசுர
வளர்ச்சிக்கு முழுமுதற் காரணம் தற்போதுள்ள மவராசன் "ஷேக் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம்". இவர்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி. டூ-இன்-ஒன் மாமு...ஆனா, இதுக்கு எல்லாத்துக்கும் மேல, துபாய் ஊரின் ஆட்சியாளராக, அரசராக உள்ளார்.

சரி,
விஷயத்துக்கு வருவோம், மொக்கை போதும். துபாயின் வளர்ச்சி இப்பாலிக்க... ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி இவர் மற்றும் அவரது அரசாங்க ஆலோசகர்கள், துபாய் விரைவில் எண்ணெய் காலி சாமியோவ் என்பதை உணர்ந்தனர் (எண்ணெய் துபாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பெரிய பங்கு இல்லை). அபு தபி தான் ஊருக்கெல்லாம் படியளக்கும் எண்ணெய் தெய்வம்.

உட்காச்சி நைட்டு புள்ள யோசிச்சாங்க.... டக்குன்னு ஒரு பல்பு எரிஞ்சது.
எப்படியும் வர்த்தகம் அல்லது அதை போன்றவை நிச்சயம் ஒருசமயத்தில் உச்சம் பெறுமென்று. எனவே நம் மவராசன் ஷேக், துபாய் கென்று ஒரு மாதிரி வடிவம் தயாரித்தார்கள். அதான் ப்பா மாஸ்டர் பிளான்... பல்வேறு வர்த்தக துறையில் துபாய் உலக நாட்டை எப்படியெல்லாம் ஷோக்கா இழுக்கலாம் என்று..

இன்னும் இருக்கு..(இன்று மாலை போடுகிறேன் உங்கள் ஆதரவு தொடரும் என்றால்...)


இதுக்காக நாம் வீட்டை கட்ட,
இருக்கிற பைசா எல்லாம் எடுத்து முழி பிதுங்குவோமே , அப்படி அவர் எல்லா சொத்தையும், இருப்புக்கள் எடுத்தார்... துபாய் ஊரை, சுற்றுலா மற்றும் விளையாட்டு நகரமாக பல்முனை கொண்ட ஊராக மாற்ற...நம்மெல்லாம் வீடு கட்டுன்னா, இந்த மவராசன் ஊரை கட்டுரான்ப்பா... அம்புட்டுதான்...

துபாய் - பார்ட் 5


முன்னாடி சொன்னதுபோல் நம்ம மவராசன் ஷேக்,
சுற்றுலா மற்றும் விளையாட்டு மேம்படுத்தும் திட்டத்தினை முன்னிறுத்தி பல்வேறு கட்டிடங்கள், எதிலும் முன்னோடியாக திகழும் வண்ணம் நிறைய புதிய யோசனைகள் என்று பக்கா பிளான் தீட்டினார்கள்....

இதன் காரணமாக,
துபாயில் வணிகம் செய்யும் வாய்ப்பை உணர்ந்து பல வெளிநாட்டவர்கள் வர ஈர்த்தது. நம்ம நைனா, உடனே அட நம்ம நினைச்சதை விட மௌஸ் கூட இருக்கேன்னு, இங்கு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு வரி கிடையாது, மற்றும் பல்வேறு வகையான சலுகைகளை வாரி வழங்கினார். அப்பாலிக்க என்ன, ராக்கெட் வேகத்தில் துபாய் வளர துடங்கியது.

மிஸ்கின் பகுதி : மவராசன் ஷேக் பற்றி சில ருசிகர தகவல்கள். முன்பு கூறியது
போல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்ற நாட்டில் துபாய், ஷர்ஜா, அபு தாபி, உம்-அல்-குயன், ராஸ்-அல்-கைமா, புஜேரா, அஜ்மான் ஆகிய 7 ஊர்கள் இருக்கிறது. 1971 ஆண்டுக்கு முன்பு வரை இந்த 7 ஊர்களும், 7 குட்டி நாடுகளாக இருந்தது. 1971 ஆம் இறுதியில் இந்த 7 நாட்டு ராஜாக்களும் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்ற நாட்டை உருவாகினார்கள்.

இருப்பினும் இன்றும் இந்த
ஏழு ஊருக்கும் அந்தந்த ராஜாக்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள எல்லையும் அப்படியே இருக்கிறது. அவரவர் ஊரின் சம்பாத்யம் அந்த அரசர்களுக்கு. ஆகையால் தான் துபாய், அபு தாபி உலகிற்கு அறிந்த மட்டும் மற்ற ஊர்கள் அறியப்படவில்லை. அபு தாபியிடம் எண்ணெய் இருக்கிறது, துபாய் சுற்றுலா, வணிகம் மற்றும் விளையாட்டை முன்னிறுத்தி உலகில் தவிர்க்க முடியா இடமாக திகழ்கிறது.

இங்கு இன்றும் அரச குடும்பம் தான் ஊரை (
நாட்டை) ஆள முடியும். ஆனால், மூத்த பிள்ளைக்கு தான் இளவரசன், அடுத்த ராஜா என்ற முறை இல்லை. ராஜா, தனது புதல்வர்களில் யார் சிறப்பாக ஸ்மார்டாக,புத்திசாலியாக செய்யல்படுகிரார்களோ அவரை இனம் கண்டு அடுத்த இளவரசராக, தற்போதைய ராஜா தேர்ந்து எடுப்பார்.

இவ்வாறு துபாய்க்கு
இப்போதைய ராஜா ஷேக் முகமது, 1995 ஆம் ஆண்டில் துபாய் இளவரசன் ஆக முடிசூடினார். துபாய் அதன் பிறகுதான் மாபெரும் மாற்றம் கண்டது என்றால் அது மிகையாகாது. இவரது மூத்த மூத்த சகோதரர் இறந்த போது, இவர் 2006 ல் துபாய் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர் மற்றும் அரசர் ஆனார். கடவுள் இவர்களுகேன்று கொஞ்சூண்டு எக்ஸ்ட்ரா மூளை கொடுத்து விடுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக